சென்னை: பிரபல நடிகையும், காஸ்டியூம் டிசைனருமான ஜாய் கிரிஸில்டா, தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தங்களது திருமண உறவை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ரங்கராஜ் தரப்பில் செட்டில்மெண்ட் வழங்க முயற்சிக்கப்பட்டதாகவும், அதை தான் ஏற்க மாட்டேன் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஜாய் கிரிஸில்டா தனது சமீபத்திய பேட்டியில், "இத்தனை கோடி தரேன், வீடு தரேன், பங்களா தரேன்... விட்டுரு அப்படின்ற செட்டில்மென்ட்க்கு வராங்க. நான் அது பண்ண மாட்டேன். இப்பவும் சொல்றேன் செட்டில்மென்ட்க்கு நான் வரவே மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த உறவில் தான் தள்ளப்பட்டது ரங்கராஜால் தான் என்று குற்றம்சாட்டிய அவர், "இது இந்த கமிட்மென்ட்க்குள்ள உள்ள தள்ளுனது யாரு? நானா? மிஸ்டர் ரங்கராஜ்" என்று வெளிப்படுத்தியுள்ளார். ரங்கராஜின் அதீத பொசசிவ்னெஸ் குறித்து பேசிய ஜாய், "ரெண்டு வருஷம் என்ன வேலை பார்க்க விடாம, அவ்வளவு பொசசிஸவ்.
நான் ஒரு மீட்டிங்க்கு போனா கூட அவரு ஆயிரம் கால் பண்ணுவாரு. அங்கேயும் மேனேஜர் அனுப்புவாரு" என்று கூறினார். காஸ்டியூம் டிசைனராக பணியாற்றும் போது கூட, மீட்டிங்குகளுக்கு செல்லும் போது ரங்கராஜின் மேனேஜர் அனுப்பப்படுவதாகவும், இதனால் தனது தொழில் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
"அத்தனை மீட்டிங்ஸ்க்கு நான் போன ஒரு பாயிண்ட்ல எனக்கு நான் என்ன பண்ணிட்டேன்னா வேண்டாம் பரவால்ல அப்புறம் நான் சொல்லிட்டேன் நான் வொர்க்கு போகல அப்படின்ட்டேன்" என்று கூறிய ஜாய், தனது சுயமரியாதை குறித்து கேள்வி எழுப்பினார்.
மேலும், தனது இரண்டாவது திருமணத்தை (மாதம்பட்டி ரங்கராஜுடன்) தக்க வைக்க போராடுவதற்கான காரணத்தை விளக்கிய ஜாய், முதல் திருமணத்தில் அனுபவித்த கொடுமைகளை நினைவுகூர்ந்தார். "என்னுடைய முதல் கணவரிடம் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தேன். என்னை அடித்திருக்கிறார். உன்னுடைய முதல் திருமணத்தினால் நான் சந்தோஷமாக இல்லை. நான் விவாகரத்துக்கு நீதிமன்றத்தில் மனு கொடுத்து விட்டேன். அதன் பிறகு என்னுடைய செலவுக்கு மற்றும் என்னுடைய குழந்தைகளின் வளர்ப்புக்கும் என்னுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கும் என்னுடைய முதல் கணவர் உதவி செய்ய வேண்டும் என்று ஜீவனாம்சம் வழக்கும் தொடர்ந்தேன்" என்று கூறினார்.
ஆனால், ரங்கராஜ் தான் தனது முதல் திருமணத்தை எளிதாக முடித்துக் கொள்ள அவசரப்படுத்தியதாக ஜாய் குற்றம்சாட்டினார். "அந்த நேரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் நீ உன்னுடைய முதல் கணவரின் பணத்தில் தான் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா? நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா..? பரஸ்பரம் விவாகரத்து கொடுத்து விட்டு வந்துவிடு விவாகரத்து பெற்று வந்துவிடு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று என்னை அவசரப்படுத்தி எந்த ஜீவனாம்சமோ அல்லது நஷ்ட ஈடு கோராமல் என்னுடைய முதல் கணவரை பிரிய சொன்னது மாதம்பட்டி ரங்கராஜ்" என்று வெளிப்படுத்தினார்.
மேலும், "நான் அப்போதே அவரிடம் கேட்டேன் நிஜமாகவே இதெல்லாம் சரியாக இருக்குமா ஏனென்றால் கடைசியில் நான் ஒன்றுமே இல்லாமல் நடு ரோட்டில் நிற்பது போல் ஆகிவிடும் என்று பலமுறை மாதம்பட்டி ரங்கராஜிடம் கேட்டேன். அவர் என்னிடம் பொய்யான தகவலை கூறி பொய்யான நம்பிக்கை கொடுத்து என்னுடைய முதல் கணவரிடம் எளிமையாக விவாகரத்து பெற வைத்தார்.
தற்போது அவரும் என்னை விட்டு விட்டு சென்று விட்டார்" என்று ஜாய் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து இதுகுறித்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஜாய் கிரிஸில்டாவின் இந்த வெளிப்பாடு, அவர்களது திருமண உறவில் உள்ள பிரச்சினைகளை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
Summary in English : Actress and costume designer Joy Grisilda has accused her husband Madhampatty Rangaraj of extreme possessiveness, preventing her from attending work meetings by constant calls and sending managers. She claims he pressured her to divorce her abusive first husband without seeking alimony, giving false assurances. Now offering a large settlement for separation, which she refuses, vowing no compromise.


