அண்ணா ப்ளீஸ்.. எங்களை விட்டுடுங்க.. 3 மாணவிகள்.. 6 புள்ளிங்கோ.. விடிய விடிய சீரழித்த கொடூரம்.. பகீர் CCTV..
சென்னை பெரம்பூர் பகுதியில், பள்ளி மாணவிகள் மூவரை காதல் வாக்குறுதியுடன் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உட்பட ஆறு பேர் போலீஸ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும் பாதுகாப்பான காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 24-ம் தேதி, பெரம்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி தோழி வீட்டுக்கு சென்று திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.விசாரணையில், மாயமான 12 வயது சிறுமியின் தோழிகளான 14 வயது மாணவி (அதே பகுதி) மற்றும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 16 வயது 12-ம் வகுப்பு மாணவியும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன், அனைவரது செல்போன் லொகேஷன்களைத் தடமாற்றி, அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனர். இதில், மாணவிகள் மூவரையும் ஐடிஐ மாணவரான 16 வயது இளைஞன் மற்றும் அவரது 17 வயது நண்ப...