நாகப்பட்டினம் : கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நர்சிங் கல்லூரியில் உடற்கூறியல் ஆசிரியராக பணியாற்றிய சதீஷ், மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்.
அந்த மாணவியுடன் நடந்த தொலைபேசி உரையாடலின் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
ஆனால், இன்றும் பல பள்ளி, கல்லூரிகளின் மாணவிகள், மாணவர்கள் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளால் சுரண்டப்பட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில், அந்த சம்பவத்தை பற்றி ஒரு நினைவூட்டல் பதிவு.

செல்போன் ஆடியோ வெளியான பின், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதன் பிறகு தான் போலீசார் சதீஷை கைது செய்தனர்.
என்ன நடந்தது என பார்க்கலாம் வாங்க. நாகை மாவட்டத்தில் செயல்படும் இந்த தனியார் நர்சிங் காலேஜியில் உள்ளூர் மற்றும் வெளியூர் மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்காக ஹாஸ்டல் வசதியும் உள்ளது.
கல்லூரி விதிகளின்படி, மாணவிகள் மாணவர்கள் அல்லது சீனியர் மாணவர்களிடமும் பேசக் கூடாது என விதிமுறை உள்ளது. இந்த விதியை மீறுபவர்களை தனியாக அழைத்து கண்டிக்கும் பணியை சதீஷ் ஏற்றிருந்தார். இருப்பினும், அவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சம்பவத்தின் மையத்தில் உள்ளது, சதீஷ் ஒரு மாணவியை தனது வீட்டிற்கு அழைத்தது. மாணவி மாதவிலக்கு என கூறி மறுத்தாலும், அவர் உடனடியாக வரச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக ஆடியோ வெளிப்படுத்துகிறது. அந்த ஆடியோவில்:
ஆசிரியர்: ஹலோ..
மாணவி: சார் கேட்குதா?
ஆசிரியர்: ம்.. சொல்லுடா.
மாணவி: சார் இன்னைக்கு வேண்டாமே சார்..
ஆசிரியர்: ஏன்டா?
மாணவி: மென்சஸ்ஸா இருக்கு.. பெயின் ஓவரா இருக்கு.. உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல.
ஆசிரியர்: பரவாயில்லை.. நான் பார்த்துக்கறேன் வா. இப்போ எங்கே இருக்கே?
மாணவி: நான் இன்னும் கிளம்பல சார்.
ஆசிரியர்: கிளம்பு இப்போவே.
மாணவி: இல்ல சார்.. நான் வரல சார்.
ஆசிரியர்: ஏன் பாப்பா?
மாணவி: இல்ல சார்.. வேண்டாம், நான் வரல.
ஆசிரியர்: நீ இப்போ வர்றே.. சரியா?
மாணவி: நான் வரல.. வீட்டுக்கெல்லாம் வேணாம் சார்.
ஆசிரியர்: புரியல.
மாணவி: நான் வரல சார்.
இந்த ஆடியோ கலெக்டர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பறந்தது. கல்லூரி மாணவர்கள் தலைமையினர் சூழ்ந்து, சதீஷ் மீது கடுமையான நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தினர்.
கல்லூரி தாளாளர் கார்த்திகேயன் (பாஜக மாவட்ட தலைவர்) சதீஷை பணியிடைநீக்கம் செய்ததாக அறிவித்தாலும், மாணவிகளின் கொந்தளிப்பு அடங்கவில்லை. "மது போதையில் சதீஷ் இப்படி நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது," என கார்த்திகேயன் கூறினார்.
இதையடுத்து, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தமிமுன்சா தலைமையில் அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர். மாணவிகளை தனித்தனியாக அழைத்து வாக்குமூலங்கள் பெற்றனர்.
இந்த வாக்குமூலங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும் என உறுதியளித்தனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின் இறுதியில், நேற்றிரவு நாகை நகர போலீசார் சதீஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஆனால், கைது தாமதமானது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. மாணவி ஆடியோவை பெற்றோர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாலும், ஆரம்பத்தில் போலீஸ் புகார் இல்லை.
கல்லூரி நிர்வாகத்தின் புகாரைத் தொடர்ந்தே வழக்கு பதிவு செய்யப்பட்டது. சதீஷ் பல மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக மேலும் புகார்கள் உள்ளதால், விரிவான விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் மாணவர் அமைப்புகள், "சஸ்பெண்ட் அல்லது டிரான்ஸ்பர் போன்ற இலேசான தண்டனைகள் போதாது. சதீஷின் ஆசிரியர் தகுதியை பறிக்க வேண்டும்.
ஒழுக்கத்தை போதிக்க வேண்டியவர்கள் இப்படி அட்டகாசம் செய்தால், இளைஞர்களை யார் வழிநடத்துவது?" என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம், கல்வி நிறுவனங்களில் பாலியல் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Summary : In Nagapattinam's private nursing college, anatomy teacher Sathish was arrested for sexually harassing a student. A leaked audio of his coercive call, ignoring her menstrual pain to summon her home, went viral, igniting student protests and public fury. The BJP-affiliated college suspended him, but authorities conducted inquiries before police action. Demands rise for revoking his teaching license amid allegations of repeated misconduct.


