“முதல் புருஷன் கூட அது நடக்கும் போது.. மாதம்பட்டி ரங்கராஜ் சொன்ன விஷயம்..” அதிர வைத்த ஜாய் கிரிஸில்டா..!
சென்னை: பிரபல நடிகையும், காஸ்டியூம் டிசைனருமான ஜாய் கிரிஸில்டா, தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். தங்களது திருமண உறவை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ரங்கராஜ் தரப்பில் செட்டில்மெண்ட் வழங்க முயற்சிக்கப்பட்டதாகவும், அதை தான் ஏற்க மாட்டேன் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜாய் கிரிஸில்டா தனது சமீபத்திய பேட்டியில், "இத்தனை கோடி தரேன், வீடு தரேன், பங்களா தரேன்... விட்டுரு அப்படின்ற செட்டில்மென்ட்க்கு வராங்க. நான் அது பண்ண மாட்டேன். இப்பவும் சொல்றேன் செட்டில்மென்ட்க்கு நான் வரவே மாட்டேன்" என்று கூறியுள்ளார். மேலும், இந்த உறவில் தான் தள்ளப்பட்டது ரங்கராஜால் தான் என்று குற்றம்சாட்டிய அவர், "இது இந்த கமிட்மென்ட்க்குள்ள உள்ள தள்ளுனது யாரு? நானா? மிஸ்டர் ரங்கராஜ்" என்று வெளிப்படுத்தியுள்ளார். ரங்கராஜின் அதீத பொசசிவ்னெஸ் குறித்து பேசிய ஜாய், "ரெண்டு வருஷம் என்ன வேலை பார்க்க விடாம, அவ்வளவு பொசசிஸவ். நான் ஒரு மீட்டிங்க்கு போனா கூட அவரு ஆயிரம் கால் பண்ணுவாரு. அங்கேயும் மேனேஜர் அனுப்புவாரு" என்று கூறினார். க...