Posts

Showing posts with the label drugs

“+2 மாணவி கொடூர கொலஐ.. முக்கிய காரணம் இது தான்..” இதை யாருமே வெளிய சொல்லல.. வெளியான பகீர் தகவல்..

Image
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன் மகள் ஷாலினி (வயது 17). இவர் ராமேஸ்வரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார். நவம்பர் 19, 2025 காலை சுமார் 8.30 மணியளவில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் (வயது 21) என்ற இளைஞர் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தினார். கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் ஏற்பட்ட காயங்களால் சம்பவ இடத்திலேயே ஷாலினி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ஒருதலைக்காதல் தான் காரணம் கடந்த இரு வருடங்களாக முனியராஜ் ஷாலினியை ஒருதலைப்பட்சமாக காதலித்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஷாலினி தனது தந்தை மாரியப்பனிடம் தெரிவித்தார். மாரியப்பன் முனியராஜை எச்சரித்தும் அவர் நிறுத்தவில்லை. கொலை நடந்த நாளில் "கடைசியாக பேசிவிட்டு இனி தொல்லை கொடுக்க மாட்டேன்" என்று கூறி ஷாலினியை அழைத்து, ஆத்திரத்தில் கத்தியால் வெட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த உடன் அக்கம் பக்கத்தினர் ஷாலினியை மோட்டார் சைக்கிளில் ராமேஸ்வரம் அரசு ...