சித்தியை அந்த நிலையில் பார்த்த மகன்.. விடுடா என கெஞ்சியும் கொடூரம்.. போர்வைக்குள் இருந்த விஷயம்.. விசாரணையில் பகீர்..

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஜொல்லப்பட்டி கிராமத்தில் குடிபோதையில் சித்தியிடம் தவறாக நடந்துகொண்ட மூத்த மகனை, ஆத்திரமடைந்த தந்தையும் இளைய மகனும் சேர்ந்து செங்கல்லால் சரமாரியாக அடித்து கொலை செய்து, உடலை வீட்டு வெளியே தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர் (வயது 55-க்கு மேல்) இரண்டு திருமணம் செய்து, இரு மனைவிகளுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்தார். முதல் மனைவிக்கு பிறந்த மகன் சரவணன் (32), படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி, குடிபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் (நவம்பர் 27) இரவு குடித்துவிட்டு வீடு திரும்பிய சரவணன், தந்தையின் இரண்டாவது மனைவி (சித்தி) உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்றுள்ளான்.

அங்கே உறங்கிகொண்டிருந்த சித்தியை போதையில் தவறாக பார்த்த சரவணன் தன்னுடைய தந்தையின் மனைவி என்பதை மறந்து அவருடன் தவறாக நடந்துகொண்டதாக தெரிகிறது.

விடுடா.. நான் உனக்கு அம்மா மாதிரி டா.. என்று அலறினார் சித்தி. அலறல் சத்தம் கேட்டு வந்த ஜெயசங்கர் மகனை கண்டித்ததால் இருவருக்கும் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டது. அப்போது, சத்தம் கேட்டு வீட்டிற்கு வந்த இளைய மகன் கோவிந்தராஜும் (தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன்) என் அம்மாகிட்ட தப்பா நடந்துகிட்டியா என சரவணனை தாக்க முயற்சித்துள்ளார்.

குடிபோதையில் இருந்த சரவணன் அனைவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்த ஜெயசங்கரும் கோவிந்தராஜும் சேர்ந்து அங்கு கிடந்த செங்கல்களால் சரவணனை சரமாரியாக தாக்கினர். தலையில் பலமுறை அடிபட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான்.

பின்னர் இருவரும் சரவணனின் உடலை போர்வையில் சுற்றி வீட்டிற்கு வெளியில் தூக்கி வீசிவிட்டு, எதுவும் நடக்காதது போல உறங்கச் சென்றனர். மறுநாள் காலை உடலைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சித்தியிடம் தவறாக நடந்ததால் தந்தையே மகனை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ஜெயசங்கர் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். குடும்பத்துக்குள் ஏற்பட்ட இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணை தொடர்கிறது.

நிஜமாகவே, சரவணன் தவறாக நடந்து கொண்டாரா..? அல்லது சொத்து தகராறு ஏதேனும் இருந்து சரவணனை திட்டமிட்டு தீர்த்து கட்டினார்களா..? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary : In Dharmapuri’s Jollapatti village, drunk Saravanan (32) misbehaved with his father’s second wife. Enraged father Jeyasankar and step-brother Govindaraj beat him to death with bricks, wrapped the body in a blanket and dumped it outside. Both were arrested for murder.