வெளிநாட்டில் கணவன்.. அண்ணனுடன் மனைவி செய்த அசிங்கம்.. அந்த உறுப்பில் டேப்பை சுற்றி.. கொடூரம்..
குவைத் நகரத்தின் சூரிய வெப்பத்தால் வியர்த்துக்கொண்டிருந்த வெங்கடேசன், தன் குடும்பத்திற்காக உழைத்து சம்பாதித்த பணத்தை அனுப்பி வைத்துக்கொண்டிருந்தான். நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே பாக் கொந்தகை கிராமத்தில் வாழும் அவன் மனைவி ஜெயமாலாவிடம், கடந்த சில ஆண்டுகளாக 40 லட்சம் ரூபாய் வரை அனுப்பியிருந்தான். "இதை சேமித்து வை, குழந்தைகளுக்காக," என்று அவன் எப்போதும் கூறுவான். ஆனால், ஜெயமாலா அந்தப் பணத்தை தன் பெரியம்மா மகன் கலைச்செல்வனிடம் கொடுத்து, வட்டித் தொழிலில் முதலீடு செய்திருந்தாள். அந்த முதலீடுகள் தோல்வியடைந்தன. பணம் முற்றிலும் போய்விட்டது. பணத்தை வாங்கிய பலரும் வாங்குன காசுக்கு மேல பணம் கொடுத்துட்டோம் என கம்பி நீட்டினர். புதுவை சேர்ந்த 37 வயது கலைச்செல்வன், அண்ணன்-தங்கை உறவு என்றாலும், இருவரும் கள்ளக்காதலில் திளைக்கிறார்கள். அதிக அளவில் பணம் செலவு செய்து கொண்டு உல்லாச பறவைகளை சுற்றி வருகிறார்கள் என ஊர் பேசியது. ஊருக்கு விடுமுறைக்கு வந்த வெங்கடேசன், மனைவியிடம் கணக்கு கேட்டான். "எங்கே போச்சு நம்ம பணம்?" என்று கேள்வி எழுந்தது. ஜெயமாலா மௌனமாக இருந்தாள். வாக்குவாதம் சண்டையாக ...