அக்டோபர் 28, 2025 : மத்திய பிரதேச மாநில தலைநகர் பாபாலில், 11 ஆண்டுகளுக்கு முன் (மே 8, 2014) ஒரு சந்தோஷமான திருமண நிகழ்ச்சியில் நடந்த கொடூர சம்பவம், இன்றும் பலரது மனதில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
26 வயது டாக்டர் ஜெயஸ்ரீ நாம்தேவ் தனது காதலனும் கல்லூரி நண்பருமான ரோகித் நாம்தேவுடன் திருமண மாலை பரிமாற்ற நிகழ்ச்சியின்போது, தன் மாமன் மகன் அனுராக் என்பவரால் கழுத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பின்னால் இருக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த கொடூர சம்பவத்தை தான் இப்போது பார்க்க போகிறோம்.

திருமண நாளில் கொலை: கோலாகலத்தில் ஏற்பட்ட சீரழிவு
கரோண்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த திருமணம், இரு குடும்பங்களின் சம்மதத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது. ஜெயஸ்ரீ, காந்தி மெடிக்கல் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்து, ஜபல்பூரில் குழந்தை மருத்துவத்தில் பிஜி படித்து வந்தவர்.
ரோகித் உடனான காதல், கல்லூரி நாட்களில் மலர்ந்தது. இருவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஜனவரி 2014ல் இரு குடும்பங்களும் திருமண ஏற்பாட்டில் ஈடுபட்டன. பிப்ரவரி 3 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது.மே 8 அன்று மாலை, பாட்டு-நடனம், பந்தல், வான வேடிக்கை என கோலாகலமாக நடந்த ஜெயமாலை நிகழ்ச்சியின்போது, 30 வயது அனுராக் திடீரென மண்டபத்தின் கூட்டத்தில் மறைந்திருந்து ஸ்டேஜ் ஏறினார். மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ஜெயஸ்ரீயின் கழுத்தில் "டுப்" என சுட்டார்.
அவரது உடல் உடனடியாக சரிந்தது. அடுத்து ரோகிதை நோக்கி திருப்பிய துப்பாக்கி, அவரது நண்பரின் தொடையில் தாக்கியது. சுட்ட சத்தத்தில் கூட்டம் கலவரமானது. தைரியமான பொதுமக்கள் அனுராக்கை கையும் களவுமாக பிடித்து கடுமையாகத் தாக்கினர்.
குடும்ப பின்னணி: பாசமும் வெறுப்பும் கலந்த துயரம்
ஜெயஸ்ரீயின் தந்தை கன்சியாம் யாதவ், மத்திய பிரதேச மின்சார வாரியத்தில் பணியாற்றுபவர். தாய் லட்சுமி. இவர்களுக்கு ஜெயஸ்ரீ தான் ஒரே பெண் குழந்தை.
ஜெயஸ்ரீயை சுட்டு கொலை செய்த அனுராக், கன்சியாமின் தங்கச்சி பையன். உயிரிழந்த ஜெயஸ்ரீயின் முறைப்பையன் என்றும் சொல்லலாம். தன்னுடைய தங்கையின் கணவர் அதாவது அனுராக்கின் தந்தை கல்லூராம்ஜி 10 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் இறந்தபோது, கன்சியாம் அவரது படிப்பு செலவுகளை ஏற்றார். 2012ல் அனுராக் HDFC வங்கியில் வேலைக்கு சேர்ந்தார்.ஆனால், சிறு வயதில் ஜெயஸ்ரீ உடனான உறவு, அனுராக்கில் காதலாக மாறியது. ஜெயஸ்ரீ அவரை "அண்ணன்" என்ற முறையில் தான் பழகி வந்துள்ளார் இதனை நினைத்து நிராகரித்தார்.
ரோகித் உடனான ஈடுபாட்டை அறிந்து, அனுராக் கோபத்தில் தீர்மானித்தார்: "எனக்கு கிடைக்காதவர், வேறாருக்கும் கிடைக்கக்கூடாது." நிச்சயதார்த்த புகைப்படங்களை ஃபேஸ்புக் பதிவிட்டதைப் பார்த்து, அவர் மாமனிடம் கெஞ்சினார். மறுப்பு கிடைத்தது.
விசாரணை: முன்னெச்சரிக்கை கொலையின் ஆதாரங்கள்
போலீஸ் வந்து சிசிடிவி கண்காணிப்பில், அனுராக்கின் பைக் (நண்பரிடமிருந்து கடன் வாங்கியது) 234 கி.மீ. தொலைவில் இருந்து வந்து, சம்பவத்துக்குப் பின் கூட நின்றிருந்ததை கண்டனர். நண்பரிடம் விசாரித்தபோது, "அவசர வேலைக்காக வண்டி கேட்டார்" எனத் தெரிந்தது.
அனுராக் கள்ளச் சந்தையில் துப்பாக்கி வாங்கியதும், கிரைம் டாக்குமென்டரி படங்களை பார்த்து இந்த கொலையை திட்டமிட்டதும் வெளிப்பட்டது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அனுராக் ஒப்புக்கொண்டார்: "ஜெயஸ்ரீ என் மீது விருப்பம் இல்லை.
ரோகித் மாலை போடுவதைப் பார்த்து கோபம் வந்தது." ரோகித், சோகத்தில் ஃபேஸ்புக் பதிவுகளை நீக்கினார். போலீஸ் ரோகித் மீது சந்தேகப்பார்வை வீசி அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது. ஆனால், ஆதாரங்கள் இல்லை. 17 சாட்சிகளுடன் குற்றஞ்சாட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தீர்ப்பும், சுயபிரான்தமும்: நீதியின் கடைசி அத்தியாயம்
2015 பிப்ரவரியில், நீதிமன்றம் அனுராக்குக்கு ஆயுள் சிறைத்தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. ஜெயஸ்ரீயின் பெற்றோர் மரணதண்டனை கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ஆனால், நிராகரிக்கப்பட்டது. ரோகித் சாட்சியாக நிற்கவில்லை.2019 அக்டோபரில், நன்னடத்தை காரணமாக 12 நாட்கள் பரோல் அளிக்கப்பட்டது. வெளியே வந்த அனுராக், என்ன நினைத்தானோ தெரியவில்லை.. வீட்டில் சடலமாக தொங்கினான். சிறை அதிகாரிகள் தகவல் அறிந்து உடலை மீட்டனர்.
குடும்பங்களின் துயரம்: "இது நியாயமா இல்லை"
ஜெயஸ்ரீயின் தந்தை கன்சியாம் கூறுகிறார்: "என் ஒரே பெண் குழந்தை.. அவளுக்கு திருமணம் என்பது கனவு. அது கொலை நிகழ்ச்சியாக மாறியது. அனுராக்கையும் நான் தான் வளர்த்தேன்.
அவன் என் குடும்பத்தை அழிச்சுட்டான்"அந்த நாள் என் வாழ்வை மாற்றியது என அவர் கூறினார்.இந்த சம்பவம், ஒருதலை காதலின் அழிவுகளை எச்சரிக்கிறது. பெங்களூரில் யாமினி பிரியாங்கா வழக்கைப் போல, இதுவும் சமூகத்தில் பேச்சாக உள்ளது.
நிபுணர்கள்: "மறுப்பை ஏற்க முடியாதவர்கள், உதவி தேட வேண்டும். வெறுப்பு வழியில்லை."இந்த வழக்கு, காதலின் அழகையும், வெறுப்பின் கொடுமையையும் நினைவூட்டுகிறது. ஜெயஸ்ரீ போன்ற பலர், சமூக அநீதிக்கு பலியாகின்றனர். (தகவல்கள்: போலீஸ் வழக்கு ஆவணங்கள், குடும்ப உறுப்பினர்கள்)
Summary in English : In 2014, during her joyous Bhopal wedding to college sweetheart Rohit, 26-year-old doctor Jayshree Naamdev was fatally shot in the neck by cousin Anurag, driven by obsessive, unrequited love. He meticulously planned the attack with a country gun, also targeting Rohit. Caught instantly, sentenced to life in 2015, Anurag suicided on 2019 parole, leaving families shattered.

