KTM பைக்கை மின்னல் வேகத்தில் ஓட்டிய காதலி.. சிதறிய காதலன்.. இரு உயிர்களும் துடிதுடித்து நின்ற கொடூர காட்சி.. வீடியோ..!
ஈரோடு, அக். 2 : ஈரோடு மாவட்டம் பவானி அருகே தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், கேடிஎம் டியூக் பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பைக்கில் பயணித்த இளம்பெண் உள்ளிட்ட இருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பவானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதநல்லூர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஈரோட்டிலிருந்து மேட்டூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுநர் சசிகுமார் இயக்கி வந்தார். அப்போது, எதிர்த்திசையில் அதிவேகமாக வந்த கேடிஎம் டியூக் பைக்கை இளம்பெண் ஒருவர் ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார்.வரதநல்லூர் பிரிவு பகுதியில் திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து, நேருக்கு நேராக பேருந்தின் மீது மோதியது. இதில், இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்த போதிலும், பைக்கை ஓட்டி வந்த இளம்பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் பலத்த காயங்களுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சில நிமிடங்களிலேயே அவரும் உயிரிழந்தார்.விபத்து குறித...