KTM பைக்கை மின்னல் வேகத்தில் ஓட்டிய காதலி.. சிதறிய காதலன்.. இரு உயிர்களும் துடிதுடித்து நின்ற கொடூர காட்சி.. வீடியோ..!

ஈரோடு, அக். 2 : ஈரோடு மாவட்டம் பவானி அருகே தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், கேடிஎம் டியூக் பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பைக்கில் பயணித்த இளம்பெண் உள்ளிட்ட இருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பவானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதநல்லூர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஈரோட்டிலிருந்து மேட்டூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுநர் சசிகுமார் இயக்கி வந்தார்.

அப்போது, எதிர்த்திசையில் அதிவேகமாக வந்த கேடிஎம் டியூக் பைக்கை இளம்பெண் ஒருவர் ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார்.வரதநல்லூர் பிரிவு பகுதியில் திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து, நேருக்கு நேராக பேருந்தின் மீது மோதியது.

இதில், இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்த போதிலும், பைக்கை ஓட்டி வந்த இளம்பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் பலத்த காயங்களுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சில நிமிடங்களிலேயே அவரும் உயிரிழந்தார்.விபத்து குறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததையடுத்து, பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்களின் அடையாளம் தொடர்பாக விசாரித்த போது, அவர்கள் கொண்டு வந்த பைகளை பரிசோதித்தனர்.அதில், இளம்பெண் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (வயது 24) என்பதும், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

அவரது ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு உறவினர்களைத் தொடர்பு கொண்ட போது, அவர் பெங்களூருவில் வேலை செய்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டது.பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தேஜஸ் (வயது 27) என்பதும், அவர் பிசியோதெரபி மருத்துவராக பெங்களூருவில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றி வந்தவர்கள் என்பதும், கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை ஒட்டி சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் பைக்கின் அதிவேகம் மற்றும் கட்டுப்பாட்டிழப்பே காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary in English : In Erode district near Bhavani, a government bus from Erode to Mettur collided head-on with a speeding KTM Duke bike on Thoppur national highway. Bike rider Jayshree (24) from Nilgiris died instantly, while her passenger Tejas (27) from Kerala succumbed to injuries soon after. The Bangalore-based colleagues and lovers were heading home for Ayudha Pooja holidays.