மனைவி சீரியல் கில்லர் என தெரியாமலே என்று தெரியாமலே 10 வருஷம் குடும்பம் நடத்திய கணவன்.. அடுத்து நடந்தது என்ன..?

கேரளா: கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாய் கிராமத்தில், ஒரு சராசரி குடும்பத்தின் மருமகளாக காலடி எடுத்து வைத்த ஒரு பெண், அதிகார ஆசைக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும், கடந்த 17 ஆண்டுகளில் ஆறு குடும்ப உறுப்பினர்களை கொன்று புதைத்த அதிர்ச்சி சம்பவம், 2019-ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது.

ஒரு திருமணத்தில் தொடங்கிய விஷம், ஆறு உயிர்களைப் பலிவாங்கிய கோரமான உண்மை மற்றும் எப்படி யாருக்கும் சந்தேகம் வராமல் ஆறு பேரை அடுத்தடுத்து தீர்த்து கட்டினால் இந்த பெண் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அதற்கு முன் இதுபோன்ற கிரைம் செய்திகளை தெரிந்து கொள்ள நம்முடைய கிரைம் தமிழகம் என்ற டெலிகிராம் சேனலை பின் தொடருங்கள் சேனலின் லிங்க் பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

1997: ஆசையின் ஆரம்பம்

1997-ஆம் ஆண்டு, கூடத்தாய் கிராமத்தில் உள்ள ஒற்ற மலை சர்ச் ஒன்றில், ஜோலி ஜோசப் மற்றும் ராய் தாமஸ் ஆகியோருக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளையின் குடும்பம், "பொன்னமட்டம் குடும்பம்" என்று அழைக்கப்படும் மரியாதைக்குரிய, வசதியான, படித்த குடும்பம்.

ஆனால் மணமகன் ராயின் தந்தை டாம் தாமஸுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அவர் மனம் ஏதோ தவறு நடப்பதாக உணர்ந்தது. அவரது உள்ளுணர்வு சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தத் திருமணம் தான் அந்த ஆறு தொடர் மரணங்களுக்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தது.

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஜோலியின் ஒரே ஆசை, செல்வம் கொழிக்கும் ஒரு வீட்டில், அதிகாரத்துடன் வாழ வேண்டும் என்பதே. தனது போஸ்ட் கிராஜுவேட் பட்டம் குறித்துப் பொய் சொல்லி, வசதியான பொன்னமட்டம் குடும்பத்தின் மருமகளானாள்.

அதிகாரம் நோக்கிய முதல் அடியும் இரண்டு மரணங்களும்

திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே, ஜோலிக்கு தனது மாமியார் அண்ணம்மா தாமஸால் (Roy's Mother) சிக்கல் வந்தது. அண்ணம்மா, மருமகள் ஜோலி நல்ல படித்தவர் என்பதால், வேலைக்குச் சென்று குடும்ப நிதிக்கு உதவ வேண்டும் என்று வற்புறுத்தினார்.

ஆனால், ஜோலி படிக்கவில்லை என்ற உண்மை இதன் மூலம் வெளிப்பட்டுவிடும் என்பதால், ஜோலி அதிலிருந்து தப்பிக்க நினைத்தாள்.

2002: ஒரு நாள் காலை, அண்ணம்மா குடித்த சூப்பில் சயனைடை கலந்தார் ஜோலி. சூப்பைக் குடித்த அண்ணம்மா வாயில் நுரை தள்ளி, துடிதுடித்து இறந்தார். குடும்பத்தினர் இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் என்று கருதியதால், போஸ்ட்மார்ட்டம் செய்யப்படாமல் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அண்ணம்மா இறந்த பிறகு, தன்னை வேலைக்கு போக சொல்ல ஆள் இல்லை மேலும், வீட்டின் முழு அதிகாரமும் தன் கைக்கு வந்துவிட்டதாக ஜோலி மகிழ்ந்தார்.

2008: ஜோலியின் மாமனார் டாம் தாமஸ் (Roy's Father), ஜோலியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். அவள் அடிக்கடி ஒரு 'எம்.எஸ். மேத்யூ' என்பவருடன் தொலைபேசியில் பேசுவதையும், அவர் அடிக்கடி வீட்டுக்கு வருவதையும் கண்டித்தார்.

தன்னை எதிர்த்த மாமனாரை ஒழிக்க முடிவு செய்த ஜோலி, அவர் வழக்கமாக உட்கொள்ளும் 'மஷ்ரூம் கேப்சூல்' மாத்திரையை திறந்து அதற்குள் சயனைடை கலந்து வைத்தார். அந்த மாத்திரையை உட்கொண்ட மாமனாரும் துடிதுடித்து இறந்தார். வயது முதிர்வு காரணமாக இறந்திருக்கலாம் என்று கருதி, அவரது உடலும் போஸ்ட்மார்ட்டம் இன்றி அடக்கம் செய்யப்பட்டது.

கணவரின் மரணமும் சயனைடு ரகசியமும்

ஜோலியின் அடுத்த இலக்கு, சொத்துக்களை முழுவதுமாக அபகரிப்பது. இதற்காக அவள் போலியான உயில் ஒன்றை தயார் செய்தாள். ஆனால், ராயின் சகோதரி ரெஞ்சி சட்ட நுணுக்கங்களைச் சுட்டிக்காட்டி அந்தப் பத்திரத்தைச் செல்லாததாக்கினார். இதற்கிடையில், ராயின் பிசினஸ் தோல்வியடைந்து அவர் வேலையில்லாமல் வீட்டிலேயே இருக்க நேர்ந்தது.

2011 (கணவர் ராய் தாமஸ் மரணம்): வேலையற்ற கணவரை ஜோலி இழிவாகப் பேச, இருவரும் சண்டையிட்டனர். மேலும், ராயும் தந்தையைப் போல ஜோலியின் கள்ள உறவைக் கவனிக்க ஆரம்பித்து, அவளைக் கண்டித்தார். தன்னைத் தடுத்த கணவரையும் போட்டுத்தள்ள முடிவெடுத்த ஜோலி, அவருக்குப் பிடித்த கடலை குழம்பில் சயனைடு கலந்தார்.

குழம்பைச் சாப்பிட்ட ராய், தொண்டை கரிக்க வாந்தி எடுக்க பாத்ரூமுக்கு ஓடினார். உள்ளே சென்றவர், நுரை தள்ளி அங்கேயே இறந்து கிடந்தார்.இந்த முறை, ராயின் மாமா மேத்யூ (அண்ணம்மாவின் தம்பி) விடவில்லை. இது திடீர் மரணம் என்பதால், போஸ்ட்மார்ட்டம் செய்ய வற்புறுத்தினார்.

போஸ்ட்மார்ட்டம் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது: ராயின் வயிற்றில் சயனைடு இருந்தது தெரியவந்தது. ஆனால், ஜோலி கடந்த சில நாட்களாகவே, வேலை இல்லை, கடன் அதிகமாகிடுச்சு, நான் சாகப்போறேன்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு சார்.. இப்படி பண்ணுவாருன்னு எதிர்பாக்கல் சார்.. என்று கதறி அழுது கடன் தொல்லையால் அவர் செய்த தற்கொலை என்று கதை கட்டி, காவல்துறையை நம்பவைத்தார். ராயின் மரணம் தற்கொலையாகப் பதியப்பட்டு, கோப்பு மூடப்பட்டது.

2014: புதிய இலக்கும் இரட்டைப் படுகொலையும்

தன் கணவரின் மரணத்தின் பின்னணியைக் கண்டறிந்த மாமா மேத்யூ, ஜோலியைப் பின்தொடர்ந்து, அவரது கள்ள உறவு குறித்தும் அறிந்துகொண்டார். தன்னுடைய அடுத்த பிளான்களை மாமா மேத்யூ கெடுத்துவிடுவார் என்று பயந்த ஜோலி, அவரையும் தீர்த்துக்கட்ட முடிவெடுத்தார்.

2014 (மாமா மேத்யூ மரணம்): மேத்யூவும் சயனைடு விஷத்தால் கொல்லப்பட்டார். அவரது மரணமும் மாரடைப்பு என்று கூறி அடக்கம் செய்யப்பட்டது.

ஜோலியின் அடுத்த ஆசை: பணக்காரரும் நல்ல வேலையில் இருப்பவருமான சாஜுவை திருமணம் செய்துகொள்வது. ஆனால், சாஜுவுக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். சாஜுவை அடைய, சாஜுவின் மனைவி சிலி ஷாஜுவையும் அவரது குழந்தைகளையும் கொல்லத் திட்டமிட்டாள்.

2014 மே 1 (குழந்தை ஆல்ஃபின் ஷாஜு மரணம்): சாஜுவின் இரண்டாவது மகளின் முதல் திருநற்கருணை (Holy Communion) நிகழ்ச்சியின்போது, ஜோலி குழந்தையைத் தன் கையில் வைத்துக்கொண்டு, அவள் அழுததால், பாட்டிலில் இருந்த பாலில் யாருக்கும் தெரியாமல் சயனைடைக் கலந்து கொடுத்தார். பாலைக் குடித்த குழந்தை ஆல்ஃபின், துடிதுடித்து நிகழ்விடத்திலேயே இறந்தாள்.

2016 (சிலி ஷாஜு மரணம்): மகளின் மரணத்தால் ஆழ்ந்த மனச்சோர்வில் இருந்த சிலி ஷாஜுவிடம், ஜோலி பரிவுடன் பழகி, 'ஸ்ட்ரெஸ் நீங்க மஷ்ரூம் கேப்சூல்' சாப்பிடும்படி யோசனை கூறினார். தன்னுடைய மாமனாருக்கு கொடுத்த கேப்சூலை போல மாத்திரையில் சயனைடை நிரப்பி சிலிக்கு ஜோலி சயனைடு கலந்த கேப்சூலைக் கொடுத்தார். அதை உட்கொண்ட சிலி, அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார். ஆனால், சிலியின் கணவர் ஷாஜூவுக்கு மனைவி இறந்துவிட்டத்தில் பெரிய வருத்தம் இல்லை. ஏனென்றால், ஜோலி ஜோசப் உடன் கள்ள உறவில் இருப்பதால், இதனால் மனைவி சிலியின் உடலும் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படாமல் புதைக்கப்பட்டது.

2017: சிலி இறந்த ஓராண்டிற்குள், சாஜுவும் ஜோலி ஜோசப்பும் திருமணம் செய்து கொண்டனர்.

2019: அறுந்த சங்கிலியின் முடிச்சு

தொடர்ச்சியான, மர்மமான மரணங்கள், குறிப்பாக ராயின் மரணத்துக்குப் பின் ஜோலியின் அதீத சொத்து ஆசை, ரெஞ்சிக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ராயின் மாமா மேத்யூவும் இந்தத் தொடர் மரணங்களில் கொல்லப்பட்ட பிறகு, ரெஞ்சி துப்பறியும் வேலையில் இறங்கினார்.

ராய் தாமஸின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை மீண்டும் எடுத்துப் படித்த ரெஞ்சி, முக்கிய முரண்பாட்டைக் கண்டறிந்தார். ராயின் வயிற்றில் செரிக்காத உணவுடன் சயனைடு இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ராய் இரவு சாப்பிடவில்லை என்று ஜோலி கூறியதற்கு இது முற்றிலும் முரணாக இருந்தது. அதாவது, இரவு உணவில்தான் விஷம் கலக்கப்பட்டுள்ளது என்பதை ரெஞ்சி உணர்ந்தார்.ரெஞ்சி அளித்த புகாரின் பேரில், 2019-ஆம் ஆண்டு போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

  1. பொய் அம்பலம்: ஜோலி வேலை பார்ப்பதாகச் சொன்ன என்.ஐ.டி. கல்லூரிக்குச் சென்று விசாரித்தபோது, ஜோலி அங்கு வேலை பார்க்கவில்லை என்பதும், அவர் போஸ்ட் கிராஜுவேட் படிக்கவே இல்லை என்பதும், அவர் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் போலி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
  2. உடல் தோண்டல்: கேரள வரலாற்றில் முதல்முறையாக, தொடர் கொலை வழக்குகளின் முடிச்சைக் கண்டுபிடிக்க, புதைக்கப்பட்ட ஆறு பேரின் உடல்களும் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
  3. கைது மற்றும் வாக்குமூலம்: ஆதாரங்கள் வலுவான நிலையில், 2019-ஆம் ஆண்டு ஜோலி ஜோசப் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் ஆறு பேரையும் சயனைடு கொடுத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். தங்கத்தை பாலிஷ் செய்ய சயனைடு வைத்திருந்த, அவரது கள்ள உறவுத் துணையான எம்.எஸ். மேத்யூ (MS Mathew - வேறொரு நபர்) என்பவரிடம் இருந்து தான் விஷத்தைப் பெற்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

ஜோலியின் வீட்டைச் சோதனையிட்டதில், சமையலறையில் ஒரு டப்பாவில் சயனைடு பவுடர் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதிகார ஆசை, ஆடம்பரம் மற்றும் பொய்களை மூடி மறைக்க ஜோலி ஜோசப் மேற்கொண்ட இந்தக் கொடூரத் தொடர் கொலைகள், கேரளாவையே உலுக்கிய ஒரு வரலாற்றுச் சோகமாக அமைந்தது.

Summary : Jolly Joseph, a woman driven by greed and a desire for a luxurious life, executed a horrifying series of six murders in Koodathayi, Kerala, between 2002 and 2016. She poisoned her family members, including her mother-in-law, father-in-law, and husband, with cyanide to gain control of the property and conceal her fake academic identity.

Her deceit was uncovered when her sister-in-law detected discrepancies, leading to the exhumation of the bodies and her arrest in 2019. (49 words)