Posts

Showing posts with the label Madurai HC

நெஞ்சில் ஈரம் இல்லாமல்.. குமுறிய குழந்தையை இழந்த தந்தை.. ஆடிப்போன உச்ச நீதிமன்றம்..

Image
சென்னை, அக்டோபர் 10 : நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 10 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தீவிர விசாரணையில் உள்ளது. தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்கள், விசாரணையில் தொய்வு இல்லை என வலியுறுத்தி, சிபிஐ தலையீட்டை எதிர்த்து வாதிட்டுள்ளனர். இரு நீதிபதிகளும் அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பியதால், விசாரணை மேலும் சூடு பிடித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள், கரூர் சம்பவத்தின் விவரங்களை விரிவாகக் கேட்டறிந்தனர். தமிழ்நாடு அரசு தரப்பு, "விஜய் அந்த இடத்திற்கு செல்லவில்லை" என்பதை உறுதிப்படுத்தி, சம்பவத்தை விசாரித்த அதிகாரி சிஐயில் புலனாய்வு அனுபவம் கொண்டவர் என வலியுறுத்தியது. "இது ஒரு நல்ல காவல்துறை அதிகாரியின் செயல்" என அரசு வாதிட்டது. இதே வாதம், ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசு சார்பில் கூறப்பட்டது.மதுரை கிளையில், "விசாரணை ஆரம்பகட்டத்தில் சிபிஐ கோர முடியாது. தொய்வு அல்லது போதாமை கண்டறியப்பட்டால் மட்டும...