பணத்துக்காக தான் படுத்தேன்.. ஆனால், விடிய விடிய.. திமுக பிரமுகர் மீது பாலியல் தொழிலாளி பகீர் புகார்..!
கடந்த 22-ஆம் தேதி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகரும், செல்வந்தருமான சதீஷ் போனில் பாலியல் தொழில் புரோக்கர் ஒருவரை தொடர்பு கொண்டு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை குளித்தலை நகராட்சி சுங்கக் கேட்டில் உள்ள சின்னையா லாட்ஜுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. அன்று இரவு லாட்ஜில் தங்கிய சதீஷ், சரண்யாவுடன் தனிமையில் இருந்தார். அதன் பின் தூங்கிய சதீஷ், காலை எழுந்து பார்த்தபோது சரண்யாவையும், தனது பாக்கெட்டில் வைத்திருந்த ₹27,000 பணத்தையும் காணவில்லை என்பதை அறிந்து, குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, சதீஷ் அன்று முழுவதும் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் சரண்யாவைத் தேடி அலைந்தார். மாலையில், சரண்யா தனது ஆண் நண்பருடன் தந்தை பெரியார் காவிரி பாலத்தில் பைக்கில் செல்வதாகத் தகவல் கிடைத்ததால் அங்கு சென்றார். அப்போது சரண்யா மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிக அளவு மது போதையில் இருந்தனர். சதீஷ், பணத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என சரண்யாவை ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆத்திரமடைந்த சரண்யாவின் ஆண் நண்பர், பைக்கின் சாவியால் சதீஷின் முகம் மற்...