சென்னை, அக்டோபர் 11: தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கொடூரமான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், அரசியல் மற்றும் சமூக களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
பாதிக்கப்பட்ட உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை கோரி தீவிர வாதங்கள் நடைபெறுகின்றன.

இதில் தமிழக அரசு தரப்பு கால அவகாசம் கோரி தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்டபோது, ரவுடிகள் மற்றும் குண்டர்கள் நிகழ்ச்சியிடம் நுழைந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
600-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக அரசு கூறினாலும், அவர்கள் எங்கு இருந்தனர் என்பது தெரியவில்லை என்கிறார்கள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள். "காவலர்கள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை, பொதுமக்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. அரசும் காவல் துறையும் 'எங்களுக்கு சம்பந்தம் இல்லை' என நழுவுகின்றனர்," என்று ஒரு பாதிக்கப்பட்ட தாய் கண்ணீருடன் கூறினார்.
அரசின் விசாரணையில் உண்மைகள் வெளியாகாது என நம்பிக்கை இல்லை என்று வாதிடும் பாதிக்கப்பட்ட தரப்பு, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோருகிறது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு, "ஒரே இரவில் எத்தனை உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன? அந்த மருத்துவமனையில் எத்தனை பிரேத பரிசோதனை டேபிள்கள் உள்ளன?" போன்ற விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கு பதிலாக, தமிழக அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியுள்ளது. இந்த தாமதம், "அரசும் காவல் துறையும் சம்பவத்திற்கு காரணமாக இருந்தால் உண்மை வெளியாகிவிடும் என அச்சம் தெரிகிறதா?" என்ற கேள்விகளை இணையவாசிகளிடம் எழுப்பியுள்ளது.
தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளும் சிபிஐ விசாரணை கோரி தீவிர போராட்டங்களை அறிவித்துள்ளன. இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள், "நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தை நிறுத்தமாட்டோம்," என உறுதியாகக் கூறுகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் அடுத்த விசாரணை தீர்ப்பு, இந்த விவகாரத்தின் திசையை முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary : In Karur crowd crush tragedy, 41 lives lost at a preaching event. Victims' families and Tamil Nadu Vetri Kazhagam demand CBI probe in Supreme Court, citing rowdies' entry, absent 600 police, and govt denial. Court seeks autopsy details; govt delays reply, sparking suspicions of cover-up. Political ripples intensify. ify.
