Posts

Showing posts with the label live-in tragedy

கடைசியா ஒரு முறை.. கெஞ்சிய காதலன்.. மறுத்த காதலி.. விடிந்ததும் அலறிய அக்கம் பக்கத்தினர்.. கொடூர சம்பவம்..

Image
இருட்டில் தொங்கும் நிழல்கள்காலை வெயில் ஜிகினி கிராமத்தின் கல்லுபாலு தெருவை மெல்லத் தொட்டது. விடிந்தால் தீபாவளி, வீடுகளில் இனிப்பு வாசம் பரவிக்கொண்டிருந்தது, இளவட்டங்கள், சிறுசுகள் தெருக்களில் பட்டாசுகளை கொழுத்தி போட்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.  ஆனால், அந்தச் சிறிய வாடகை வீட்டின் கதவு மூடியே இருந்தது. அக்கம்பக்கத்தினர் என்ன ஆச்சு..? எங்க போனாங்க..? நேத்து கூட, புது துணி எடுக்க போனாங்களே.. என்ன ஆச்சு..? என்று மனசில் ஒரு சிறு சலசலப்பு எழுந்தது.  அந்த வாடகை வீட்டில் குடியிருந்தது. ராகேஷும் சீமாவும், அந்த ஒடிசா ஜோடி, இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தனர். எப்போதும் சிரித்துக்கொண்டே வெளியே வருவார்கள் போவார்கள். ஆனால் இன்று? அமைதி. மிகுந்த அமைதி."அம்மா, அந்த வீட்டில் லைட் கூட எரியலயே.. சீமா அக்கா எங்க..? ஊருக்கு போயிட்டாங்களா..?" அம்மாவிடம் கேட்டால் பக்கத்து வீட்டு சிறுமி. நேரம் நகர்ந்தது. தீபாவளி பண்டிகை.. ஊரே குதூகலமாக இருந்தது.. மாலை நேரமானது.. ஆனாலும் ராகேஷ் சீமாவின் வீட்டின் கதவு திறக்க வ...