பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (வயது 46) மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் தர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் காட்ஜில்லா படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தபோது, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் அவர் மயக்கமடைந்தார்.

உடனடியாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், சிகிச்சை பலனளிக்காததால் அவர் உயிரிழந்தார்.ரோபோ சங்கரின் திடீர் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரோபோ ஷங்கரின்மகள் இந்திரஜா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதன் படி, நேரம் நல்லா இல்லனா.. தேவையில்லாதவன் கூட தேவையில்லாம பேசிட்டு போவான்.." என்று எழுதியுள்ளார். இதை கவனித்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர்.
Summary: Comedian Robo Shankar, aged 46, passed away in a Chennai private hospital due to jaundice. He fainted during the shoot of Godzilla, directed by Gautham Vasudev Menon and Darshan, due to dehydration and low blood pressure. Despite ventilator support, he succumbed to his condition.

