4 இளம்பெண்களை வைத்து ரீல்ஸ் அப்பாவின் பிணத்துடன் அழுகை அம்பலமானது இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் இன்னொரு முகம்!

சென்னை: ‘‘என் மூச்சவ... பேச்சவ...’’ பாடலுக்கு ஆடி, ‘‘ஆடி மாசம் காத்தடிக்க வாடி புள்ள...’’ என சுருள் மீசையை முறுக்கிக்கொண்டு ரீல்ஸ் போட்டு இளம் பெண்களுடன் கொஞ்சி திரிந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுவன்சர் அரவிந்த் (டோலு), போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்கிற டோலு (வயது 23-க்கும் மேல்), இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பாலோவர்ஸ் கொண்ட லோக்கல் பிரபலம்.

தந்தை இறப்பையொட்டி அழுது புலம்பிய வீடியோக்களைக்கூட பதிவிட்டு ‘‘அப்பாவி இளைஞன்’’ இமேஜை காட்டிக்கொண்ட இவர், மறுபக்கம் ஆபத்தான வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்தது போலீஸ் சோதனையில் வெளிப்பட்டது.

கொடுங்கையூர் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பாப்புலரிட்டி ஈட்டியவர்கள் சிலர் போதை மாத்திரை வியாபாரம் நடத்துவதாக தெரியவந்தது. 

அதன்படி அரவிந்த் வீட்டில் சோதனை நடத்தியபோது 400-க்கும் மேற்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்த விசாரணையில், பிகார் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 1200 மாத்திரைகளை கொண்டுவந்து கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 8-வது பிளாக்கைச் சேர்ந்த பைசன் அகமது (23) என்பவர் அரவிந்துக்கு வழங்கியது தெரியவந்தது. அரவிந்த் அந்த மாத்திரைகளை தன் நண்பர்களான

  • வியாசர்பாடி சஞ்சய் (23) – 480 மாத்திரைகள் பறிமுதல்
  • எழில் நகர் ஆட்டோ டிரைவர் அஜித்குமார் (27) – 266 மாத்திரைகள் பறிமுதல்ஆகியோருக்கு விநியோகம் செய்ததும், மேலும் ரஞ்சித் (23), பிரவீன் (22) ஆகியோர் வாங்க வந்தபோது சிக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் 6 பேர் கைது; 1166 போதை மாத்திரைகள் பறிமுதல்

கைது செய்யப்பட்டவர்கள்:

  1. அரவிந்த் @ டோலு (மெயின் குற்றவாளி & இன்ஸ்டா இன்ஃப்ளுவன்சர்)
  2. சஞ்சய்
  3. அஜித்குமார்
  4. ரஞ்சித்
  5. பிரவீன்
  6. பைசன் அகமது (பிகாரில் இருந்து கொண்டுவந்தவர்)

இவர்கள் மீது NDPS சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரவிந்துடன் ரீல்ஸ் போட்டு நெருக்கமாக இருந்த இளம் பெண்கள் சிலருக்கும் இந்த போதை மாத்திரை வியாபாரத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர்கள் எச்சரிக்கை:

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இதுபோன்ற வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக அதிக அளவு உட்கொண்டால் வயிற்றுப்புண், குடல் ரத்தக்கசிவு, இதய பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, மூச்சுத்திணறல் என உயிருக்கே ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் ‘‘அப்பாவி, க்யூட் பையன்’’ இமேஜில் ஏமாற்றி, பின்பக்கம் உயிரைப் பறிக்கும் போதை மாத்திரை தொழிலை நடத்திய அரவிந்த் விவகாரம் சென்னை இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary : Chennai Instagram influencer Aravind (Toluv), famous for lip-sync reels and emotional videos, was arrested for selling addictive painkiller tablets as drugs. Police seized 1166 tablets from him and five others. He used his social media popularity to push the illegal trade in Kodungaiyur area.