உத்தரபிரதேசம், நவம்பர் 25 :உபி, அசம்கர் மாவட்டம் பரசுராம்பூர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகனான 25 வயதுடைய அனிஷ் என்பவருக்கும் ஜங்கள்திஷ் கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய ருக்ஷனா என்ற பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் 2 மணியளவில் தனது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த அனிஷை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பித்து சென்றிருக்கின்றனர்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனிஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளி அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ரிங்கு என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன, ரிங்குவும் ருக்ஷனாவும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்திருக்கின்றனர்.
இவரது காதலை அறிந்த ருக்ஷனாவின் பெற்றோர்கள் அவரது மகளை கண்டித்தும் மிரட்டியும் அனிஷிற்கு திருமணம் செய்து வைத்தனர் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், முதலிரவு முடிந்த கையோடு பாத்ரூமுக்குள் செல்போனை எடுத்துச்சென்ற ருக்ஷனா நீண்ட நேரமாகியும் பாத்ரூமில் இருந்து வெளியே வரவில்லை.

ஒரு கட்டத்தில் வெளியே வந்த அவரிடம் கைபேசியை பிடுங்கி சோதித்து பார்த்ததில் அவர் தன்னுடைய காதலன் ரிங்குவிடம் நீண்ட நேரம் பேசியிருந்தது தெரியவந்தது. இதனால், கடுப்பான அனிஷ் ருக்ஷனாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
உனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்றால் முன் கூட்டியே சொல்லி இருக்கலாமே.. எதற்கு என் வாழ்க்கையை கெடுத்தாய் என்று கதறியுள்ளார். கோபத்தின் உச்சிக்கே சென்ற அனிஷ் தனது மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறுகின்றனர்.
இதனால் மனமுடைந்த ருக்ஷனா நடந்ததை தனது காதலனிடம் தெரிவித்திருக்கிறார். ஐயோ செல்லம்.. உன்னை அடிச்சிட்டானா.. என்று ஆத்திரமடைந்த ரிங்கு ருக்ஷனாவிடம் “அவனை கொலை செய்துவிட்டு உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதன்படி தனது நண்பனை கூட்டு சேர்த்துக்கொண்டு ரிங்கு அனிஷை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறார். இதற்கு ருக்ஷனாவும் துணையாக இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். திருமணமாகிய 7 நாட்களில் புதுமணப்பெண் காதலனை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : In Uttar Pradesh's Azamgarh district, 25-year-old Anish was brutally shot dead by two masked men on a bike, just seven days after marrying 20-year-old Rukshana from Jangaldish village.
Police investigation uncovered that Rukshana and her five-year lover, 22-year-old Rinku, plotted the murder after Anish discovered their affair during the first night, leading to a violent confrontation. Rinku, enraged by Rukshana's assault, executed the plan with a friend.
Both conspirators were arrested and jailed, leaving the community in shock over the betrayal and crime.


