Posts

Showing posts with the label iron rod

ஆணுறை வாங்க காசு இல்லைன்னு சொன்னான்.. அதுனால.. மனைவியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!

Image
ஹைதராபாத், அக்டோபர் 27 : ஹைதராபாத்தில் உள்ள சைநகர், ஜில்லெல்லெகுடா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஷாலினி, தன் கணவரை கொலை செய்து, அதை விபத்து போல சித்தரித்து ஏமாற்ற முயற்சி செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். மீர்பெட் போலீஸ் நிலைய வரம்புக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.குற்றவாளியாக 26 வயது மதிக்கத்தக்கஷாலினிஐடென்டிஃபை செய்யப்பட்டுள்ளார். அவர் தன் கணவர் ரத்னகுமாரை (ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்) இரும்பு ராடில் தாக்கி கொன்றதாகக் கூறப்படுகிறது. தலையில் பயங்கரமான காயம் ஏற்படுத்தி உயிருக்கு துடித்த அவரை பார்த்து ரசித்து அவர் இறந்த பின்பு உடலை சாலையில் கொண்டு வந்து போட்டு அவருடைய இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி விபத்து ஏற்பட்டது போல தோற்றமளிக்க முயன்றார். ஆனால், விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த போலீசாருக்கு பலத்த சந்தேகம். சாலையில் விபத்து நடந்த எந்த அறிகுறியும் தெரியவில்லை. வாகனம் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டுள்ளது போல தோன்றுகிறது. போலீஸ் விசாரணையின்போது சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் தெரிய வந்தன. மரணத்தை சந்தேக மரணமாக கையாண்ட போலீசார் அவரது மனைவி ஷாலினியை இன்டரோகேஷன் செய்ததில், முன்னுக்கு பின் ம...

அந்த உறுப்பில் இருந்த நகக்கீறல்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

Image
திருச்சி, செப்டம்பர் 29 : திருவெரும்பூர் ரயில்வே டிராக்கிற்கு அருகில் தனியார் பேருந்து ஓட்டுணரான கே. ரமேஷ்குமார் (50) கொடூரமாக குத்தப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையின் பின்னணியில் ஓட்டுநருக்கும் குற்றவாளியின் மனைவிக்கும் இடையிலான தகாத உறவே உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளாக அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வீரமுத்து (52) மற்றும் அவரது மனைவி லட்சுமி (45) ஆகிய தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் வியாழக்கிழமை இரவு நேரத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ரமேஷ்குமார் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டிற்கு அருகில் வீரமுத்து தம்பதியருடன் சச்சரவு ஏற்பட்டது. தகாத உறவு காரணமாக வீரமுத்து முன்பே ரமேஷ்குமாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், வியாழக்கிழமை இரவு ரமேஷ்குமார் அவரது வீட்டிற்கு வந்ததும், கள்ளக்காதலி லட்சுமியுடன் சண்டையிட்டுள்ளார், மேலும், அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தம்பதியர் ரமேஷ்குமாரைத் தாக்கி, துரத்தியதில் அவர் ரயில்வ...

காதலியை கண்ட இடத்தில் கை வைத்த காதலன்.. உள்ளே நுழைந்த காதலியின் அண்ணன்.. பகீர் CCTV..

Image
ஹாபூர்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள பெப்பர் பீட்சா கடையில் காதலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நகர் கோத்வாலி பகுதியில் உள்ள ஃப்ரீகஞ்ச் சாலையில் அமைந்துள்ள பீட்சா கடையில் ஆகஸ்ட் 7 அன்று நிகழ்ந்தது.சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளின்படி, ஒரு இளம்பெண் தனது காதலனுடன் பீட்சா கடையில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களுடன் கடைக்குள் நுழைந்து, காதலனை இரும்பு கம்பியால் தாக்கத் தொடங்கினார். காதலன் மீது குத்தி, உதைத்து, இரும்பு கம்பியால் அடித்து கடுமையாக தாக்கப்பட்டார். பெண் தனது காதலனை காப்பாற்ற முயன்றபோது, அவரது அண்ணன் அவரையும் தாக்கி, பலமுறை கன்னத்தில் அறைந்தார். இந்த வன்முறைக் காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இந்த சம்பவத்தால் கடையில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் தலையிட்டு மோதலை தடுக்க முயன்றனர், ஆனால் அண்ணனும் அவரது நண்பர்களும் காதலனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இந்...

அலங்கோலமாக கிடந்த 30 வயது பெண்.. உடலில் உயிர் பிரியும் நேரத்தில் 28 வயசு அரக்கர்கள் செய்த கொடூரம்..

Image
காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள திம்மசமுத்திரம் ஊராட்சி, கரியன் கேட் அருகே காந்தி நகரைச் சேர்ந்த இல்லத்தரசி அஸ்வினி (வயது 30), நகை திருட்டு முயற்சியின் போது மர்ம நபர்களால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான தமிழ்வாணன் (வயது 28) என்பவரை பொன்னேரிக்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். நடந்தது என்ன? கடந்த ஜூலை 24 அன்று, அஸ்வினி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, இரவு கரியன் கேட் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். அவரது கணவர் ஜெய் சுரேஷ், செங்கல்பட்டில் விடுதி காப்பாளராகப் பணிபுரிவதால், அஸ்வினி பெரும்பாலும் தனது இரு குழந்தைகளுடன் (11 வயது மகள் மற்றும் 2 வயது மகன்) வையாவூர் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். ஆனால், அன்று இரவு தனது வீட்டில் தனியாக இருந்தார்.மறுநாள் நண்பகல் ஆகியும் அஸ்வினி திரும்பாததால், செல்போன் 'ஸ்விட்ச் ஆஃப்' ஆக இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரது வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்ப...