கொன்று எரிக்கப்பட்ட கார் ஓட்டுனர்.. ஓராண்டிற்கு பிறகு திமுக கவுன்சிலர் சிக்கியது எப்படி..? சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..!

கோவை, நவம்பர் 15 : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், பேருந்து நிலையத்தில் வாடகைக்கார் ஓட்டுனராக பணியாற்றிய அலாவுதீன் என்ற இளைஞன், ஒரு ஆண்டுக்கு முன்னர் காணாமல் போன சம்பவம், தற்போது கொலை வழக்காக உருவெடுத்துள்ளது.

அலாவுதீன், திமுக கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் அவரது மகன்கள் சரண்குமார், மணிகண்டன் ஆகியோரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, உடலை எரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

போலீஸார் விசாரணையில் இந்த உண்மைகள் வெளிப்பட்டுள்ளன. அலாவுதீன் (வயது 35), மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள கார் ஸ்டாண்டில் வாடகை ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு, திடீரென காணாமல் போனார். அவரது குடும்பத்தினரின் புகாரின் பேரில், போலீஸார் விசாரணைத் தொடங்கினர். ஆனால், அவர் பணியாற்றி வந்த கார் ஸ்டாண்டில் கூட முறையாக விசாரிக்காமல், மெத்தனமாக விசாரித்துள்ளது காவல் துறை. இதன் வெளிப்பாடாக, வழக்கில் எந்த முன்னேறமும் இல்லை.

அலாவுதீன் எங்கே போனார்..? கடைசியாக அவரை சந்தித்தது யாரு..? அவருடைய செல்போன் கால் ஹிஸ்டரி என்ன..? CCTV காட்சிகள், இப்படி எத்தனையோ வழிகளில் அலாவுதினை தேட முடியும் என்றால் காவல் துறை இதில் அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த மற்றொரு சம்பவம், இந்த கொலை வழக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், அலாவுதீனின் தம்பி ஹாரிஸ் (வயது 30), ஹக்கீம் என்ற இளைஞனை விரட்டி விரட்டி தாக்கி, கொலை செய்ய முயன்றார்.

போலீஸார் ஹாரிஸைப் பிடித்து விசாரிக்கும்போது, அதிர்ச்சி தகவல் வெளியானது. ஹக்கீம், அலாவுதீனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனால் அலாவுதீன் காணாமல் போனதாகவும் கூறினார்.

இதனால், போலீஸார் அலாவுதீனின் மனைவி மற்றும் ஹக்கீம் ஆகியோருக்கு இடையிலான உறவே அலாவுதீன் காணாமல் போனதற்குக் காரணமாக இருக்கலாமோ என ஒரு வருடத்திற்கு பிறகு இந்த வழக்கை தூசு தட்டி ஆழமான விசாரணைத் தொடங்கினர்.

இந்த விசாரணையின் போது, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையை நடத்தி வரும் சரண்குமார் என்பவருடைய மனைவியுடன் இறந்து போன அலாவுதீனுக்கு கள்ளத்தொடர்பு உறவு தெரியவந்தது.

செல்போன் கடையில் தொடங்கிய நட்பு, காலப்போக்கில் கள்ளக்காதலாகவும், பின்னர் உறவாகவும் மாறியது. இந்த விவகாரம் சரண்குமாருக்கு தெரிந்ததும், அவர் தனது தந்தை ரவிக்குமாரிடமும், சகோதரன் மணிகண்டனிடமும் அழுதுகொண்டு புகார் செய்தார்.

சரண்குமாரின் தந்தை ரவிக்குமார் காரமடை நகராட்சியின் மூன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் ஆவார். தனது மகன் சரண்குமாருக்கு ஆதரவாக, அலாவுதீனைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.திமுக இளைஞரணி நிர்வாகியாக இருக்கும்அவரது மூன்றாவது மகன் மணிகண்டனும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டார்.

அலாவுதீனிடம் நைசாகப் பேசி, தனியாக அழைத்துச் சென்று, அடித்துக் கொலை செய்து, உடலை மாதேஸ்வரன் மலை கோவில் பின்புறம் உள்ள புதருக்குள் வீசி, யாருக்கும் தெரியாமல் அங்கேயே எரித்தனர். இந்தக் கொலைக்குப் பின், குற்றவாளிகள் எதுவுமே நடக்காததுபோல் இயல்புவாழ்க்கையைத் தொடர்ந்தனர்.

இப்போது, போலீஸார் அலாவுதீனின் எலும்புகளை சேகரித்து, தடவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். விசாரணையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

"ஆரம்பத்தில் விசாரணை முறையாக நடத்தப்படாததால் இந்த உண்மைகள் மறைக்கப்பட்டன. இப்போது அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன," என்று அவர் கூறினார்.

அலாவுதீனின் குடும்பத்தினர், "ஒரு ஆண்டு கழித்து உண்மை தெரிந்தது அதிர்ச்சி. நீதி கிடைக்க வேண்டும்," எனக் கூறினர். இந்தச் சம்பவம், அரசியல் பிரமுகர்களின் ஈடுபாட்டால் விசாரணை தாமதமாகியதாக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் மேலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மறுபக்கம், தனி மனித ஒழுக்கம் கெட்டு போனது தான் இந்த பெரும் குற்ற சம்பவத்தின் ஆணி வேர் என்பதையும் கடந்து சென்று விட முடியாது. வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக, பிறர் மனைவியை விரும்ப நினைத்த அலாவுதீன் அதன் பின்னால் வரும் பிரச்சனைகள் பற்றி யோசிக்க மறந்து விட்டார். அதே போல கணவன் இருக்கும் போதே அலாவுதீனுக்கு அனுமதி கொடுத்த சரண்குமார் மனைவியும் இதில் குற்றவாளி தான்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல மகனின் மனைவியுடன் தகாத உறவில் இருந்தவனை தனக்கு இருக்கும் ஆள் பலம், அரசியல் பலம் கொண்டு முடித்துகட்டியுள்ளார் ரவிக்குமார். தற்போது, அவருடைய இன்னொரு மகன் மணிகண்டனும் சிறைப்பறவையாக அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Summary in English : In Mettupalayam, Coimbatore, taxi driver Alauddin vanished a year ago but was murdered by DMK councillor Ravikumar and sons over his affair with Sarankumar's wife. They beat him to death and burned his body behind Matheswaran Hill Temple. The case surfaced after Alauddin's brother attacked a suspect in another affair, prompting police to recover bones for analysis.