உடலுறவின் போது மனைவியின் உள்ளாடையை பார்த்து ஷாக் ஆன கணவன்.. CCTVயால் உடைந்த ரகசியம்..

இடுக்கி, அக்டோபர் 1, 2025 : கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தை சில மாதங்களுக்கு முன் உலுக்கிய ஒரு கொலை சம்பவம், பாலம் ஒன்றின் அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 40 வயது அச்சுதன் என்ற சிற்றுண்டி உணவக உரிமையாளரின் மரணம்.

இதற்கு பின்னால், 'வடிவேலு' வசனத்தை நினைவூட்டும் கடுமையான திருப்பங்கள் மறைந்திருந்தன. "ஊராடா இது..? இவன் பொண்டாட்டிய அவன், வெச்சிருக்கேன்றான்... அவன் பொண்டாட்டியை இவன் வெச்சிருக்கேன்றான்!" என்ற வடிவேலு காமெடி ஒன்றை கேள்வி பட்டிருப்பீர்கள். அது தான், இந்தக் கொடூர கதையின் சாராம்சம்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்தக் கிரைம் கதை, இடம் மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இருந்தாலும், அதன் தீவிரத்தை மறைக்க முடியாது.

வாங்க கதைக்குள்ள போகலாம், இடுக்கி மாவட்டத்தில், அச்சுதன் மற்றும் அவரது மனைவி கேசவி தம்பதியினர், டவுனுக்குள் முக்கியமான பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட சிற்றுண்டி உணவகங்களை நடத்தி, இட்லி-பரோட்டா-துரித உணவுகளால் பணக்காரர்களாக வாழ்ந்து வந்தனர்.

அவர்களின் உணவகங்களுக்கு 'தனி மவுசு' உருவானது. இதனால், அவர்களின் காட்டில் பண மழை தான். ஆனால், "பணம் ஒரு இடத்தில் இல்லாமல் போனாலும் பிரச்சனை, அதிகமாக இருந்தாலும் பிரச்சனை" என்ற ஊர் சொல்லாடல் போல, அச்சுதனின் மனநிலை தடுமாறத் தொடங்கியது.

அந்தத் தடுமாற்றத்தின் பிளம்பாகத் தான், அவரது வீட்டிற்கு அருகில் வாடகைக்கு வந்த கோபாலகிருஷ்ணன் தம்பதி நுழைந்தனர்.கோபாலகிருஷ்ணன், அச்சுதனின் 'நெருங்கிய நண்பர்' என்று அறியப்பட்டவர். அவரது மனைவி மீரா, கேசவியுடன் 'அக்கா-தங்கை' போல பழகினார்.

பள்ளி விடுமுறையில் குழந்தைகளுடன் கேசவி பெற்றோர் வீட்டிற்குச் சென்றபோது, தனிமையில் இருந்த அச்சுதனுக்கு மீரா உணவு சமைத்துக் கொண்டுவந்தார்.

"அக்கா ஊருக்கு போயிருக்காங்க, வருவதுக்கு ஒரு வாரம் ஆகும். அதுவரைக்கும் கடையில் சாப்பிட்டு உடம்பைக் கெடுக்காதீங்க" என்று அவர் கூறியது, அச்சுதனின் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தியது.

ஒரு நாள், உணவு கொண்டு வந்த மீராவை வீட்டில் அமர வைத்து, "உன்னை எனக்கு பிடித்திருக்கு... நீ அழகா இருக்க..." என்று அச்சுதன் நேரடியாகக் கூறி, மீராவின் தொடையில் கை வைத்தார். பதறிய மீரா கையைத் தட்டியது போதும், அச்சுதன் "இரவு உணவு கொண்டு வரும் போது சொல்லு" என்று 'காதல் ரசம்' சொட்டினார்.

அன்றிரவே மீரா உணவுடன் வந்தார். அச்சுதனின் செல்வம் மற்றும் செல்வாக்கு, மீராவை மயக்கின. ஆறு மாதங்களில் 50 சவரன் நகை, ஒரு கார் – அனைத்தையும் அச்சுதன் வாங்கிக் கொடுத்தார். கணவன் கோபாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பும்போது, "தாய்வீட்டு சொத்து வித்ததா கிடைச்சது" என்று மீரா நம்ப வைத்தார்.

ஊருக்கும், கேசவிக்கும் சந்தேகம் இல்லை.ஆனால், கேசவியின் தனிமை அதிகரித்தது. 27 வயது, உடற்பயிற்சி செய்யும் 'வாட்ட சாட்டமான' கோபாலகிருஷ்ணன் மீது அவருக்கு ஈர்ப்பு வந்தது. மீரா கேசவியின் வீட்டுக்கு வருவது போல, கேசவியும் அடிக்கடி அவர்களது வீட்டுக்கு செல்லும் பழக்கத்தில், கோபாலகிருஷ்ணனுக்கும், கேசவிக்கும் கள்ளத்தொடர்பு மலர்ந்தது.

இப்போ தெரிகிறதா..? பதிவின் தொடக்கத்தில் வடிவேலு காமெடி நினைவுக்கு வந்த விஷம். இங்கு தான் பிரச்சனையே தொடங்கியது, அச்சுதன், தனது கள்ளக்காதலி மீராவுக்கு விலை உயர்ந்த உள்ளாடை ஒன்று வாங்கிக் கொடுத்தார்.

சில நாட்களுக்குப் பின், அச்சுதன்-கேசவி தம்பதியின் திருமண நாள். ஒவ்வொரு திருமணநாளின் போதும், முதலிரவு போல படுக்கையறையை அலங்கரித்து அன்றைய இரவை கொண்டாடுவது அவர்களின் வழக்கம்.

அது போலவே, அன்றும் அனைத்தையும் தயார் செய்து வைத்து தன்னுடைய மனைவி கேசவியுடன் இரவை உறவுடன் கொண்டாட தயாரானான். வேலைகள் வேகமெடுக்கின்றன. சரசரவென ஆடைகள் பறந்து சென்று தரையில் விழுகின்றன. வெறும் உள்ளாடையுடன் வெக்கப்பட்ட கேசவியை கண்ட அச்சுதன் அதிர்ந்து போனான். உடலில் காய்ச்சல் அடிப்பது போன்ற உணர்வு.

ஆம், பக்கத்து வீட்டு மீராவுக்கு பரிசாக கொடுத்த அதே உள்ளாடை மனைவி கேசவி அணிந்திருப்பதைபார்த்து அச்சுதன் அதிர்ந்து போனான்!

இந்த உள்ளாடை உனக்கு எப்படி கிடைச்சது என கேட்க முயன்றான் அச்சுதன். ஆனால், அதை மனதில் வைத்துக்கொண்டு, மேற்படி சமாச்சாரங்களில் மூழ்கினான். காலைப்பொழுது விடிந்தது.

அவசர அவசரமாக அந்த உள்ளாடையின் பெட்டியை கண்டு பிடித்து அதில் இருந்த ஆன்லைன் ஆர்டர் ID-ஐப் பார்த்து இது மீராவுக்கு வாங்கி கொடுத்த அதே உள்ளாடை தான் என உறுதிப்படுத்திய அச்சுதன், மீராவிடம் விசாரித்தார். "நான் பத்திரமா வச்சிருக்கேங்க.. அடுத்த முறை நான் அதை போட்டுக்கிட்டு வரேன்.." என்று மீரா சிணுங்கினாள்.., ஆனால், சந்தேகம் தோன்றியது. ரகசிய CCTV பொருத்தி கண்காணித்த அச்சுதனுக்கு, இன்னும் பெரிய அதிர்ச்சி!

ஹோட்டலுக்குச் சென்றபோது, மீராவின் கணவன் கோபாலகிருஷ்ணன் தனது மனைவி கேசவியுடன் தகாத உறவில் இருப்பதைப் பார்த்தார். அச்சுதன் கேசவியிடம் சண்டை போட்டார்.

ஆனால், கேசவியின் பதில் இடியாய் விழுந்தது: "நீங்கள் கோபாலகிருஷ்ணனின் மனைவி மீராவுடன் தகாத தொடர்பில் இருக்கிறீர்கள். நான் அவருடன் இருக்கிறேன். நீங்கள் செய்வது சரி என்றால், நான் செய்வதும் சரிதான்!" என்று அவர் இடியை இறக்கினார்.

இந்தக் கோபத்தில், கேசவி மற்றும் கோபாலகிருஷ்ணன் சேர்ந்து கொடூரமான திட்டத்தைத் தீட்டினர். அச்சுதனை கொலை செய்து, உடலை காரில் ஏற்றிச் சென்று பாலத்தின் கீழே போட்டுவிட்டனர்.காவல்துறையின் கடின விசாரணையில், ஆரம்பத்தில் கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டான்.

ஆனால், அவரது வாக்குமூலத்தால் வெளிப்பட்ட உண்மை, சினிமாவை மிஞ்சியது. தற்போது, கேசவி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு, ஆயுள் தண்டனைக்குக் காத்திருக்கின்றனர்.

மீரா? அவர் இந்தக் குடும்ப அழிவின் மத்தியில் திகைத்து நிற்கிறார்.இந்தச் சம்பவம், கேரளாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பணம், வசதி, தகாத உறவுகள் – அனைத்தும் ஒரு கொலையின் விதையாக மாறிய கதை இது. "ஊராடா இது..? என்று வடிவேலுவின் காமெடி வசனத்தை நினைவு கூறுகிறோம்..", ஆனால் உண்மை வாழ்க்கை சில சமயம் சினிமாவை விடக் கடுமையானது என்பதை இது நிரூபிக்கிறது.

Summary : In Idukki, Kerala, businessman Achuthan was murdered and dumped under a bridge. His wife Kesavi and neighbor Gopalakrishnan, entangled in a cross-affair—Achuthan with Gopal's wife Meera, and Kesavi with Gopal—plotted the killing after Achuthan discovered their betrayal via a gifted lingerie. Police arrested the lovers, who face life imprisonment. A tale of greed, lust, and shocking twists.