Posts

Showing posts with the label comedian

நாகேஷ் மனைவி மர்ம மரணம் - மகனின் தோல்வி - உடைந்த நாகேஷ் - தவறான நடத்தையால் சீரழிந்த மகன்

Image
தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, குணச்சித்திர நடிகர், வில்லன், காமெடியன் என பன்முகம் காட்டிய சகலகலா வல்லவன் நாகேஷின் வாழ்க்கை குறித்து பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, "ஆகாயம் தமிழ்" யூட்யூப் சேனலில் பகிர்ந்த தகவல்கள் மூலம் அவரது ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் இறுதி கால அனுபவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆரம்ப கால வாழ்க்கை: அவமானங்களும் போராட்டங்களும் நாகேஷின் ஆரம்ப காலம் மிகவும் சவாலானதாக இருந்தது. அவரது தோற்றம் - முகத்தில் பருக்கள், ஒடுக்கமான உருவம், புகையிலை அடித்த வாய் - அந்த காலகட்டத்தில் அழகான தோற்றம் மட்டுமே சினிமாவுக்கு தகுதியாக கருதப்பட்ட சூழலில் அவருக்கு வாய்ப்புகளை பெறுவது கடினமாக இருந்தது. சென்னையில் உஸ்மான் ரோடு, சிவாவிஷ்ணு கோயில் எதிரே உள்ள ஒரு திண்ணையில் தங்கியிருந்த நாகேஷ், வாய்ப்பு தேடி வந்த பல கலைஞர்களுடன் அங்கு காலம் கழித்தார். அங்கு மோனோ ஆக்டிங் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் சிரிக்க வைத்து தங்க இடம் பெற்றார். வேட்டநாம்பேடு சுந்தரம் என்பவர் அவருக்கு காபி வாங்கி வரச் சொல்லி, கமிஷன் மூலம் பிழைப்பு தேடிக்கொள்ள அறிவ...

ரோபோ ஷங்கர் உயிரிழப்பின் பகீர் பின்னணி வெளியானது..! இதை செய்ததால் தான் இழப்பா..?

Image
மதுரையின் மண்ணில் பிறந்து, கலை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பதித்தவர் ரோபோசங்கர். 46 வயதில் அவரது மறைவு தமிழ் சினிமாவையும் கலை உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மதுரையில் மேடைக் கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கிய சங்கர், 1997ஆம் ஆண்டு சென்னைக்கு சினிமா கனவுகளுடன் வந்தார். அவரது உழைப்பும், தனித்துவமான திறமையும் அவரை ‘ரோபோசங்கர்’ என்ற பெயரில் ரசிகர்களின் இதயங்களில் நிறுத்தியது. ரோபோசங்கரின் கதை ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண பயணம். மதுரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, ஒரு நாளைக்கு 75 முட்டை வெள்ளைக்கரு உண்டு உடலை வலுப்படுத்தியவர், நடிகர் கமல்ஹாசனை தனது மானசீக குருவாக ஏற்று, உடல் முழுவதும் மெட்டல் பெயிண்ட் பூசி ரோபோ போல மேடைகளில் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்த தனித்துவமான பாணியால் ‘ரோபோசங்கர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். சினிமாவில் அவரது முதல் பயணம் ‘தர்மசக்கரம்’ படத்தில் ஒரு துணை நடிகராக கூட்டத்தில் தோன்றியது. ஆனால், அவரது உண்மையான திறமை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல குரல்களில் பேசி வெளிப்பட்டது. குறிப்பாக, விஜயகாந்தின் குரலை அப்படியே பிரதிபலித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார...

நடிகர் ரோபோ ஷங்கரின் கடைசி புகைப்படம்.. அதை கவனித்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

Image
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (வயது 46) மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் தர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் காட்ஜில்லா படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தபோது, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் அவர் மயக்கமடைந்தார். உடனடியாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனளிக்காததால் அவர் உயிரிழந்தார்.ரோபோ சங்கரின் திடீர் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரோபோ ஷங்கரின்மகள் இந்திரஜா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதன் படி, நேரம் நல்லா இல்லனா.. தேவையில்லாதவன் கூட தேவையில்லாம பேசிட்டு போவான்.." என்று எழுதியுள்ளார். இதை கவனித்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர். S...

ச்சைக்.. கன்றாவி.. அந்த நேரத்தில் உடலுறவு.. நடிகர் நாஞ்சில் விஜயன்.. ஆதாரத்தை வெளியிட்ட திருநங்கை காதலி.. பகீர் வீடியோ...

Image
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக பிரபலமான சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். புகாரின் விவரங்கள் விஜய் டிவியில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக நாஞ்சில் விஜயனுடன் காதல் உறவில் இருந்ததாகவும் திருநங்கை தனது புகாரில் தெரிவித்துள்ளார். "நாஞ்சில் விஜயன் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். ஆனால், பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார்," என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது வழக்கறிஞருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து விவரங்களைப் பகிர்ந்தார். திருநங்கையின் வேதனை செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை, "நான் வில்லிவாக்கத்தில் தனியாக வசித்து வந்தேன். அந்த வீட்டிற்கு நாஞ்சில் விஜயன் அடிக்கடி வந்து செல்வார். எங்கள் காதல் பற்றி அவரது குடும்பத்தினருக்க...

ஜமீன் பரம்பரை.. 500 ஏக்கர் சொத்து.. அனைத்தையும் இழந்த சத்யன்.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Image
தமிழ் சினிமாவில் தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் காமெடி நடிகர் சத்யன். இளையராஜாவின் இசையில் வெளியான இளையவன் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், ஹீரோவாக பெரிய வரவேற்பு பெறாததால் காமெடி நடிகராக மாறினார்.  நண்பன், துப்பாக்கி, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சத்யன் குறித்து அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலாஜி பிரபு தனது பேட்டியில், சத்யனின் தந்தை மாதம்பட்டி சிவக்குமார் ஒரு பெரும் ஜமீன்தார் என்றும், 5 ஏக்கர் வீடு, 500 ஏக்கர் தோப்பு உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான சொத்துகளுக்கு சொந்தக்காரர் என்றும் தெரிவித்தார்.  மாதம்பட்டியில் சிவக்குமாரை ‘ராஜா’ என்றும், சத்யனை ‘குட்டி ராஜா’ என்றும் அழைப்பார்களாம். சினிமா மீது கொண்ட காதலால் படத் தயாரிப்பில் இறங்கிய சிவக்குமார், தான் தயாரித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.  இதனால், சொத்துகளை விற்று படங்களைத் தயாரித்தார். ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிவக்க...