பிணமாக கண்டெடுக்கப்பட்ட பிரபல சீரியல் நடிகை.. சிக்கிய கடைசி கடிதம்.. வெளியான பகீர் காரணம்..!
பெங்களூரு : கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலில் துர்கா மற்றும் கனகா என்ற இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை நந்தினி சி.எம். (வயது 26) பெங்களூருவில் உள்ள தனது பேயிங் கெஸ்ட் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் மற்றும் கன்னட சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டம் கொட்டூரைச் சேர்ந்த நந்தினி, கன்னட தொலைக்காட்சி சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து அனுபவம் பெற்றவர். 'ஜீவா ஹூவாகிடே', 'சங்கர்ஷா', 'மதுமகளு', 'நீனாடே நா' உள்ளிட்ட கன்னட சீரியல்களில் நடித்த அவர், தமிழில் கௌரி சீரியல் மூலம் முதல் முறையாக நாயகியாக அறிமுகமானார். இதில் சவாலான இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கௌரி சீரியலின் ஷூட்டிங் ஆரம்பத்தில் பெங்களூருவிலேயே நடைபெற்று வந்த நிலையில், நந்தினியும் அங்கு தங்கியிருந்தார். பின்னர் ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் சீரியலுக்கு இடைவெளி அளிக்கப்பட்டதால் அவர் மீண்டும் பெங்களூருவுக்கு திரும்பினார். டிசம்பர் 28 இரவு நண்...