ஆயுள் தண்டனை கைதியுடன் பெண் போலீசுக்கு வந்த காதல்.. உடலுறவு வெறியால் கடைசியில் அரங்கேறிய கொடூரம்..

சேலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அரங்கேறிய ஒரு கொடூர சம்பவத்தைப் பற்றிய கதை தான் இது சினிமாவை மிஞ்சும் துருப்பங்களுடன் கூடிய இந்த கதையை பற்றி பார்ப்போமா..?

அதற்கு முன் இதுபோன்ற கிரைம் செய்திகளை தெரிந்து கொள்ள நம்முடைய கிரைம் தமிழகம் என்ற டெலிகிராம் சேனலை பின் தொடருங்கள் சேனலின் லிங்க் பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் 1: அக்டோபர் 31 இரவு

சேலம் புதிய பேருந்து நிலையம். எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்த இடத்தில், இருளின் திரை மெல்ல விரியத் தொடங்கியிருந்தது. காவலர் காயத்ரி மாலா (35), நல்ல அழகு, மிடுக்கான தோற்றம், மிரட்டல் பேச்சு என பார்பதற்கு கலையான பெண்மணி.

அன்று, தனது யூனிஃபார்மின் இறுக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டவளாய், ஹப்பாடா என ஒரு சாதாரணப் பெண்ணாக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். இரவு 7 மணி.கோயம்புத்தூரில் இருக்கும் தன் குழந்தையைப் பார்க்கச் செல்வதாகக் கணவர் தமிழ்ச்செல்வனிடம் தகவல் சொல்லிவிட்டு, அவர் விரைந்த அந்தப் பயணம், உண்மையில் தன் கடந்த கால ரகசியங்களைச் சந்திக்கத்தான்.

கோவை செல்லும் பேருந்தில் எரிய அவள் நிஜமாக கோவை செல்ல ஏறவில்லை.பேருந்து நகர்ந்தபோது, அவரது கைப்பேசி ஒளிர ஆரம்பித்தது. மறுமுனையில் பேசிய குரல், அதிகாரத்தின் மிரட்டலையோ, சட்டத்தின் கட்டுப்பாட்டையோ அறியாத ஒருவனின் குரல்.

அது, ஆயுள் தண்டனைக் கைதி சரவணக்குமாரின் குரல்."சங்ககிரிக்கு வந்துட்டேன். நீ வந்ததும் ரயில்வே ரோடு பக்கத்துல உள்ள ஏரிக்கரைக்கு வந்துடு. சீக்கிரம் வா, காத்துக்கிட்டு இருக்கேன்."காயத்ரியின் மனம், காவலர் சீருடைக்குள் மறைந்திருந்த ஏழு வருட ரகசியக் காதலை நினைத்துச் சிலிர்த்தது.

முதல் கணவருடனான வெறுப்பு, வேலூர் ட்ரெய்னிங், சப்-ஜெயிலர் தமிழ்ச்செல்வன் மீதான இரண்டாவது காதல் என வாழ்க்கையில் பல திருப்பங்கள்.

ஆனால், இவை அனைத்தையும்விட, கோவை மத்தியச் சிறையின் இருண்ட கூடங்களில் ஆரம்பித்த அந்த 'கைதியுடானான கள்ள' உறவு, ஒருபோதும் முற்றுப்பெறாமல் நீண்டு கொண்டே இருந்தது.

இரவு 09:10 மணி. பேருந்து சங்ககிரி பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது. காயத்ரி இறங்கினார். தொலைவில் ஒரு நிழல் அவரை நோக்கி வேகமாக வந்தது. அது சரவணக்குமார். பரோலில் வெளிவந்து, சிறைக்குத் திரும்பாமல் தலைமறைவாக இருந்தவன்.

அத்தியாயம் 2: இருண்ட ஏரிக்கரை

சங்ககிரியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்த ஆவாரம்பாளையம் ஏரிக்கரை. ரயில்வே சாலைக்குப் பக்கத்தில் இருந்த அந்த ஒதுக்குப்புறமான இடம், அவர்களுக்குப் பல ஆண்டுகளாகப் பழக்கப்பட்ட 'ரகசிய உலகம்'.

அங்குக் காவல் இல்லை, சட்டம் இல்லை, சமூகத்தின் பார்வை இல்லை. இருந்ததெல்லாம், ஏழு ஆண்டுகளாகத் தொடரும் ஒரு விபரீத உறவின் தீவிரம் மட்டுமே.

இருவரும் அங்கு சென்று, ஒரு புதருக்குள் குடித்தனம் நடத்த தொடாங்கினார்கள். விஷயங்கள் வேகமெடுத்தன. அவர்கள் அணிந்திருந்த ஆடைகளே புதருக்குள் படுக்கை விரிப்பாக மாறின. அடித்த சில நிமிடங்கள் இருவரும், உல்லாச உலகத்தில் பிரவேசித்து முனகல்கள், சிணுங்கல்கள் என குதுகலித்தனர்.


உல்லாச உலகில் இருந்து திரும்பி இருவரும் ஆசுவாசமடைந்த பின், சரவணக்குமார் அவளிடம் திரும்பினான். எனக்கு, 5000 ரூபாய் பணம் வேணும்காயத்ரி.. நீதான் எப்பவும் நிறைய பணம் வச்சிருப்பியே..." என்றான்.

காயத்ரி, "பணம் தானே.. எவ்வளவு வேணும்னாலும் தர்றேன். ஆனா அதுக்கு நீ ஒரு கண்டிஷனுக்கு ஒத்துக்கணும்" என்றாள். "என்ன?" என்று ஆவலுடன் கேட்டான் சரவணக்குமார்."நான் எப்ப கூப்பிட்டாலும், நீ என் கூட உல்லாசமா இருக்க வரணும். நான் மட்டும்தான் உன் உலகமா இருக்கணும்."சரவணக்குமாரின் முகம் இறுக்கமடைந்தது.

"முடியாது காயத்ரி. என் மனைவி இப்ப எட்டு மாசம் கர்ப்பமாக இருக்கா. இந்தக் கட்டத்துல நான் கண்டிப்பா அவகூடதான் இருக்கணும். அடிக்கடி வெளியே வர முடியாது."காயத்ரி மாலாவின் கண்களில் இருந்த காதல் மறைந்து, அங்கு ஒருவித அதிகாரத் திமிர் தோன்றியது. "ஓ அப்படியா? உனக்கு என் மேல இருந்த 'காதல்' இவ்வளவுதானா? நல்லா கேட்டுக்கோ சரவணா... நீ ஒரு ஆயுள் தண்டனைக் கைதி.

இப்போ பரோலில் வந்துட்டு ஜெயிலுக்குத் திரும்பாம தலைமறைவா இருக்க. நான் நினைச்சேன்னா, இந்த நொடியே உன்னைக் காட்டி கொடுத்து, உன்னை ஆயுசுக்கும் ஜெயிலுக்குள்ளேயே வச்சிருவேன். நான் சொல்றதை நீ கேட்டுதான் ஆகணும். உனக்கு வேற வழியே இல்லை!"அந்த வார்த்தைகள், சரவணக்குமாரின் ரத்த நாளங்களில் விஷம் போலப் பரவியது.

ஏழு வருட காதல் உறவு, உல்லாச இரவு என என்னுடன் இருந்துவிட்டு இப்போது மிரட்டல் என்னும் புதைகுழிக்குள் விழுந்துவிட்டதை உணர்ந்தான்.'இவளை உயிரோடு விட்டால், நம்ம குடும்பத்தையே நிம்மதியா வாழ விடமாட்டாள். நம்மளைக் கண்டிப்பா ஜெயிலுக்குள்ள தள்ளிடுவாள்...'அவன் மனதில் தீவிரம் அதிகரித்தது. கண்கள் கொலைவெறியுடன் சுழன்றன.

அத்தியாயம் 3: கொலையும் மறக்க முயற்சிப்பதும்

சரவணக்குமார் சட்டென்று திரும்பினான். சுற்றும்முற்றும் பார்த்தான். யாரும் இல்லை.காயத்ரி அவனைப் பற்றி அலட்சியமாகவும், ஏளனமாகவும் பேசிக்கொண்டிருந்தாள். அந்தச் சமயம் பார்த்து, தரையில் கிடந்த, ஏறக்குறைய 25 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய கல்லைத் தூக்கினான்.காயத்ரி சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சுதாரிப்பதற்குள், கல் அவளது தலையை பயங்கர சத்தத்துடன் தாக்கியது! தலை சிதறி, அவள் அங்கேயே சாய்ந்தாள். இருள் அவளது ஆன்மாவை நிரந்தரமாகக் கவ்வியது.சரவணக்குமார் பதற்றத்துடன் அவளைப் பார்த்தான். அவள் இறந்துவிட்டதை உறுதி செய்தான்.பிறகு, கத்தியின்றி, ரத்தம் சிந்தாத ஒரு திருடன் போலச் செயல்பட்டான்.

அவளது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலி, காதில் இருந்த தோடு, கையில் இருந்த செல்போன் மற்றும் பணப்பையை எடுத்துக்கொண்டான்.யாரும் அடையாளம் காணக் கூடாது என்ற எண்ணத்துடன், காயத்ரி மாலாவின் சடலத்தை அருகிலிருந்த முட்புதருக்குள் இழுத்துச் சென்றான்.

அதுமட்டுமின்றி, கொலைக்குப் பயன்படுத்திய அதே பெரிய கல்லைத் தூக்கி, அவளது முகத்தின் மீது போட்டு சிதைத்தான். இவள் யாரென்றே அடையாளம் தெரியக்கூடாது. முகம் தெரிந்தால் தானே விஷயம் தெரியும் என அவன் செய்த இந்தக் கொடூரச் செயல், அவனது மனதின் ஆழத்தில் இருந்த குரூரத்தை வெளிப்படுத்தியது.

பிறகு, ஒன்றும் நடக்காதது போல் அங்கிருந்து தப்பித்து, தன் வீடு நோக்கிச் சென்றான். அவன் நினைத்தது எல்லாம், 'போலீஸ் என்னைக் கண்டுபிடிக்கவே மாட்டாங்க' என்றுதான்.

அத்தியாயம் 4: உண்மை வெளிச்சத்திற்கு வருதல்

நவம்பர் 1 ஆம் தேதி, நள்ளிரவு 11 மணிக்கு, காயத்ரி மாலாவின் அம்மா, அவரது கணவர் தமிழ்ச்செல்வனுக்குத் தொலைபேசியில் அழைக்கும்போதுதான், கதை வேறு விதமாகத் திரும்பியது.தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

ஒரு காவலர் காணாமல் போனது சாதாரண விஷயமல்ல. போலீஸார், காயத்ரி மாலாவின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்தனர். கடைசியாக அவர் பேசியதும், அவருக்கு வந்த அழைப்புகளும் ஒரே ஒரு எண்ணிலிருந்துதான் அதிகம் வந்திருந்தது.நவம்பர் 4 ஆம் தேதி, சங்ககிரி ஆவாரம்பாளையம் ஏரிக்கரையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட செய்தி, விசாரணையின் போக்கையே மாற்றியது.

உடல் காயத்ரி மாலாவுடையது என உறுதி செய்யப்பட்டதும், போலீஸ் அந்த மர்ம நபரைத் தேடிப் பாய்ந்தது.அந்த செல்போன் அழைப்புகள், ஒரு ஆயுள் தண்டனைக் கைதிக்குப் போயிருப்பதை போலீஸ் கண்டுபிடித்தபோது, அதிர்ச்சியில் உறைந்தது.

அந்த எண்ணின் டவர் சிக்னல் தகவல்களை வைத்து, ஓமலூரில் தலைமறைவாக இருந்த சரவணக்குமாரைக் கைது செய்தனர்.காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், சரவணக்குமார் நடந்த அனைத்தையும் ஒப்புக்கொண்டான். "அவ என்னை மிரட்டினா... வேற வழியில்லை... அதனாலதான் அவளைக் கொன்னேன்" என்று அவன் சொன்னபோது, போலீஸ் அதிர்ச்சியில் வாயடைத்தது.

ஏழு வருடக் கள்ளக்காதலின் உச்சகட்டமாக வந்த மிரட்டல்தான், ஒரு காவலரின் உயிரைப் பறித்தது என்ற உண்மை வெளியே வந்தது. இரண்டாவது கணவர், குழந்தை, வேலை என அனைத்தும் இருந்தும், திருமணத்தைத் தாண்டிய உறவை நாடிச் சென்ற காவலரின் துரதிர்ஷ்டமான முடிவும், அந்த உறவுக்கேற்ற தண்டனையைக் கொடுத்த கைதியின் கசப்பான முடிவும், அன்று சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கறுப்பு அத்தியாயமாக மாறியது.

Summary : A 35-year-old female prison guard, Gayathri Mala, was brutally murdered by her paramour, Saravanakumar, a life-term convict out on parole. Their seven-year clandestine affair ended when she demanded constant intimacy and threatened to report him. Enraged, he crushed her head with a rock near Sankagiri and stole her valuables.