ஆணுறை வாங்க காசு இல்லைன்னு சொன்னான்.. அதுனால.. மனைவியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!

ஹைதராபாத், அக்டோபர் 27 : ஹைதராபாத்தில் உள்ள சைநகர், ஜில்லெல்லெகுடா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஷாலினி, தன் கணவரை கொலை செய்து, அதை விபத்து போல சித்தரித்து ஏமாற்ற முயற்சி செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

மீர்பெட் போலீஸ் நிலைய வரம்புக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.குற்றவாளியாக 26 வயது மதிக்கத்தக்கஷாலினிஐடென்டிஃபை செய்யப்பட்டுள்ளார்.

அவர் தன் கணவர் ரத்னகுமாரை (ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்) இரும்பு ராடில் தாக்கி கொன்றதாகக் கூறப்படுகிறது. தலையில் பயங்கரமான காயம் ஏற்படுத்தி உயிருக்கு துடித்த அவரை பார்த்து ரசித்து அவர் இறந்த பின்பு உடலை சாலையில் கொண்டு வந்து போட்டு அவருடைய இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி விபத்து ஏற்பட்டது போல தோற்றமளிக்க முயன்றார்.

ஆனால், விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த போலீசாருக்கு பலத்த சந்தேகம். சாலையில் விபத்து நடந்த எந்த அறிகுறியும் தெரியவில்லை. வாகனம் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டுள்ளது போல தோன்றுகிறது. போலீஸ் விசாரணையின்போது சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் தெரிய வந்தன.

மரணத்தை சந்தேக மரணமாக கையாண்ட போலீசார் அவரது மனைவி ஷாலினியை இன்டரோகேஷன் செய்ததில், முன்னுக்கு பின் முரணான தகவலை கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் கூறுகையில், "என்னோட வேலை செய்யும் ரமேஷ் என்ற ஒருவருடன் உறவில் இருக்கிறேன். அதை, கண்டு பிடித்து விட்டார்.. இதற்கு தடையாக இருந்தவரை தூங்கும் போது இரும்பு ராடு கொண்டு தாக்கி கொலை பண்ணிட்டேன்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கொடுத்த வாக்குமூலத்தில், கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது எப்போதுமே ஆணுறை அணிந்து கொள்வது வழக்கம் எனவும் கடந்த மாதம் ஆணுறை வாங்க காசு இல்லை என ரமேஷ் கூறினான். உல்லாசமாக இருந்து முடித்த பின், இனிமேல் உன்னால் என்னை விட்டு போகமுடியாது.. நீ கர்ப்பம் ஆகிடுவ என்று கூறினான். அவன் சொன்னது போலவே நான் கர்ப்பமாகி விட்டேன்.

வேறு வழியே தெரியாமல் நான் என் கணவரை கொலை செய்து விட்டேன் என கதறி அழுதுள்ளார்.மீர்பெட் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெறுகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரிகள், "இது போன்ற உறவுகளை தடுக்க, தம்பதிகள் பரஸ்பரம் மனம் திறந்து பேச வேண்டும்" என அறிவுறுத்துகின்றனர்.

Summary in English : In Hyderabad's Sainagar, Jillelleguda, Shalini was arrested for murdering her auto-rickshaw driver husband, Rathna Kumar, with an iron rod. She staged the scene as an accident by placing his body outside their home. Interrogation revealed she acted due to his interference in her affair. Meerpet police have registered a case and are investigating.