பணத்துக்காக தான் படுத்தேன்.. ஆனால், விடிய விடிய.. திமுக பிரமுகர் மீது பாலியல் தொழிலாளி பகீர் புகார்..!

கடந்த 22-ஆம் தேதி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகரும், செல்வந்தருமான சதீஷ் போனில் பாலியல் தொழில் புரோக்கர் ஒருவரை தொடர்பு கொண்டு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை குளித்தலை நகராட்சி சுங்கக் கேட்டில் உள்ள சின்னையா லாட்ஜுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

அன்று இரவு லாட்ஜில் தங்கிய சதீஷ், சரண்யாவுடன் தனிமையில் இருந்தார். அதன் பின் தூங்கிய சதீஷ், காலை எழுந்து பார்த்தபோது சரண்யாவையும், தனது பாக்கெட்டில் வைத்திருந்த ₹27,000 பணத்தையும் காணவில்லை என்பதை அறிந்து, குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி, சதீஷ் அன்று முழுவதும் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் சரண்யாவைத் தேடி அலைந்தார். மாலையில், சரண்யா தனது ஆண் நண்பருடன் தந்தை பெரியார் காவிரி பாலத்தில் பைக்கில் செல்வதாகத் தகவல் கிடைத்ததால் அங்கு சென்றார்.

அப்போது சரண்யா மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிக அளவு மது போதையில் இருந்தனர். சதீஷ், பணத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என சரண்யாவை ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆத்திரமடைந்த சரண்யாவின் ஆண் நண்பர், பைக்கின் சாவியால் சதீஷின் முகம் மற்றும் கையில் தாக்கியதாகவும் தெரிகிறது.

இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், 'மூன்று நபர்கள் மது போதையில் பிரச்சனை செய்கின்றனர்' என குளித்தலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக குளித்தலை காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் சக காவலர்கள் பாலத்திற்குச் சென்றனர்.

அங்கு மது போதையில் இருந்த சரண்யாவையும், அவரது ஆண் நண்பரையும் ஆட்டோவில் ஏற்றி குளித்தலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சதீஷ் தனது பைக்கில் தானாகவே போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

காவல் நிலையத்தில் விசாரணையின்போது, சரண்யாவின் ஆண் நண்பர் முசிரியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவராகவும், அவர் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருவதாகவும் தெரியவந்தது.

இதனால் சம்பவம் மேலும் சர்ச்சையாகியுள்ளது. சதீஷ் அளித்த புகாரின்படி, சரண்யாவும் பிரசாந்தும் பணத்திருட்டு மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், சரண்யாவும் தனது பக்கம் புகார் அளித்துள்ளார்.

"என்ன என்ன வேலை பார்க்கிறீங்க? இவங்க யாரு?" என ஆரம்பித்து, சதீஷ் தன்னை உல்லாசத்திற்காக அழைத்துவிட்டு, உரிய தொகை செலுத்தாமல் லாட்ஜிலிருந்து கிளம்பிச் சென்றதாகக் கூறியுள்ளார். சாப்பாட்டுக்கு பணமின்றி தவித்தபோது, ஏற்கனவே அறிமுகமான ஆண் நண்பர் பிரசாந்திற்கு போன் செய்து அழைத்ததாகவும், அவர் சாப்பாடு வாங்கி கொடுத்து பைக்கில் அழைத்துச் சென்றதாகவும் சரண்யா தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் அழுது மன்றாடிய சரண்யா, "நான் ஒரு காசு திருடவில்லை. திருடவே இல்ல. என் ரெண்டு பசங்க மேல சத்தியமா சொல்றேன். ₹1 சார். நான் சத்தியமா சொல்றேன். என் பக்கத்துல ரெண்டு பசங்க மேல சத்தியமா சொல்றேன்.

ஒரு பணம் பேர் நானே ஏத்திட்டு நான் உள்ளே வருவேன். வேண்டுமென்றால் என் பேக்கையும், எனது நண்பர் போலீஸ் பிரசாந்த் இருவரையும் சோதனை செய்து கொள்ளுங்கள். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளன. பணத்துக்காக தான் உல்லாசத்திற்கு வந்தேன். ஆனால் நான் திருடவில்லை" எனக் கூறினார்.

"ஏண்ணா கொஞ்சம் மிஞ்சு போனா என் பசங்களுக்கு போவது போகட்டும். என் பசங்க அவ்ளோதான். ஆனா இது தொட விட்டு நான் போனேனா இருக்கு. இல்ல நான் தின்னவே இல்லன்னு சொல்றேன். ஒரு ரூபாதான் நான் எடுக்கல. நான் எடுக்கலப்பா எதுக்குப்பா உன் பேரு கட்டுப்பாடு ஆகணும்" என அவர் தொடர்ந்து கூறியதாகவும் தெரிகிறது.

குளித்தலை போலீஸார், சதீஷ் அளித்த புகாரின் அடிப்படையில் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இரு தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தாவிட்டாலும், சம்பவம் போலீஸ் உள்ளுக்குள்ளேயே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சதீஷ் கூறுவது உண்மையா? இல்லை சரண்யா தரப்பு கூறுவது உண்மையா? என்பதை போலீஸார் விரிவான விசாரணை மூலம் தெரத்தக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இச்சம்பவம், அரசியல் பிரமுகர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை சம்பந்தப்படுத்தியதால், மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடக்கவுள்ள நிலையில், சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary in English : In Karur, DMK leader Sathish accused sex worker Saranya of stealing ₹27,000 from his lodge room after a paid encounter. He confronted her with friend and constable Prasanth, sparking a drunken brawl at a bridge. Saranya denied theft, claiming unpaid dues and innocence, swearing on her children. Police filed cases based on Sathish's complaint amid controversy.