கரீம் நகர், அக்டோபர் 28, 2025: தெலங்கானாவின் கரீம் நகரில் கடந்த செப்டம்பர் 17 அன்று நடந்த ஒரு சந்தேகத்திற்கிடமான மரண சம்பவம், தீவிர போலீஸ் விசாரணையில் திட்டமிட்ட கொலை என்பதாக வெளிப்பட்டுள்ளது.
36 வயது இளைஞர் கத்தி சுரேஷை அவரது மனைவி கத்தி மௌனிகா, தனது காதலன் அஜய் உட்பட ஐந்து நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குடும்ப வன்முறை மற்றும் திருமணத்தைத் தாண்டிய உறவு ஆகியவற்றால் தூண்டப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த வாரம் வியாழக்கிழமை (அக்டோபர் 16) போலீசார் மௌனிகா, ஸ்ரீஜா, சிவ கிருஷ்ணா, அஜய், சந்தியா (அலைஞ்சு) ராதா, நல்லா தேவதாஸ் ஆகிய ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
கைதாகியவர்களிடமிருந்து 6 மொபைல் போன்கள், தூக்க மாத்திரைகள், இரத்த அழுத்த மாத்திரைகள் (பிபி மாத்திரைகள்) உள்ளிட்ட குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
சம்பவத்தின் பின்னணி: குடும்ப பிரச்சினைகளின் உச்சம்
கத்தி சுரேஷ், தனியார் டிரைவராக வேலை செய்தவர். அவரது மனைவி மௌனிகா, கடந்த 9 மாதங்களுக்கு முன் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது அஜய் என்பவருடன் அவருக்கு உறவு ஏற்பட்டது. இதனால் சுரேஷ் தொடர்ந்து மௌனிகாவிடம் பணம் கேட்டு துன்புறுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மன உளைச்சலால், அஜயின் அறிவுறுத்தலின் பேரில் மௌனிகா கொலை திட்டத்தைத் தீட்டியதாக போலீசார் கூறுகின்றனர்.
மௌனிகா, தனது தோழி ஸ்ரீஜாவுடன் இணைந்து திட்டத்தைச் செயல்படுத்தினார். ஸ்ரீஜா, பாலியல் தொழிலாளி சந்தியா (அலைஞ்சு) ராதா மற்றும் சிவ கிருஷ்ணா (மெடிக்கல் ஏஜென்சி உரிமையாளர்) ஆகியோரை அறிமுகம் செய்தார். இவர்கள் அனைவரும் சேர்ந்து சுரேஷை மருந்துகள் மூலம் கொலை செய்ய திட்டமிட்டனர்.
தோல்வியுற்ற முதல் முயற்சி: வயாக்ரா மாத்திரை திட்டம்
முதல் முயற்சியில், மௌனிகா சுரேஷுக்கு சமைத்த கறி குழம்பில் 15 வயாக்ரா மாத்திரைகளை கலந்து கொடுத்தார். ஆனால், மருந்தின் துர்நாற்றம் காரணமாக சுரேஷ் அதை உண்ண மறுத்துவிட்டார். இதனால் திட்டம் தோல்வியுற்றது.
வெற்றி பெற்ற இரண்டாவது திட்டம்: தூக்க மாத்திரை மற்றும் நெரிப்புதொடர்ந்து, செப்டம்பர் 17 அன்று மௌனிகா மற்றும் நண்பர்கள் புதிய திட்டத்தை அமல்படுத்தினர். அன்று உடலுறவுக்கு முன், சுரேஷிற்கு மதுவை கொடுத்த மௌனிகா, இதை குடிங்க அப்புறம் பண்ணலாம் என கூறியுள்ளார். மதுபானத்தில் தூக்க மாத்திரைகள் மற்றும் இரத்த அழுத்த மாத்திரைகளை கலந்து கொடுத்தனர்.
மயக்கத்தில் இருந்த சுரேஷின் கழுத்தை மௌனிகா தனது சேலையால் நெரித்து கொலை செய்தார். பின்னர், உடலுறவின் போது சுரேஷ் திடீரென மூச்சுவிட முடியவில்லை என கூறினார். சில நிமிடங்களில் சுயநினைவை இழந்துவிட்டார் எனஉறவினர்களிடம் தெரிவித்து, அவர்களை அழைத்தார்.
உடனடியாக சுரேஷின் உடலை உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. முதலில் சந்தேகத்திற்கிடமான மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணை: உண்மை வெளியானது
கரீம் நகர் டூ டவுன் போலீஸ் நிலையம் தீவிர விசாரணை மேற்கொண்டது. கைதிகளின் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றப்பட்ட சான்றுகளின் அடிப்படையில், கொலை திட்டம் முழுமையாக வெளிப்பட்டது. போலீஸ் கமிஷனர் கவுஸ் ஆலம், "இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை. குடும்ப பிரச்சினைகள் இதற்குக் காரணம்" என்று தெரிவித்தார்.இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்கை தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
Summary in English : In Telangana's Karimnagar, police arrested six, including wife Kathi Maunika and lover Ajay, for the premeditated murder of 36-year-old husband Kathi Suresh. Driven by domestic abuse and an extramarital affair, they drugged his liquor with sleeping pills and strangled him on September 17, after a failed Viagra-laced food attempt. Seized items include phones and medicines.