“+2 மாணவி கொடூர கொலஐ.. முக்கிய காரணம் இது தான்..” இதை யாருமே வெளிய சொல்லல.. வெளியான பகீர் தகவல்..

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன் மகள் ஷாலினி (வயது 17). இவர் ராமேஸ்வரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார்.

நவம்பர் 19, 2025 காலை சுமார் 8.30 மணியளவில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் (வயது 21) என்ற இளைஞர் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தினார்.

கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் ஏற்பட்ட காயங்களால் சம்பவ இடத்திலேயே ஷாலினி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

ஒருதலைக்காதல் தான் காரணம்

கடந்த இரு வருடங்களாக முனியராஜ் ஷாலினியை ஒருதலைப்பட்சமாக காதலித்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஷாலினி தனது தந்தை மாரியப்பனிடம் தெரிவித்தார். மாரியப்பன் முனியராஜை எச்சரித்தும் அவர் நிறுத்தவில்லை.

கொலை நடந்த நாளில் "கடைசியாக பேசிவிட்டு இனி தொல்லை கொடுக்க மாட்டேன்" என்று கூறி ஷாலினியை அழைத்து, ஆத்திரத்தில் கத்தியால் வெட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த உடன் அக்கம் பக்கத்தினர் ஷாலினியை மோட்டார் சைக்கிளில் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

கொலையாளி முனியராஜ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். பின்னர் ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுதி இளைஞரின் பகீர் தகவல்

சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் இளைஞர் ஒருவர் ஊடகங்களிடம் பேசுகையில், "இது போன்ற காதல் பிரச்சனை இரு வருடங்களாக நடந்து வருகிறது. வீட்டார் சரியாக கவனிக்கவில்லை, ஊர் கட்டுப்பாடும் இல்லை. சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா போதைப் பொருட்கள் சுலபமாக கிடைப்பது தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம்.

போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தால் எதுவும் நடக்காது போன்ற சூழல் நிலவுகிறது. காதல் + போதை தான் முக்கிய காரணங்கள்" என்று அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இச்சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும், போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

"போலீசாருக்கு போதை விற்பனையாளர்கள் மீது பயம் இல்லை" என்றும் குற்றம்சாட்டியுள்ளது.இதேபோல் இப்பகுதியில் முன்பும் பள்ளி மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary : A 17-year-old +2 student, Shalini, was brutally stabbed to death in Rameswaram on November 19, 2025, by 21-year-old Muniyaraj over rejected one-sided love. The attack happened at 8:30 AM while she was heading to school. Locals blame unchecked illicit liquor, drugs, poor policing and lack of community control for rising such crimes.