துர்காபூர்/கல்கத்தா, அக்டோபர் 14 : இந்தியாவின் வடமாநிலங்களில் பாலியல் அக்கிரமங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை காமுகர்களின் இலக்காகி வருவதால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிட்டது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் இரண்டு அதிர்ச்சி தரும் பாலியல் கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒன்றில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார், மற்றொன்றில் பிரபல யூடியூபர் தந்தை-மகன் சேர்ந்து 9ஆம் வகுப்பு சிறுமியை வன்கொடுமை செய்தனர். இரு சம்பவங்களிலும் போலீசார் விரைந்து செயல் எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
துர்காபூரில் மருத்துவ மாணவி மீது கொடூரம்
பச்சிம் வர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயிலும் ஒடிஷாவைச் சேர்ந்த 20 வயது மாணவி, தனது ஆண் நண்பருடன் நேற்று முன்தினம் (அக்டோபர் 12) இரவு உணவு உண்டு ஹாஸ்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த மூன்று இளைஞர்கள், மாணவியின் செல்போனைப் பறித்து, 3,000 ரூபாய் தந்தால் போனைத் திரும்பத் தருவதாகக் கூறினர். பதறிய நண்பர் பணத்தை எடுத்து வர ஓடினார். ஆனால், அதற்குள் குற்றவாளிகள் மாணவியை மருத்துவ கல்லூரி அருகே உள்ள வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடினர்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விரைந்து விசாரணை நடத்தி, இன்று (அக்டோபர் 14) மூன்று குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர்.
"சம்பவத்தைத் தொடர்ந்து CCTV கேமராக்களைப் பரிசோதித்து, குற்றவாளிகளின் அடையாளத்தைக் கண்டறிந்தோம். அவர்கள் உள்ளூர் குடியிருப்பாளர்கள்," என துர்காபூர் போலீஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார். இந்தச் சம்பவம் மருத்துவ மாணவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரோவாவில் யூடியூபர் தந்தை-மகன் சிறுமி மீது அசிங்கம்
இதே மேற்கு வங்கத்தில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஹரோவாவைச் சேர்ந்த 48 வயது அரபிந்து என்பவரும், அவரது மகனும் சேர்ந்து 9ஆம் வகுப்பு மாணவியை பல மாதங்களாக வன்கொடுமை செய்த சம்பவம் வெளிய வந்துள்ளது.
அரபிந்து, இரண்டு யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். ஒன்றில் தனது வீடியோக்கள் மற்றும் ஷார்ட் பிலிம்களைப் பதிவிட்டு, இன்னொன்றில் இந்தி மற்றும் பெங்காலி பாடல்களுக்கு நடனமாடும் உள்ளடக்கங்களைப் பகிர்ந்து வருகிறார். இவரது சேனல்களுக்கு 4.5 மில்லியன் பாலோவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, ரீல்ஸ் வீடியோக்களுக்கான ஆசையைத் தூண்டி, சிறுமியை நம்ப வைத்த அரபிந்து மற்றும் அவரது மகன், அவளுடன் ரீல்ஸ் ஷூட்டிங்குக்காக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது சிறுமி உடைகளை மாற்றும்போது ரகசியமாக வீடியோ பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தொடர் பாலியல் வன்கொடுமைக்கு அவளை ஆளாக்கினர். வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவோம் என மிரட்டி, சம்பவத்தை வெளியே சொல்ல வேண்டாம் என அச்சுறுத்தினர்.
மேலும், உடலுறவுக்கு சம்மதிக்கக சிறுமியிடம் என் பையன் உண்மை திருமணம் பண்ணிக்க விரும்புறான் என்று கூறி சிறுமியின் நெற்றியில் குங்குமம் வைத்து சிறுமியை நம்ப வைத்துள்ளனர். இப்போதைக்கு, குங்குமம் வச்சிக்கோ.. சீக்கிரம் கல்யாணம் பண்ணிடலாம் என கூறி.. அதன் பிறகு பலாத்காரம் செய்ததாதகவும், படுக்கை முழுதும் ரத்தமாகி வலியில் துடித்தேன் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கொடுமையான விஷயம் என்னவென்றால், சிறுமியின் தந்தை கல்கத்தாவில் போலீஸ்காரராகப் பணியாற்றுகிறார். இருப்பினும், அரபிந்து தம்பதியினர் இதைத் தெரிந்து கொண்டே கொடுமையைத் தொடர்ந்தனர்.
சிறுமியே ரகசியமாக பெற்றோரிடம் தெரிவிக்கும் வரை அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் POCSO சட்டத்தின் கீழ் தந்தை-மகன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அரபிந்துவிடமிருந்து செல்போன்கள், கேமராக்கள் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பசிர்ஹாட் துணைப்பிரிவு நீதிமன்றம் அரபிந்துவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்துள்ளது, மகனை சிறார் குற்றவாளிகள் இல்லத்திற்கு அனுப்பியுள்ளது.
"இது நம் குடும்பத்தின் மிகப்பெரிய சோகம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்," என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹரோவா போலீஸ் இன்ஸ்பெக்டர், "விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது. அனைத்து சாட்சிகளும் பாதுகாக்கப்படுவார்கள்," எனத் தெரிவித்தார்.
அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: சமூக அச்சம்
இந்த இரண்டு சம்பவங்களும் மேற்கு வங்கத்தில் பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகின்றன. கடந்த ஆண்டுகளில், வட இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் 20%க்கும் மேல் உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற பதிவு முகமை (NCRB) தரவுகள் தெரிவிக்கின்றன.
சமூக ஆர்வலர்கள், "கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். POCSO சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்," என வலியுறுத்துகின்றனர்.
இந்தச் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் கோபத்தைத் தூண்டியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் குரல்கள் எழுந்து


