சென்னை பெரம்பூர் பகுதியில், பள்ளி மாணவிகள் மூவரை காதல் வாக்குறுதியுடன் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உட்பட ஆறு பேர் போலீஸ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும் பாதுகாப்பான காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 24-ம் தேதி, பெரம்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி தோழி வீட்டுக்கு சென்று திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.விசாரணையில், மாயமான 12 வயது சிறுமியின் தோழிகளான 14 வயது மாணவி (அதே பகுதி) மற்றும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 16 வயது 12-ம் வகுப்பு மாணவியும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன், அனைவரது செல்போன் லொகேஷன்களைத் தடமாற்றி, அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனர்.

இதில், மாணவிகள் மூவரையும் ஐடிஐ மாணவரான 16 வயது இளைஞன் மற்றும் அவரது 17 வயது நண்பர்கள் இருவர் காதல் வலையில் வீழ்த்தி அழைத்துச் சென்றிருப்பது வெளிப்பட்டது.
போலீஸ் விசாரணைப்படி, கடந்த ஜனவரி 24-ம் தேதி இரவு, மாணவர்கள் மூவரும் (16, 16, 17 வயது) பள்ளி மாணவிகள் மூவரை பெரம்பூரில் உள்ள அரசு நூலகத்தின் மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்தனர். தங்களுடைய ஆண் நண்பரை நம்பி சென்றனர் அந்த பிஞ்சுகள், ஆனால்.. அந்த கொடூர ஆண் நண்பர்கள் தன்னை நம்பி வந்த பெண்ணை தன்னுடைய பிற நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளனர்.

இப்படி மூன்று மாணவிகளையும் மாறி மாறி சீரழித்துள்ளனர் அந்த 6 புள்ளிங்கோக்களும், அண்ணா.. வலிக்குதுனா.. எங்களை விட்டுடுங்க.. என்று கெஞ்சியும் பயனில்லை.. முழு போதையில் இருந்ததால் சத்தம் போட்டு ஊரை கூட்டவும் வழியில்லை.. வேறு வழியே இல்லாமல் அந்த மிருகங்களுக்கும் இறையானார்கள் சிறுமிகள்.
இந்தச் சம்பவம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இதற்கு உடந்தையாக செயல்பட்ட அவர்களது நண்பர்கள், யாரேனும் அப்பகுதிக்கு வருகிறார்களா என நோட்டம் விட்டு கண்காணித்தனர். இதன் அடிப்படையில், குற்றவாளிகளான மாணவர்கள் மூவரும், உதவியாளர்களான யுகேஷ், கலிமுல்லா உட்பட மற்ற மூவரும் மொத்தம் ஆறு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

குறிப்பிடத்தக்கவது, கைதான யுகேஷ் மற்றும் கலிமுல்லா ஆகியோருக்கு ஏற்கெனவே குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதானவர்களில் மூன்று சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர், மற்ற மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும் பாதுகாப்பான காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு, முதல் கட்டமாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு, திரு.வி.க. நகர் போலீஸ் நிலையத்திலிருந்து செம்பியம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தின் ( இந்தியன் சிறுவர் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் மேலும் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
இச்சம்பவம், சமூக ஊடகங்கள் மூலம் காதல் வலையில் வீழ்த்தி சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பதை எச்சரிக்கையாக அறிவிக்கிறது. பெற்றோரும், கல்வியகங்களும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.



