முடி உதிர்வு பிரச்சனை - மாணவி எடுத்த விபரீத முடிவு.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..!

இரணியல், செப். 24 : கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காட்டைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி அஸ்வினி, முடி உதிர்வு பிரச்சனைக்காக அழகு நிலையத்தில் சிகிச்சை பெற்றதன் பிறகு ஏற்பட்ட தீராத தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனையால் உளைச்சலடைந்து, வீட்டில் தனியாக இருந்தபோது பெட்ரோலை ஊற்றி தீக்குளி குதித்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.இந்த சோக சம்பவம் குறித்து கிடைத்த தகவல்களின்படி, காரங்காட்டைச் சேர்ந்த ஞானசெல்வன் - ரூபி ஆண்டனி பாய் தம்பதியினர்.

ஞானசெல்வன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ரூபி ஆண்டனி பாய், மூத்த மகள் அஸ்வினி (19) மற்றும் இளைய மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் விலங்கியல் முதலாம் ஆண்டு பயிலும் அஸ்வினி, சமீபத்தில் முடி உதிர்வு பிரச்சனையில் சிக்கியதால், அங்குள்ள தனியார் அழகு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அழகு நிலைய சிகிச்சையின் பிறகு அஸ்வினிக்கு கடுமையான தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதிலிருந்து மன உளைச்சலில் மூழ்கியிருந்தார்.

இதனால், வியாழக்கிழமை காலை தாய் ரூபி ஆண்டனி பாய், இளைய மகளுடன் அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்றபோது, அஸ்வினியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வெளியேறினார்.சுமார் அரை மணி நேரம் கழித்து, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறும் சத்தம் கேட்டது.

அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து பார்த்தபோது, அஸ்வினியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. வீட்டு கதவுகள் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததால், அவர்கள் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

ஆனால், அப்போதுக்குள் அஸ்வினியின் உடல் முழுவதும் கருகி சடலமாகத் தரையில் விழுந்திருந்தது.உடனடியாக அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

இதற்கிடையில், தகவல் அறிந்த தாய் ரூபி ஆண்டனி பாய் விரைந்து வந்து மகளின் கருகிய சடலத்தைக் கண்டு கதறி அழுதார். சம்பவத்தைத் தெரிந்துகொண்ட இரணியல் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அஸ்வினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பைக்கிற்குப் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை உடலில் ஊற்றி, தீ வைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்துள்ளது. இது தற்கொலை எனத் தெரிவித்துள்ளனர்.

தாய் ரூபி ஆண்டனி பாயிடம் போலீஸார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தியை அறிந்த பொதுமக்கள், இது உண்மையான காரணமாக தெரியவில்லை.

தலைவலியால் பாதிக்கப்பட்ட பெண்.. இப்படி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்யும் அளவுக்கு துணிந்திருக்க வாய்ப்பு குறைவு. உண்மையான காரணம் என்ன..? இது கொலையா..? தற்கொலையா..? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

என்ன நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Summary : In Kanyakumari's Karanigadu, 19-year-old college student Aswini, battling hair loss, sought treatment at a Nagercoil beauty parlor. Post-treatment, she suffered persistent headaches and sinus issues, leading to depression. Alone at home, she doused herself in petrol and self-immolated, dying on the spot. Her family is devastated; police investigate, urging medical consultations over salons.