4 இளம்பெண்களை வைத்து ரீல்ஸ் அப்பாவின் பிணத்துடன் அழுகை அம்பலமானது இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் இன்னொரு முகம்!
சென்னை: ‘‘என் மூச்சவ... பேச்சவ...’’ பாடலுக்கு ஆடி, ‘‘ஆடி மாசம் காத்தடிக்க வாடி புள்ள...’’ என சுருள் மீசையை முறுக்கிக்கொண்டு ரீல்ஸ் போட்டு இளம் பெண்களுடன் கொஞ்சி திரிந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுவன்சர் அரவிந்த் (டோலு), போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்கிற டோலு (வயது 23-க்கும் மேல்), இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பாலோவர்ஸ் கொண்ட லோக்கல் பிரபலம். தந்தை இறப்பையொட்டி அழுது புலம்பிய வீடியோக்களைக்கூட பதிவிட்டு ‘‘அப்பாவி இளைஞன்’’ இமேஜை காட்டிக்கொண்ட இவர், மறுபக்கம் ஆபத்தான வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்தது போலீஸ் சோதனையில் வெளிப்பட்டது. கொடுங்கையூர் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பாப்புலரிட்டி ஈட்டியவர்கள் சிலர் போதை மாத்திரை வியாபாரம் நடத்துவதாக தெரியவந்தது. அதன்படி அரவிந்த் வீட்டில் சோதனை நடத்தியபோது 400-க்கும் மேற்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்த விசாரணையில், பிகார் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 1...