திருப்பத்தூர் / பெங்களூரு: மிக்சர் (இனிப்பு) கடை உரிமையாளரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததால் வேலையிழந்த இளைஞர், உறவைத் தொடர்ந்ததால் உயிரையும் இழந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த 35 வயது அல்போன்ஸ் என்பவர் பெங்களூரு கே.பி. அக்ரஹாரம் பகுதியில் இனிப்பு மிக்சர் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தக் கடையில் கடந்த 4 ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்டம் கே.பி. அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பவன்குமார் மற்றும் அவரது தம்பி ஆகியோர் மிக்சர் தயாரிக்கும் பணியில் (மாஸ்டர்) ஈடுபட்டு வந்தனர்.

செய்யும் வேலையை விட்டுவிட்டு செய்யக்கூடாத வேலையை செய்ததால் தனக்கு வேலை கொடுத்த முதலாளியின் மனைவியை வேட்டையாடியுள்ளான் பவன் குமார். இதன் காரணமாக, அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரங்கள், அதிர்ச்சியின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்.
அதை தெரிந்து முன் இதுபோன்ற கிரைம் செய்திகளை தெரிந்து கொள்ள நம்முடைய கிரைம் தமிழகம் என்ற டெலிகிராம் சேனலை பின் தொடருங்கள் சேனலின் லிங்க் பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பவன்குமாருக்கும் கடை உரிமையாளர் அல்போன்ஸின் மனைவி சத்யா (வயது 30)வுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் இனிமை கண்டு வந்துள்ளனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்புஒருநாள் திடீரென் வீடு திரும்பிய அல்போன்ஸ் பவன் குமாருடன் தன் மனைவி சத்யா உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ந்து போயுள்ளார். செய்வதறியாத திகைத்த அல்போன்ஸ் மனைவி சத்யா கொடூரமாக தாக்கி, திட்டியுள்ளார், மேலும், அண்ணன்-தம்பி இருவரையும் வேலையை விட்டு நீக்கினார்.

வேலையிழந்த பவன்குமார், திருப்பத்தூர் மாவட்டம் குறிசிலாப்பட்டு அருகே உள்ள மாரிமாணிக்குப்பம் தோட்டிக்குட்டை கிராமத்தில் உள்ள தனது பாட்டி மீராபாய் வீட்டில் தங்கியிருந்தார்.
இருப்பினும், வேலையை விட்டு நீக்கிய பிறகும்பவன்குமார்,சத்யாவுடன் போனில் தொடர்ந்து பேசி வந்ததோடு, அல்போன்ஸ் கடைக்குச் சென்ற பிறகு வீட்டுக்கு வந்து தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கொதித்த அல்போன்ஸ், மனைவி சத்யாவை கண்டித்ததுடன் கொடூரமாக தாக்கியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக, கட்டிய கணவன் மீது, சத்யா கொடுத்த புகாரின் பேரில் அல்போன்ஸ் மீது பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர்.

பவன்குமார் தூண்டுதலால்தான் மனைவி போலீசில் புகார் அளித்ததாக நம்பிய அல்போன்ஸ், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டார்.பவன்குமார் எங்கிருக்கிறார் எனத் தெரியாததால், அவரது தம்பியை பெங்களூருவில் காரில் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி விசாரித்தார்.
தம்பி கொடுத்த தகவலின் பேரில் திருப்பத்தூர் வந்த அல்போன்ஸ், தனியார் திருமண மண்டபத்தில் தம்பியைத் தங்க வைத்துவிட்டு, நண்பர்கள் 3 பேருடன் அதிகாலை 5 மணியளவில் பாட்டிமீராபாய்வீட்டுக்குச் சென்றார்.

கதவைத் தட்டியதும் வெளியே வந்த பவன்குமாரை மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு காரில் தப்பியது அல்போன்ஸ் கும்பல். இரத்த வெள்ளத்தில் துடித்த பவன்குமாரை உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தாக்குதலில் பவன்குமாரின் தம்பி சந்தோஷ்குமாரும் காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த குறிசிலாப்பட்டு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டிஎஸ்பி சௌமியா தலைமையிலான தனிப்படை அமைத்து அல்போன்ஸ் உள்பட 4 பேரைத் தேடி வருகிறது.

இனிப்புக் கடை ஊழியரின் தகாத உறவால் ஏற்பட்ட இந்தக் கொலை, திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary : A 19-year-old mixer worker, Pavan Kumar, was murdered by his Bengaluru employer Alphonse (35) after having an affair with the owner's wife Sathya. Fired four months ago, Pavan continued the relationship, enraging Alphonse. He tracked Pavan to Tirupattur, stabbed him at his grandmother's house and fled. Police are hunting the accused.

