என்னை ஓ*** போது எப்படி இருந்துச்சு..? பிணமான காதலி.! தீயாய் பரவும் கொடூர காதலனின் செல்போன் உரையாரல்..!

திருத்தணி, நவம்பர் 2: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த லட்சுமாபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஹரிதா, காதல் ஏமாற்றத்தால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

கணவனை இழந்து கட்டிட வேலையில் ஈடுபட்டு மூன்று பிள்ளைகளை வளர்த்து வந்த தாய் கலாவதியின் மகளை காதலுக்கு பலியாக்கிவிட்டு அடுத்த பெண்ணை மணக்க சென்று விட்டான் திலீப் என்ற கொடூர காதலன். இது, அப்பகுதியில் பெரும் துயரத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலன் திலீப் மற்றும் அவரது சித்தி கோவிந்தம்மாள் ஆகியோரை கைது செய்யாவிட்டால் ஹரிதாவின் உடலை ஏற்க மாட்டோம் என குடும்பத்தினர் மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது போலீசார் கவனத்திற்கு கொண்டுவந்தது.

இதன்பின் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இளைய மகள் ஹரிதா, திருத்தணியில் உள்ள தனியார் டிப்ளமோ பயிற்சி பள்ளியில் நர்சிங் படித்து வந்தார். சம்பவத்தன்று (நேற்று) மாலை 6 மணி அளவில் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய ஹரிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பார்த்து மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். கனகம்மா சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஹரிதாவின் உடலை மீட்டு திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இறப்புக்கு முன் ஹரிதா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் மோட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 25 வயது திலீப், பெங்களூருவில் லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் தனது சித்தி கோவிந்தம்மாளின் ஊர் லட்சுமாபுரத்திற்கு வந்தபோது, சித்தியின் தோழியின் மகள் ஹரிதாவுடன் அறிமுகமானார். நாளடைவில் அது காதலாக மாறி, இருவரும் நெருக்கமாக பழகினர்.

அடிக்கடி லட்சுமாபுரத்திற்கு வந்து ஹரிதாவைச் சந்தித்த திலீப், கடந்த சில நாட்களாக தொடர்பைத் தொடர்ந்து வைக்கவில்லை. போன் அழைப்புகளையும் ஏற்கவில்லை.இதனால் விரக்தியடைந்த ஹரிதா, திலீப்பிடம் போன் செய்து "ஏன் போனை எடுக்கவில்லை?" எனக் கெஞ்சினார். ஆனால் திலீப், "வேலைக்கு டென்ஷன், போன் பண்ணாதே" என திட்டினார்.

பின்னர், "நம்ம காதலை ஏன் மற்றவர்களிடம் சொல்கிறாய்?" என ஹரிதாவை கண்டித்தார். குடும்ப வசதியின்மை காரணமாக திருமணம் சாத்தியமில்லை என திலீப் தெரிவித்தார். மேலும், "என்னைத் திருமணம் செய்ய விரும்பினால் 10 சவரன் நகைகளாவது ஏற்பாடு செய். அப்போது தான் உங்கள் வீட்டில் பேசலாம்" என கூறினார்.இதற்கு ஹரிதா, "நான் வெயிட் பண்றேன். 10 சவரம் ரெடி பண்ணி வைத்திருக்கிறேன்" என பதிலளித்தார்.

ஆனால் திலீப்பின் சித்தி கோவிந்தம்மாள், "ஹரிதாவின் குடும்பம் மிகவும் வறுமையானது. அவளை விட்டுவிடு" என அறிவுறுத்தியதால், திலீப் ஹரிதாவைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. "வசதி இல்லை, உங்கள் வீட்டுக்கு வந்து கல்யாணம் செய்ய முடியாது" என திலீப் தெரிவித்ததாக ஹரிதாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

சம்பவத்தன்று திலீப், ஹரிதாவிடம் "என்னை விட்டுவிடு" எனக் கூறியபோது, "என்னை விட்டு செல்லாதே.. என்னை ஓ*** எப்படி இருந்துச்சு.. இப்போது தான் நான் ஏழை என தெரிகிறதா..?" என அழுது கெஞ்சிய ஹரிதா, அவரது முடிவில் உறுதியாக இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இதன்பின் விபரீத முடிவை எடுத்தார்.

குடும்பத்தின் வேதனை: ஹரிதாவின் சகோதரி, "திலீப்பை ரெண்டு வருஷமா லவ் பண்ணிட்டு இருந்தா. அவனும் லவ் பண்ணிதான். ஆனா அவன் சித்தி 'வேணாம்'னு சொன்னதுனால அவனும் 'வேணாம்'னு சொல்லிட்டான். வசதி கம்மி என்பதுனால இப்படி நடந்துச்சு. அதுக்காக என் தங்கச்சி சூசைட் பண்ணிட்டா. அவனோட பேஷன் லைஃப்-ஐயும் கோவிந்தம்மாவையும் அரெஸ்ட் பண்ணாதான் நான் என் தங்கச்சியோட பாடிய வாங்குவேன்" எனக் கூறினார்.

ஹரிதாவின் தாய் கலாவதி மயக்கத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.எழுதிய கடிதம்: ஹரிதாவின் கடிதத்தில், "அம்மா, என்னை மன்னிச்சுக்கோ. என்னை கஷ்டப்பட்டு வளர்த்தீங்க. இதுக்கு மேலயும் உனக்கு கஷ்டம் தர விரும்பல. அக்கா, என் மேல உனக்கு பாசம் இருந்தா அவங்க குடும்பத்தை சும்மா விடாதே. அம்மாவை நல்லா பார்த்துக்கோ" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பத்தினர், "அரெஸ்ட் பண்ணிட்டு காட்டுங்க. அதுக்கப்புறம் தான் உடல் ஏற்போம்" என மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். இதன்பின் கனகம்மா சத்திரம் போலீசார் திலீப் மற்றும் கோவிந்தம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

விசாரணை தொடர்கிறது.இச்சம்பவம், லட்சுமாபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வறுமை மற்றும் காதல் ஏமாற்றத்தின் பின்னணியில் இளைஞர்கள் எடுக்கும் தீவிர முடிவுகள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. போலீசார் மேலும் விவரங்களை விசாரித்து வருகின்றனர்.

 

நன்றி - Polimer News

Summary in English : 19-year-old nursing student Haritha from Lakshmipuram, near Tiruttani, Tamil Nadu, died by suicide after her lover Dileep, pressured by his aunt Govindammal, rejected marriage due to her family's poverty. Despite Haritha's pleas and promises of dowry, Dileep distanced himself. Her family protested at the hospital, refusing her body until arrests; police detained the couple. A suicide note expressed remorse to her widowed mother.