கரூர் சம்பவத்தில் உள்ளே நுழைந்த ரவுடிகள்..? மருத்துவமனையில் நடந்தது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!
சென்னை, அக்டோபர் 11: தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கொடூரமான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், அரசியல் மற்றும் சமூக களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை கோரி தீவிர வாதங்கள் நடைபெறுகின்றன. இதில் தமிழக அரசு தரப்பு கால அவகாசம் கோரி தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்டபோது, ரவுடிகள் மற்றும் குண்டர்கள் நிகழ்ச்சியிடம் நுழைந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். 600-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக அரசு கூறினாலும், அவர்கள் எங்கு இருந்தனர் என்பது தெரியவில்லை என்கிறார்கள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள். "காவலர்கள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை, பொதுமக்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. அரசும் காவல் துறையும் 'எங்களுக்கு சம்பந்தம் இல்லை' என நழுவுகின்றனர்," என்று ஒரு பாதிக்கப்பட்ட தாய் கண்ணீருடன் கூறி...