பெங்களூர், நவம்பர் 13: பெங்களூரின் மகாலட்சுமி லேஅவுட் பகுதியில், ஒரு முன்னணி பிரீ-ஸ்கூல் ஆசிரியை தலைமையில் நடந்த 'ஹனி ட்ராப்' மற்றும் பிளாக்மெயில் திட்டத்தில், வெற்றிகரமான வணிகர் ஒருவரிடமிருந்து 50 லட்சத்திற்கும் மேல் பணம் கறக்கப்பட்டுள்ள சம்பவம் வெளிப்பட்டுள்ளது.
25 வயது கொண்ட ஸ்ரீதேவி என்ற இளம் ஆசிரியை, தனது நண்பர் சாகர் (28) மற்றும் ரவுடி கணேஷ் (38) ஆகியோருடன் இணைந்து இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. சைபர் கிரைம் போலீஸ் அனைவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளது.

சம்பவத்தின் தொடக்கம்: ஸ்கூல் அட்மிஷனில் இருந்து 'ட்ராப்'
பெங்களூரின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பிரபல பிரீ-ஸ்கூலில், தனது 4 வயது பெண் குழந்தையை அட்மிஷன் செய்ய வந்த ஒரு தொழிலதிபர் அஷோக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மீது ஸ்ரீதேவி கண்ணைப் பதித்தார்.

அவரது மகளின் அட்மிஷன் ஃபார்மில் இருந்து தொலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டு, வாட்ஸ்அப் மூலம் உரையாடலைத் தொடங்கினார். 'உங்கள் குழந்தைக்கான ஸ்கூல் அட்மிஷன் தொடர்பாக' என்று தொடங்கிய உரையாடல், படிப்படியாக தனிப்பட்ட பேச்சுகளாக மாறியது.
2023-ஆம் ஆண்டு, ஸ்ரீதேவி தனது சொந்த ஸ்கூலைத் தொடங்குவதற்காக 2 லட்சம் ரூபாய் கடன் கோரினார். அஷோக் அவரது மனைவியின் அனுமதியுடன், 'ஸ்கூல் ஆசிரியை' என்ற நம்பிக்கையில் பணத்தை வழங்கினார்.

ஒரு வருடம் கழித்து (2024) பணத்தைத் திரும்பக் கோரியபோது, ஸ்ரீதேவி 'இன்னும் சற்று காலம் காத்திருங்கள்' என்று கூறினார். பின்னர், 'பணத்தை திருப்பி அளிக்க முடியாத சூழல்; எனது ஸ்கூல் பிசினஸில் பார்ட்னராகச் சேருங்கள், லாபத்தில் பங்கு பெற்றுக்கொள்ளுங்கள்' என்று மாற்று ஏற்பாட்டை முன்மொழிந்தார். அஷோக் இதை ஏற்றுக்கொண்டார்.
“பயப்படாத மாமா.. மேலே ஏறி கள்ளக்காதலி செய்த செயல்..”
பார்ட்னர்ஷிப் என்ற பெயரில் உரையாடல்கள் தனிப்பட்டவையாக மாறின. ஸ்ரீதேவி, அஷோக்கை அவரது மனைவியிடமிருந்து விலகச் செய்யும் வகையில் காதல்-பாசம் கலந்த பேச்சுகளைத் தொடங்கினார்.
ஒரு முறை நேரில் சந்தித்த போது, தன்னுடைய அழகை கொண்டு அஷோக்கை மயக்கினார். சட்டென அஷோக்கை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் ஸ்ரீதேவி. பயப்படாத மாமா.. என்று அசோக்கிற்கு தெம்பூட்டி அவரது தலை மேல் ஏறி ஆட ஆரம்பித்தார். இப்படியே நாட்கள் நகர்ந்தன, ஒரு முறை மீண்டும் பணத்தை கேட்டுள்ளார் அஷோக்.

அன்னைக்கு ஒரு முத்தம் கொடுத்தேனே.. அதுக்கு 50,000 கழிஞ்சி போச்சு. என்னை என்ன வேணும்னா பண்ணிக்கோ.. உனக்கு நான் வேணுமா..? இல்ல, பணம் வேணுமா.. என தனது நயவஞ்சக வலையை விரித்துள்ளார் ஸ்ரீதேவி.
இதனை தொடர்ந்து, இருவரும் தனித்தனி சிம் கார்டுகள் வாங்கி அதன் மூலம் தங்களுடைய உரையாடல்களை தொடர்ந்தனர். ஆனால், ஸ்ரீதேவியின் சதிகார திட்டம் பற்றி அறியாமல் அஷோக் ஸ்ரீதேவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், அஷோக் இந்தத் தொடர்பை முடிவுக்கு கொண்டுவர முயன்று, சிம் கார்ட்டை அழித்தார். ஆனால், ஸ்ரீதேவி அவரது வீட்டுக்கே வந்து, 'நார்மல்' பேச்சுடன் அழுத்தம் தொடர்ந்தார்.

இதற்கிடையில், உரையாடல்களின் ஸ்க்ரீன்ஷாட்கள், உல்லாசமாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி பிளாக்மெயில் தொடங்கினார்.
"உன் மனைவிக்கு, அலுவலகத்துக்கு, இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்து உன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினரை டேக் செய்வேன்.. பாக்குரியா.. உனக்கு இழக்க நிறைய உண்டு; என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை.. நான் ஜெயிலுக்குபோகவும் ரெடி" என்று மிரட்டினார்.
ரவுடிகளுடன் இணைந்து கடத்தல் மிரட்டல்: 1 கோடி கோரல்
இதனால் அஷோக் பயந்து போனார். பெங்களூரை விட்டு வெளியேறும் திட்டத்துடன் ஸ்கூலில் இருந்து குழந்தையின் TC-ஐ வாங்கினார். இந்நிலையில், ஸ்ரீதேவி நாடகம் உச்ச கட்டத்தை எட்டியது, தனது நண்பர் சாகரை (28) இணைத்துக்கொண்டு, ரவுடி கணேஷை (38) பணியமர்த்தினார்.

மூன்று பேரும் சேர்ந்து கொண்டு அசோக்கை கடத்தி ஒரு கோடி ரூபாய்.. ஒரே பேமெண்ட்.. எல்லா பிரச்சனையையும் முடிச்சுக்கலாம்.. என பேரம் பேசினார்கள்.
"போலீஸ் நமக்கு தெரியும்; கமிஷனர் கிட்ட பேசுறியா..? இல்ல, கமிஷனர் ஆபிஸ்கே சொல்லலாம்.." என்று போலி அச்சுறுத்தி, முதல் கட்டமாக 30 லட்ச ரூபாய்களை பெற்றனர். இப்படியாக, மொத்தம் 50 லட்சத்திற்கும் மேல் பணம் பெறப்பட்டதாகத் தெரிகிறது.

அஷோக் மீண்டும் மீண்டும் பணம் கொடுத்தும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை இழிவுபடுத்தும் அளவுக்கு மிரட்டல்கள் தொடர்ந்தன.
போலீஸ் விசாரணை: உண்மைகள் வெளியேற்றம்
2 ஆண்டுகள் இந்தத் துன்பத்தைத் தாங்கிய அஷோக், இறுதியாக சைபர் கிரைம் போலீஸிடம் புகார் அளித்தார். இரு தரப்பு ஆதாரங்களையும் ஆய்வு செய்த போலீஸ், ஸ்ரீதேவியின் திட்டமிட்டச் செயல்களை – உரையாடல்கள், ரகசிய ரெக்கார்டிங்குகள், போலி போலீஸ் தொடர்புகள் – வெளிப்படுத்தியது.

அவரது 'எல்லா ஆதாரங்களும் உண்டு' என்ற கூற்று பெரும்பாலும் பொய்யாகவும், சிலவற்றை மிகைப்படுத்தியதாகவும் கண்டறியப்பட்டது.ஸ்ரீதேவி, சாகர், கணேஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, ஜூனியர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் மீது போர்ஜரி, பிளாக்மெயில், கடத்தல் முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு நடத்தப்படுகிறது. விசாரணையில், இது தனிப்பட்ட சம்பவமல்ல; LGBTQ+ சூழச்சி, பல்வேறு டேட்டிங் ஆப்புகளில் உலவும் பணம் படைத்தை நபர்களை நோட்டமிட்டு அவர்களை ஹனி ட்ராப் செய்து லட்சங்களை சம்பாதிக்கும் கும்பல் சுதந்திரமாக உலவி கொண்டிருகின்றது. டிண்டர் போன்ற ஆப்களில் இதுபோன்ற ட்ராப்கள் அதிகம் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக அழைப்பு: ஆண்களுக்கும் பாதிப்பு
இந்தச் சம்பவம், பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் ஏற்படும் பாலியல் சுரண்டல், பிளாக்மெயில் ஆபத்துகளை வெளிச்சம் போட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள், "சட்டம் அனைவருக்கும் சமம். இதுபோன்ற குற்றங்கள் தடுக்க, திறந்த மனதுடன் பேச வேண்டும்" என்று கூறுகின்றனர்.
யாரவது உங்களை மிரட்டினால், மானம் போய்விடும், பெயர் கெட்டுவிடும் என புகார் கொடுக்காமல் இருக்க வேண்டாம். இது போன்ற புகார்களை ரகசியமாக விசாரிக்க காவல் துறையினர் உதவி செய்வார்கள்.
நேரடியாக, காவல் துறையில் புகார் செய்து நிரந்தர தீர்வு பெறலாம், குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிந்து விடுமோ என்று அஞ்சாதீர்கள். திறந்த மனதுடன் மன்னிப்பு கேட்டு, இனி இது போல நடக்காது என மன்றாடி மன்னிப்பு கேளுங்கள். உங்களுக்கு அவர்களுக்கு உதவி செய்வார்கள்.

இது போன்ற கேடி லேடிகளின் மூலதனமே உங்களின் பயம் தான். அதனை விட்டெறிந்து அந்த கேடிகளை சிறைக்கு அனுப்புங்கள் என்று கூறுகிறார்கள்.
விசாரணையில், ஸ்ரீதேவி போன்றவர்கள் 'ஆதரவு' என்று தொடங்கி, திட்டமிட்டு சுரண்டுவதை விசாரணை உறுதிப்படுத்தியுள்ளது.போலீஸ், "இதுபோன்ற புகார்களை உடனடியாக அளிக்கவும், இரு தரப்பு ஆதாரங்களைப் பரிசோதிக்கவும், ரகசியங்களை காக்கவும் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம், சமூக ஊடகங்களில் பரவி, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
Summary : In Bengaluru's Mahalakshmi Layout, 25-year-old preschool teacher Sridevi, with accomplices Sagar (28) and rowdy Ganesh (38), honey-trapped a successful businessman during his child's school admission. They lured him into an affair, secretly recorded intimacies, and blackmailed him for over 50 lakhs through threats, fake kidnappings, and police intimidation claims. After 2 years of torment, the victim reported to Cyber Crime Police, leading to all three's arrest.

