அக்டோபர் 13: உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில், சதார் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி, தனியார் பள்ளியின் மேலாளர் தேவேந்திர குஷ்வாஹாவால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தக் குற்றச்செயல் கடந்த ஜனவரி மாதம் முதல் பல மாதங்களாகத் தொடர்ந்து நடந்ததாகத் தெரிகிறது.அண்மையில் சிறுமி பள்ளியிலும் வீட்டிலும் வழக்கத்திற்கு மாறான நடத்தை காட்டியதால், அவரது பெற்றோர்கள் கவலையடைந்தனர்.

இறுதியாக, சிறுமியை அழைத்து, ஏன்மா உனக்கு என்ன ஆச்சு..? ஏன் பயந்தமாதிரியே இருக்க..? என்று விசாரித்தபோது, அவர் கண்ணீருடன் தனது துன்பத்தை வெளிப்படுத்தினார். சிறுமியின் வார்த்தைகளின்படி, "பள்ளி மேலாளர் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, கதவைப் பூட்டிவிட்டு, என்னை மடியில் அமர வைத்து, ட்ரெஸ்ஸை கழட்டி இங்கெல்லாம் தொட்டு பார்க்கிறார். 'இதை வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன்' என்று மிரட்டினார்.அந்தப் பயத்தில் தான் நான் இப்படி இருக்கிறேன்" என்று அழுதுக்கொண்டே தந்தையிடம் கூறியுள்ளார்.
இந்த அதிர்ச்சி வார்த்தைகளைக் கேட்ட சிறுமியின் தந்தை உடனடியாக சதார் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, காவல்துறை தேவேந்திர குஷ்வாஹாவை கைது செய்து, அவருக்கு எதிராக POCSO சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து CCTV காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.
இச்சம்பவம், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், "சிறுமியின் புகார் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குற்றவாளி தண்டனை ஏற்படுத்தப்படுவார்" என்று தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் குழந்தைகளின் நடத்தை மாற்றங்களை உடனடியாக கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Summary : In Uttar Pradesh's Deoria district, an 8th-grade girl was sexually abused for months by her private school principal, Devendra Kushwaha. Traumatized and threatened with failure and family harm, she revealed the ordeal to her parents, leading to his arrest under POCSO Act. Police are investigating the heinous crime that began in January.


