மும்பை ரெட் லைட் மாதிரி..சென்னையில கிரீன் லைட்.! போலீஸும் கஸ்டமர் தான் - லீக் ஆன அந்தரங்கம்!

சென்னை, செப்டம்பர் 25 : வெளியில் டீசன்டான அப்பார்ட்மெண்ட் போல தெரிந்தாலும், உள்ளே நார்த் இந்தியா, சவுத் இந்தியா, மலையாளம் என வகைவகையான இளம் பெண்களுடன் படுதோராக நடக்கும் தடை செய்யப்பட்ட பாலியல் தொழில்!

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட இந்த சட்டவிரோத வியாபாரம், சென்னை அண்ணாநகர் அருகே உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் கனஜோராக இயங்கி வருவதாக பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சி 'நியூஸ் தமிழ் 24x7' ரகசிய அழைப்பின் அடிப்படையில் விசாரணை நடத்தியது.

செய்தியாளர் ஜபர்சன் தலைமையிலான குழு நேரடியாக அந்த இடத்திற்குச் சென்று, உள்ளே நடக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது.வெளியில் சாதாரண அப்பார்ட்மெண்ட் போல காட்சியளிக்கும் இந்த மசாஜ் சென்டர், உள்ளே நுழைந்தால் முற்றிலும் வேறுபட்ட முகம்.

நல்ல இன்டீரியர் டெக்கரேஷன், கிரீன் கலர் லைட், மனதை வருடும் பாடல்கள் என அனைத்தும் சாதாரண மசாஜ் இடம் போலத் தோன்றும். ஆனால், இது போன்ற முகமூடியில் பாலியல் தொழில் நடக்கிறது. கேரளாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் இந்த மசாஜ் சென்டரை நடத்தி வருகின்றனர்.

கஷ்டமர் போல பேச்சு கொடுத்த செய்தியாளர்களிடம், அங்கு இருந்த ஒரு ஊழியர் தன்னுடைய வாயிலேயே உண்மைகளை ஒப்புக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

"சர்வீஸுக்கு ஒவ்வொரு மாதிரி பேக்கேஜ் இருக்கு. ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு, நாலு மணி நேரத்துக்கு இவ்வளவு, ஒரு இரவு பொழுதுக்கு இவ்வளவு" என, ஏதோ ஹோட்டல் மெனு கார்டு போல விலைப்பட்டியலை நீட்டுகிறார் அந்த ஊழியர்.

இது மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் பெண்களைத் தேர்வு செய்ய விரும்பினால் அதற்கும் தனி கட்டணம் வசூலிக்கிறார்கள். "இங்க ஆறு பெண்கள் இருக்கார்கள். அடுத்த வாரம் வேற ஆறு பெண்கள் இருப்பார்கள். இப்படி இடம் மாறிக் கொண்டே இருப்போம். ஒரே பெண் கண்டிப்பா இருக்க மாட்டா" என்கிறார்.

வெவ்வேறு மசாஜ் சென்டர்களில் இருந்து இப்படி இடம் மாற்றி வரும் அழகிகள், வாடிக்கையாளர்களை அடிக்கடி வரவழைக்கும் யுக்தியாகவே இதைப் பயன்படுத்துகின்றனர்.மேலும், அந்த ஊழியர் கூறுகையில், "சவுத் இந்தியன் பெண்கள் கிடைப்பது அரிது. இங்கே இருப்பவர்கள் பலரும் நார்த் இந்தியன் பெண்கள் தான்.

சவுத் இந்தியன் பெண்கள் அவ்வப்போது வருவார்கள், அதன் பிறகு சென்றுவிடுவார்கள். இப்போது சவுத் இந்தியன் பெண்கள் கிடைப்பது சிரமமா இருக்கு" என்று பகீர் தகவல்களைப் பகிர்ந்தார்.

இதற்கு அடுத்த நிமிடமே, செய்தியாளர் "எங்களுக்கு சம்மதம் ஆனா, போலீஸ் பிரச்சனை ஏதாவது இருக்குமா?" என்று கேள்வி எழுப்பியபோது, அந்த ஊழியர் அதிர வைத்த பதிலை அளித்தார்: "போலீஸ் எல்லாம் ரெகுலரா வருவார்கள். அவர்களும் இங்க கஸ்டமர் தான்! சில நேரங்களில் சோதனைக்கு வருவார்கள். அந்த நேரத்துல மாமுல் கொடுத்து செட்டில் செய்துவிடுவோம்.

"இந்த மசாஜ் சென்டரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூட மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டுள்ளன. உள்ளே வாடிக்கையாளராக வரும் எவரையும் உடனடியாக அனுமதிப்பது இல்லை. தரைத்தளம், மேல் தளம், படிக்கட்டுகள், கதவுகள் என அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவர்கள் நடவடிக்கையை ஒரு மணி நேரம் காக்க வைத்து பரிசோதனை செய்த பிறகே, சந்தேகப்படும் நபர்கள் இல்லை என உறுதியானால் உள்ளே அனுமதிக்கின்றனர். செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரையும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் காக்க வைத்து, அதன் பிறகே உள்ளே அழைத்துள்ளனர்.

இந்த மசாஜ் சென்டர் அண்ணாநகரில் மட்டுமா? இல்லை! "அம்பத்தூர், புரசைவாக்கம் என வேற சில பகுதிகளிலும் இருக்கு" என அந்த ஊழியர் ஒப்புக்கொண்டார்.

இந்த வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் வறுமையில் தப்பிக்க வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு பணி தேடி வருபவர்கள். அவர்களை மூளைச்சலவை செய்து, பெண்கள் மூலமாகவே மூளைச்சலவை செய்து, இப்படி படுபாதக செயலுக்குள் தள்ளுகின்றனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ரகசிய விசாரணை, தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பாலியல் தொழிலின் பரவலான தன்மையை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. போலீஸ் அதிகாரிகளின் ஈடுபாடு குறித்து கேள்விகள் எழுப்பியுள்ள இந்த விவகாரத்தில், அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

'நியூஸ் தமிழ் 24x7' இன் இந்த விசாரணை, சமூக நீதிக்காகவும், பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்புக்காகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

Summary in English : A sting operation by News Tamil 24x7 uncovered a sex racket masquerading as a massage parlor near Chennai's Anna Nagar. Run by Keralites, it features rotating North/South Indian women, tiered packages, and CCTV surveillance. Staff admitted regular police customers and bribes to evade raids. Targets poor migrants; similar spots in Ambattur and Purrasaiwakkam.