மனைவியின் படுக்கையில் ரகசிய கேமரா.. பலவருட பாலியல் தொடர்பு.. உண்மையை அறிந்த கணவன்.. அரங்கேறிய கோர சம்பவம்..

அகமதாபாத் : காலை நடைப்பயிற்சியின்போது வேகமாக வந்த வெள்ளை பிக்-அப் டிரக் ஒன்று மோதி உயிரிழந்த 43 வயது ஆண்... இது வெறும் விபத்து என்று நினைத்திருந்தால் தவறு! இதன் பின்னால் ஒரு கொடூர சதி, காதல் வலையும், பணத்திற்காக உயிரை பறிக்கும் கொலையாளிகளின் கூட்டும் இருந்தது.

குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தை உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மனைவியும், அவரது கள்ளக்காதலனும் தான் இந்த கொடூரத்தின் மூல காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனைவி சாரதா திருமணமான புதிதில் இருந்தே கணவர் சைலேஷின் பக்கத்து வீட்டுக்காரர் நிதின் உடன் நட்பாகவே பழகி வந்தார்.இந்தப் பழக்கம் நாளடைவில் திருமணம் தாண்டிய உறவாக மாறியது.

சைலேஷ் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது எல்லாம் வீட்டிற்கு வரும் நிதின் சைலேஷின் மனைவி சாரதாவுடன் உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

இது பற்றி சைலேஷ் எதுவும் அறியாமலே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சாரதாவின் நடவடிக்கைகளும் நித்தினின் நடவடிக்கைகளும் சைலேஷிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தன.

சைலேஷ் வீட்டில் இருக்கும்போது வரக்கூடிய நிதின், சாரதாவுடன் கண் ஜாடையில் பேசுவது, கை ஜாடையில் பேசுவது என இருந்திருக்கிறார். சைலேஷ் இதனை கவனிக்கும்போது ஒன்றும் தெரியாதது போல பாவலா காட்டி இருக்கிறார்கள் நித்தினும், சாரதாவும்.

ஆனால், இதனை நேரடியாக பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் நீண்ட நாள் நண்பனான நிதினிடம் கேட்டாலோ..? அல்லது தன்னுடைய மனைவி சாரதாவிடம் கேட்டாலோ..? விஷயம் விவகாரமாகிவிட வாய்ப்பு இருக்கிறது.

இதனால் இருவருக்குள்ளும் ஏதேனும் தகாத தொடர்பு இருக்கிறதா..? என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் தேவையில்லாமல் சந்தேகப்படுகிறோமோ..? என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார் சைலேஷ்.

இந்நிலையில், அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து துபாய்க்கு சில நாட்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று வந்த கட்டளையின் பேரில் துபாய்க்கு கிளம்பி சென்றார் சைலேஷ். ஆனால், இந்த இடத்தில் தான் அவருடைய சந்தேகம் வலுவடைந்தது. துபாய்க்கு செல்கிறேன் என்று கூறியதும் அவருடைய மனைவியை மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டா.

ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது. நாம் சந்தேகப்படுகிறோம், அது நம் மீது தவறாக இருந்தாலும் சரி.. இதனை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நினைத்து மனைவிக்கு தெரியாமல் படுக்கையறையில் ரகசிய கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்துகிறார் சைலேஷ்.

இதனை தொடர்ந்து துபாய்க்கு கிளம்பி செல்கிறார். துபாய்க்கு சென்று திரும்பிய அவர் ரகசிய கேமராவின் காட்சிகளை தன்னுடைய கணினியில் போட்டு பார்த்துள்ளார். காத்திருந்தது அதிர்ச்சி. ஆம் இவர் சந்தேகப்பட்டது உண்மைதான் சாரதாவும் நித்தியமும் கள்ளத் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

ரகசிய கேமரா இருப்பது தெரியாமல், படுக்கையில் ஒட்டு துணி இல்லாமல் படுத்திருக்கும் சாரதாவுடன் நித்தின் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார் சைலேஷ்

இந்நிலையில், ஜூன் 24 காலை 6 மணி... வாஸ்த்ரால் சாலையில், ராஃப் கேம்ப் அருகே தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் ஷைலேஷ் பிரஜாபதி (43).

கேலக்ஸி கோரல் சொசைட்டியில் வசித்து வந்த அவர், தனது வாழ்க்கையை அறியாமல், ஒரு கொடூர சதியின் இலக்காக மாறினார். திடீரென பின்னால் இருந்து வேகமாக வந்த வெள்ளை பிக்-அப் டிரக், அவரை மோதித் தள்ளியது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ஷைலேஷ்... இது ஒரு சாலை விபத்து என்று தோன்றினாலும், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் அந்த சந்தேகத்தை தூண்டின.

டிரக் ஓட்டுநர், வேண்டுமென்றே சாலை ஓரத்திற்கு திருப்பி, ஷைலேஷை இலக்கு வைத்து மோதியது போல் தெரிந்தது. இதனால், வழக்கு அகமதாபாத் போலீஸின் கிரைம் பிராஞ்ச் (டிசிபி) கைக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்:

ஜூலை 4 அன்று, போலீஸ் கைது செய்தது ஷைலேஷின் மனைவி ஷார்தா பிரஜாபதி என்ற ஸ்வாதி (40) மற்றும் அவரது காதலன் நிதின் பிரஜாபதி (46) ஆகியோரை. இவர்கள் இருவரும் வாஸ்த்ரால் பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த 2.5 ஆண்டுகளாக இவர்களுக்குள் கள்ளக்காதல் இருந்ததாக போலீஸ் கூறுகிறது.

ஷைலேஷ், இவர்களது உறவுக்கு தடையாக இருந்ததால், அவரை அகற்ற திட்டமிட்டனர். இதற்காக, கோம்டிபூர் பகுதியைச் சேர்ந்த யாசின் என்ற கானியோ (43) என்பவருக்கு ரூ.10 லட்சம் கொடுத்து, 'விபத்து' போல் கொலை செய்ய ஒப்பந்தம் செய்தனர்.

அகமதாபாத் டிசிபி உயர் அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "ஷார்தா, யாசினுக்கு கணவரின் புகைப்படங்களை கொடுத்தார். அவரது காலை நடைப்பயிற்சி அட்டவணையை சொன்னார்.

திட்டமிட்டபடி, ஜூன் 24 காலை, யாசின் டிரக்கை ஓட்டி ஷைலேஷ் மீது மோதி தப்பினார்" என்று கூறினார். முதலில், ஐ டிராஃபிக் போலீஸ் ஸ்டேஷனில் அறியப்படாத நபருக்கு எதிராக ஐபிசி 304ஏ (கவனக்குறைவால் உயிரிழப்பு) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், வீடியோக்கள் வெளியான பிறகு, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. ஜூலை 8 அன்று, போலீஸ் யாசினை கைது செய்தது. விசாரணையில், அவர் கொலைக்கு உடந்தையாக இருந்த இரு நபர்களும் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. தற்போது, ஷார்தா, நிதின் ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாசினும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம், கள்ளக்காதலின் கொடூர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு குடும்பத்தின் தலைவனை, தனிப்பட்ட ஆசைக்காக பலிகொடுத்தது எவ்வளவு கொடூரம்?

ஷைலேஷின் குடும்பத்தினர் இழப்பின் வலியில் துடிக்கின்றனர். அவரது மனைவி, அவரை நம்பி வாழ்ந்தவர், அவரையே கொன்றது எவ்வளவு துரோகம்? சமூகத்தில், ஆண்களும் பாதிக்கப்படலாம் என்பதை இது நிரூபிக்கிறது. பாரம்பரிய கதைகளில் பெண்களே ஒடுக்கப்படுவதாக சொல்லப்படும், ஆனால் 21ஆம் நூற்றாண்டில் உண்மை வேறு.

இந்த சம்பவம், உறவுகளில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கொடூர சம்பவம், அகமதாபாத் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காதல், பணம், கொலை - இவை அனைத்தும் கலந்த ஒரு திரில்லர் போன்ற கதை, ஆனால் இது உண்மை! சமூகம் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும்.

Summary in English : In Ahmedabad, Gujarat, Sharda Prajapati and her lover Nitin were arrested for murdering her husband Shailesh by staging a road accident. They paid Rs 10 lakh to hitman Yasin, who ran him over with a pickup truck during his morning walk on June 24. Police investigation revealed their 2.5-year affair after suspicious social media videos surfaced.