காஞ்சிபுரம், அக்டோபர் 11: எட்டு ஆண்டுகள் காதலித்து, திருமண நிச்சயதார்த்தம் செய்திருந்த இளைஞன், அதீத உரிமை உணர்வால் காதலியை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர் நாகப்பட்டினம் சேர்ந்த 23 வயது சௌந்தர்யா. கொலையாளி தினேஷ்.
நாகப்பட்டினம் அழகியான சௌந்தர்யா (23), காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் தோழிகளுடன் கிறிஸ்தவ கண்டிகை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
அதே காம்பவுண்டில், நாகப்பட்டினம் சேர்ந்த தினேஷும் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். படிப்பு முடிந்து வேலை தேடி இங்கு வந்த இளம் ஜோடி, அருகருகே வீடுகள் எடுத்துக்கொண்டு அன்பின் பயணத்தைத் தொடங்கினர்.
இவர்களின் காதல் இரு வீட்டினருக்கும் தெரிந்ததும், பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, எட்டு மாதங்களுக்கு முன் எளிமையான நிச்சயதார்த்தம் நடந்தது. தினேஷ், சௌந்தர்யாவின் மீது கொண்டிருந்த பேரன்பை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தார்.

"என் தேடலில் கிடைத்த மிகச்சிறந்த பொக்கிஷம் நீ மட்டுமே", "கானா உன்னுடன் வாழ நூறு ஜென்மம் கூட போதாது" போன்ற பதிவுகள், அவரது இன்ஸ்டா பக்கத்தை இளம் பெண்களின் ஐடியல் காதலாக மாற்றின. காதலியின் பெயரை கையில் பச்சைக்குத்து செய்து பதிவிட்டது, லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் வெள்ளத்தை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த அன்பின் மறுபக்கத்தில் தினேஷின் அதீத உரிமை உணர்வு மறைந்திருந்தது. சௌந்தர்யா, வேலை சூழலில் சக ஊழியர்களுடன் சிரித்து பேசுவதைப் பார்த்தால், தினேஷின் இதயம் 'வைப்ரேட்' ஆகிவிடும். அவரது ஓவர்ப் பாசிவ்னஸை சௌந்தர்யா விரும்பவில்லை.

"100 ஜென்மம் உன்னுடன்" என்று கேட்டவர், "100 நாட்கள் கூட சேர்ந்து வாழ முடியாது" என்ற முடிவுக்கு வந்தார். இதனால் திருமண பேச்சைத் தள்ளி வைத்ததாகக் கூறப்படுகிறது.மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ், சௌந்தர்யாவை வேறொரு ஆண் நண்பருடன் சேர்க்கிறாள் என்று சந்தேகித்து அடிக்கடி சண்டை போட்டார்.
சௌந்தர்யா, அவரது தொல்லையை அனுசரித்து வந்தாலும், தினேஷின் நடத்தை 'ஒரு நொடி நன்றாக, அடுத்த நொடி சைக்கோ' போன்றதாக மாறியது. சம்பவத்தன்று, சௌந்தர்யாவைப் பார்க்க தினேஷ் அவர் வீட்டிற்கு சென்றார். அங்கு உணர்ச்சி ரீதியான பிளாக்மெயிலால் உடலுறவை நிர்பந்தித்து, திருமணத்திற்கு கட்டாயப்படுத்தினார்.

சௌந்தர்யா, அவரது குறைகளைச் சுட்டிக்காட்டியதும், ஆத்திரத்தில் தினேஷ் வீட்டில் இருந்த கத்தியால் அவள் உடலில் 21 இடங்களில் சரமாரியாகக் குத்தினார்.இரத்தவெள்ளத்தில் சரிந்த சௌந்தர்யா உயிருக்காகப் போராடியபோது, தினேஷ் அவளின் வாயில் துணியை அடைத்து, கழுத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து கொன்றார்.
சம்பவ இடத்தை விட்டு தப்பிய தினேஷ், நாகப்பட்டினம் சென்று காவல்துறையிடம் சரணடைந்தார். அதற்கிடையே, சௌந்தர்யாவின் மற்றொரு நண்பர், அவளைத் தொடர்பு கொள்ள முடியாததால் தோழிகளுக்கு தெரிவித்தார். வீட்டிற்கு வந்த தோழிகள், இரத்தவெள்ளத்தில் இறந்து கிடக்கும் சௌந்தர்யாவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

போலீஸ், கொலை வழக்கு பதிவு செய்து, தினேஷிடமிருந்து வாக்குமூலம் பெற்று சிறையில் அடைத்தனர். "உருகி உருகி காதலித்தவன், 21 குத்துகளால் கொன்றான்" என்பது, அவர்களின் இன்ஸ்டா பதிவுகளுக்கு லைக் செய்தவர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
போலீஸ் விசாரணையில், தினேஷின் அதீத அன்பு ஆபத்தாக மாறியதே காரணம் எனத் தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் 'ஐடியல் கப்பிள்' என்று புகழப்பட்ட இவர்கள், இன்று கொடூர சோகத்தின் சின்னமாக மாறியுள்ளனர்.
Summary : In a tragic turn, 23-year-old Soundarya from Nagapattinam was brutally stabbed 21 times and strangled by her fiancé Dinesh in Kanchipuram. After eight years of romance and engagement, his possessive jealousy escalated into murder following an argument over marriage. Dinesh surrendered to police, leaving social media admirers shocked.



