TVK வேட்பாளராகும் KPY பாலா..? எந்த தொகுதி தெரியுமா..? பரபரப்பு தகவல்கள்!

கே.பி.ஒய் பாலா, விஜய் டிவியின் பிரபல டிவி நிகழ்ச்சி வழுத்துரைப்பாளராகத் திகழ்ந்தவர், சமூக ஊடகங்களில் ஏழைகளுக்கு உதவும் வீடியோக்கள் மூலம் பெரும் பிரபலத்தைப் பெற்றுள்ளார்.

சைக்கிள், ஆட்டோ, ஆம்புலன்ஸ், தையல் மெஷின், பண உதவிகள் போன்றவற்றை வழங்கும் அவரது செயல்பாடுகள், மக்களிடையே உணர்ச்சிகரமான ஆதரவைப் பெற்றுள்ளன.

ஆனால், அவரது சம்பளத்திற்கு (தோராயமாக மாதம் 10,000-25,000 ரூபாய்) மீறிய அளவு உதவிகளைச் செய்வது எப்படி? "எனது சொந்த சம்பாத்தியத்தால் தான் செய்கிறேன்" என அவர் கூறினாலும், இதன் பின்னணியில் உள்ள நிதி ஆதாரங்கள் குறித்து சமீப காலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

கடந்த 12-ம் தேதி நம்முடைய தமிழகம் தளத்தில் "‘KPY பாலாவின் சம்பளமே மாசம் 2 லட்சத்தை தாண்டாது..’ பிறகு எப்படி இத்தனை கோடி உதவி..? வெளியான பகீர் உண்மை.." என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அதன் பிறகு, நடிகர் கூல் சுரேஷ் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஊடகங்களில் இது குறித்து கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து பிரபல பத்திரிக்கையாளர் உமாபதி இது குறித்து தன் பார்வையை பதிவு செய்துள்ளார்.

சமீப சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள்

உமாபதியின் பேட்டி (அறம் நாடு யூட்யூப் சேனல்): பிரபல பத்திரிகையாளர் உமாபதி அவரது பேட்டியில், பாலாவின் வீடியோக்கள் "ஸ்கிரிப்டட் ஷூட்டிங்" என்று குற்றம் சாட்டினார். வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் மறைக்கப்படுவது, இன்சூரன்ஸ் இல்லாத ஆம்புலன்ஸ்கள், சர்வதேச அரசியல் சதி (நேபாள், ஆந்திரா உதாரணங்கள்) போன்றவற்றை அவர் விளக்கினார்.

இது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஒரு ஆம்புலன்ஸ் நம்பர் பிளேட் ஆடம்பர காருடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

நடிகர் கூல் சுரேஷ்:பொதுவெளியில் அவர் பேசியது, பாலாவின் உதவிகளின் உண்மைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியது. " கேபிஒய் பாலாவுக்கு எங்க இருந்து இவ்ளோ காசு வருது.. இது நல்லது என்றாலும், பின்னணி ஆராயப்பட வேண்டும்" என அவர் கூறினார்.

பொருளாதார சிக்கல்கள்: இணைய பக்கங்களில் பாலாவின் உதவிகளுக்கான நிதி டிரஸ்ட்கள் (சேவையே கடவுள் போன்றவை) டுபாக்கூர் என்று விவாதங்கள். அவர் அமெரிக்கா டிரிப் (சோகம் என்று கூறினாலும்) பின் மாற்றம் ஏற்பட்டதாக விமர்சனங்கள் உள்ளன.

அரசியல் புகார்: தமிழக வெற்றிக் கழகம் (TVK) தொடர்பு?

சமீப தகவல்களின்படி, பாலா தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியில் இணைந்து, புதுச்சேரி காரைக்கால் தொகுதியில் 2026 தேர்தலில் போட்டியிட இருப்பதாக வதந்திகள் பரவியுள்ளன.

TVK, நடிகர் விஜய் தொடங்கிய கட்சி (2024 பிப்ரவரி அறிவிப்பு), 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அடிப்படையிலான கட்சி.

கே.பி.ஒய் பாலா விரைவில் TVK கட்சியில் சேரப்போகிறார் என்றும் புதுச்சேரி காரைக்காலில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்து, KPY பாலா தரப்பில் இருந்தோ..? TVK தரப்பில் இருந்தோ..? எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஒரு பக்கம் தான் செய்யக்கூடிய உதவிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது..? என்ற கேள்வியால் சர்ச்சையை எதிர்கொண்டிருக்கும் KPY பாலா மறுபக்கம் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் உறுப்பினராக சேர இருக்கிறார். காரைக்கால் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

இதெயெல்லாம் தாண்டி,KPY பாலா தமிழக வெற்றி கழகம் கட்சியின் சேர இருப்பதை முன்கூட்டியே அறிந்த சிலர் வேண்டுமென்றே KPY பாலாவின் பிரபலத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் என்று KPY பாலாவுக்கு ஆதரவான பதிவுகளையும் எழுதி வருகிறார்கள் சில இணைய வாசிகள். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

Summary : KPY Bala, a Vijay TV celebrity, gains fame through charity videos but faces scrutiny over their authenticity and funding. Journalist Umapathy and others question his motives, alleging scripted content and political conspiracies. Rumors suggest Bala may join TVK and contest in Karaikal.