இருட்டில் தொங்கும் நிழல்கள்காலை வெயில் ஜிகினி கிராமத்தின் கல்லுபாலு தெருவை மெல்லத் தொட்டது. விடிந்தால் தீபாவளி, வீடுகளில் இனிப்பு வாசம் பரவிக்கொண்டிருந்தது, இளவட்டங்கள், சிறுசுகள் தெருக்களில் பட்டாசுகளை கொழுத்தி போட்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
ஆனால், அந்தச் சிறிய வாடகை வீட்டின் கதவு மூடியே இருந்தது. அக்கம்பக்கத்தினர் என்ன ஆச்சு..? எங்க போனாங்க..? நேத்து கூட, புது துணி எடுக்க போனாங்களே.. என்ன ஆச்சு..? என்று மனசில் ஒரு சிறு சலசலப்பு எழுந்தது.

அந்த வாடகை வீட்டில் குடியிருந்தது. ராகேஷும் சீமாவும், அந்த ஒடிசா ஜோடி, இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தனர்.
எப்போதும் சிரித்துக்கொண்டே வெளியே வருவார்கள் போவார்கள். ஆனால் இன்று? அமைதி. மிகுந்த அமைதி."அம்மா, அந்த வீட்டில் லைட் கூட எரியலயே.. சீமா அக்கா எங்க..? ஊருக்கு போயிட்டாங்களா..?" அம்மாவிடம் கேட்டால் பக்கத்து வீட்டு சிறுமி.
நேரம் நகர்ந்தது. தீபாவளி பண்டிகை.. ஊரே குதூகலமாக இருந்தது.. மாலை நேரமானது.. ஆனாலும் ராகேஷ் சீமாவின் வீட்டின் கதவு திறக்க வில்லை. என்ன.. எதுன்னு பாக்கலாம் என சென்றாள் பக்கத்து வீட்டு மகேஸ்வரி.
கதவு வெளியே பூட்டப்படவில்லை. உள்பக்கம் தாளிடப்பட்டிருக்கிறது. மகேஸ்வரியின் மனதில் ஒரு வித அச்சம் தொற்றுகிறது. கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வந்த மகன் சினிமாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி பைக் ஸ்டாண்டை போட்டான்.
டே.. கண்ணா.. இங்க வாடா.. அழைத்தால் மகேஸ்வரி. என்ன ஆச்சுன்னு பாருடா.. என்னமோ தப்பா படுது என்றால்.
ஊர் முழுக்க வெடி சத்தம். ஆனால், மகேஸ்வரியின் மனதில் மயான அமைதி. என்னமா ஆச்சு.. இரு பாக்குறேன்.. என்று வீட்டின் பின்புறம் சென்றான் கண்ணன். மாலைப்பொழுதை தன்னுடைய பிடிக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தது இருள். மங்கிய வெளிச்சம். வானத்தில் கண்ணை பறிக்கும் வான வேடிக்கைகள்.
வீட்டின் பின் புறம் ஜன்னல் லேசாக திறந்து இருந்தது. ராகேஷ் ப்ரோ.. கேக்குதா.. கதவை திறங்க என்று கூறினான் கண்ணன். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. ஜன்னலை முழுசாக திறந்து பார்த்த கண்ணனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம், ராகேஷ் தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்தான்.
பதறியடித்துக்கொண்டு வீட்டின் முன்பு இருந்த தன்னுடைய தாயிடம் விஷயத்தை சொல்ல, ஊரே களேபரமானது. ஏரியா இளசுகள் எல்லாம் ராகேஷ் வீட்டு ஜன்னலை நோக்கி ஓடினர்.. என்னடா இது..? என்று அதிர்ச்சியில் உறைந்தனர். காவல்துறைக்கு தகவல் பறந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணையை தொடர்ந்தனர்.
அந்த வீட்டின் அருகில் நின்ற முதியவர், தலையில் கையை வைத்து நின்றார். அவரிடம் விசாரித்த போது, ராகேஷ், அந்த செக்யூரிட்டி பையன், போன வாரம் குடித்துக்கொண்டே சீமாவுடன் சண்டை போட்டான் சார். "பணம் இல்ல, கடைசியா ஒரே ஒரு முறை குடிச்சிகிறேன்.. பணம் குடுன்னு.." அந்த பொண்ணு கிட்ட சத்தம் போட்டான். சீமா அழுதுகிட்டே உள்ளே போனாள். ஆனால், அது சாதாரணம்தானே? சின்னஞ்சிறுசுக சண்டைன்னு நெனச்சோம்..
போலீஸ் வந்தபோது, கிராமம் முழுவதும் சோகம் பரவியது. பணத் தகராறு, குடிப்பழக்கம், அடிக்கடி சண்டைகள்... அனைத்தும் ஒரு சஸ்பென்ஸ் போல உருவெடுத்து, இரண்டு உயிர்களை அழித்தது. ஆனால், அந்த இரவில் என்ன நடந்தது? ராகேஷ், குடிப்பதற்கு பணம் கேட்டபோது சீமாவின் கோபம். அவள் தூங்கியபோது, அவன் எடுத்த தீவிர முடிவு. அதிகாலை, அவள் கண்ட அதிர்ச்சி. அது, அவர்களின் காதலின் முடிவு. தூக்கில் தொங்கும் நிழல்கள், கிராமத்தின் அமைதியை என்றும் மாற்றின. தீபாவளி வெடித்தபோது, அவர்கள் இல்லை.
உண்மையில் என்ன நடந்தது..? என்பது விசாரணையில் தெரியவரும்.
Summary : In Kallupalu village near Jigini, Diwali's hush concealed a grim tale. Odisha live-in lovers Rakesh and Seema vanished for days amid growing neighborly suspicion. A window glimpse revealed Seema hanged, Rakesh lifeless beside a liquor bottle. Police suspect suicide from financial rows and his alcoholism, unraveling their passionate bond in shadows of despair.