சென்னை, அக்டோபர் 10 : நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 10 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தீவிர விசாரணையில் உள்ளது.
தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்கள், விசாரணையில் தொய்வு இல்லை என வலியுறுத்தி, சிபிஐ தலையீட்டை எதிர்த்து வாதிட்டுள்ளனர். இரு நீதிபதிகளும் அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பியதால், விசாரணை மேலும் சூடு பிடித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், கரூர் சம்பவத்தின் விவரங்களை விரிவாகக் கேட்டறிந்தனர். தமிழ்நாடு அரசு தரப்பு, "விஜய் அந்த இடத்திற்கு செல்லவில்லை" என்பதை உறுதிப்படுத்தி, சம்பவத்தை விசாரித்த அதிகாரி சிஐயில் புலனாய்வு அனுபவம் கொண்டவர் என வலியுறுத்தியது. "இது ஒரு நல்ல காவல்துறை அதிகாரியின் செயல்" என அரசு வாதிட்டது.
இதே வாதம், ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசு சார்பில் கூறப்பட்டது.மதுரை கிளையில், "விசாரணை ஆரம்பகட்டத்தில் சிபிஐ கோர முடியாது. தொய்வு அல்லது போதாமை கண்டறியப்பட்டால் மட்டுமே மாற்றலாம்" என அரசு வாதம் வைத்தது.
அந்த அமர்வு, கடந்த ஐந்து நாட்களுக்கு முன், உடனடி சிபிஐ உத்தரவு இல்லை என தீர்ப்பளித்தது. இப்போது உச்சநீதிமன்றத்தில் அதே நிலைப்பாட்டை அரசு தக்கவைக்க முயன்று வருகிறது. "இந்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்குமா?" என்பதே தற்போதைய முக்கியக் கேள்வி.
தவெக வழக்கறிஞர்கள், விஜய் குறித்து நீதிமன்றத்தில் கூறப்பட்ட கருத்துக்களை எதிர்த்தனர். "விஜய் எதிர்மனுதாரராகவும் இல்லை. அவரைச் சுட்டிக்காட்டி கருத்து சொல்லக் கூடாது" என வாதிட்டனர். நீதிபதிகளின் பதில்கள், இந்த நிலையை ஓரளவு ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
வழக்கில் மூன்று தரப்பினரும் - தவெக, தமிழ்நாடு அரசு, உயிரிழந்த சிறுவனின் தந்தை - மும்முனைப் போட்டியாக வாதாடுகின்றனர்.சிபிஐக்கு மாற்றினால், சிறப்பு விசாரணைக் குழு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என அரசு எச்சரிக்கை விடுத்தது. சம்பவத்திற்கு காவல்துறை மட்டுமே பொறுப்பல்ல; அமைப்பாளர்களும் பொறுப்பு வகிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியது.
உயிரிழந்த சிறுவனின் தந்தை,நெஞ்சில் ஈரம் இல்லாமல் தமிழக அரசு வாதாடுகிறது. என்னுடைய மகனை பாதுகாக்க வேண்டிய காவல்துறை சம்பவ இடத்தில் எதுவும் செய்யவில்லை. மாநில அதிகாரிகளின் விசாரணையில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே CBI விசாரணை தேவை என வாதிட்டார்.
"காவல்துறை அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிரச்சாரத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்" என மதுரை கிளையில் அரசு வாதம். தவெக தரப்பு, "நாங்கள் திட்டமிட்டு கொலை செய்ய நோக்கம் கொண்டதல்ல. காவல்துறை தடியடி இன்றி கையாளாவிட்டதால் நெரிசல் ஏற்பட்டது" என வாதிட்டது. "தடியடிக்கு முன்னெச்சரிக்கை இன்றி நடத்தப்பட்டது. அதன் பின் கலவர சூழல் வந்தது. மின்சாரமும் நிறுத்தப்பட்டது" என கூறினர்.
அரசு தரப்பு, இதை மறுத்தது. "மின்சாரம் அமைப்பாளர்களின் ஜெனரேட்டர்களால் அணைந்தது; மின்வாரிய இணைப்புகள் பிரகாசமாக இருந்தன" என ஆதாரங்களுடன் காட்டியது. தடியடி குற்றச்சாட்டையும் மறுத்து, "காவலர்கள் ஆம்புலன்ஸ் வழி ஏற்படுத்திய காட்சிகள் மட்டுமே. தொண்டர்களைத் தாக்கும் வீடியோ இல்லை" என காணொளிகளை ஆதாரமாகச் சமர்ப்பித்தது.
தவெக இதுவரை எதிர் ஆதாரங்களை வழங்கவில்லை.ஏடிஜிபி செய்தியாளர் மாநாட்டில், "கரூரில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர். 600-க்கும் அதிகம்" எனத் தெரிவித்தார். உயர்நீதிமன்றங்களிலும் இது உறுதிப்படுத்தப்பட்டது. "வழக்கமாக 50 பேருக்கு ஒரு காவலர்; ஆனால் இங்கு 20-க்கும் குறைவுக்கு ஒரு காவலர் என பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது" என அரசு வாதம்.
"தவெக 12 மணிக்கு தொண்டர்களை அழைத்தது; அனுமதி 3 மணி முதல் 9 மணி வரை" எனவும் சுட்டிக்காட்டியது.இந்த வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்குமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. தவெக, "கரூர் சம்பவத்திற்கு பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம்" என சந்தேகம் தெரிவித்துள்ளது.
விஜய் பாடல் பாடும்போது செருப்பு வீச்சு, அதன் பின் தடியடி, பதற்றத்தில் ஓடியதால் நெரிசல் என தங்கள் வாதத்தை தவெக தக்கவைக்கிறது.வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சிபிஐ தலையீடு ஏற்படுமா என்பது நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தது. தமிழ்நாட்டில் அரசியல்-சட்ட ரீதியான பரபரப்பு தொடர்கிறது.
Summary : Tamil Nadu government's lawyers argued in Supreme Court against transferring Karur rally stampede case to CBI, citing no lapses in ongoing probe by experienced officer. They echoed Madras HC Madurai bench's stance that CBI intervention is premature. TVK (Vijay's party) countered, alleging police lathi charge without warning caused chaos; government refuted with videos showing no targeted attacks. Case hearing continues amid multi-party arguments.