சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்துள்ள நிலையில், பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தவெகவின் வாய்ப்புகள் குறித்து தனது கருத்தை விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
விஜய் முதலமைச்சர் ஆவார், ஆனால் 2026-ல் அல்ல!
ரங்கராஜ் பாண்டே கூறுகையில், "நடிகர் விஜய் நிச்சயம் முதலமைச்சர் ஆவார். ஆனால் அது 2026-ல் கிடையாது. 2026-ல் தவெக தனித்துப் போட்டியிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் கூட ஆக முடியாது.

குறைந்தது 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் டெபாசிட் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு 4-5 தொகுதிகளில் மட்டுமே வாக்குகளைப் பிரிக்கும் அளவுக்கு செயல்பாடு இருக்கும். விஜய் போட்டியிடும் தொகுதியில் மட்டும் வெற்றி வாய்ப்பு உள்ளது" என்றார்.
பிரசாந்த் கிஷோருடன் ஒப்பீடு: தோல்வி ஒன்றல்ல!
பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் கட்சி படுதோல்வி அடைந்ததை ஒப்பிட முடியாது எனக் கூறிய பாண்டே, "பிரசாந்த் கிஷோருக்கு பீகாரில் அந்த அளவுக்கு வரவேற்போ அறிமுகமோ இல்லை.
ஆனால் விஜய்க்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம், உச்ச நட்சத்திர அந்தஸ்து உள்ளது. அதனால் பிரசாந்த் கிஷோர் போன்ற மோசமான தோல்வி விஜய்க்கு வராது.
ஆனால் விஜய் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றியும் கிடைக்காது" என்றார்.தவெக வேட்பாளர்கள் கடைசி 1,000-2,000 வாக்குகளைப் பிரித்து, மற்ற கட்சிகளின் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் பங்கு வகிப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உட்கட்டமைப்பு இல்லாததே பிரதான பலவீனம்
தேர்தலில் வெற்றி என்பது வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு, வாக்குறுதிகள் மட்டுமல்ல; மாவட்டம் தோறும் முன்னாள் கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் போன்ற உள்ளூர் தலைவர்களைச் சுற்றியுள்ள வாக்கு வங்கிதான் என விளக்கினார் பாண்டே.
"திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளிடமும் இந்த உட்கட்டமைப்பு வலுவாக உள்ளது. யாராலும் பிரிக்க முடியாத வாக்கு வங்கி இது. ஆனால் தவெகவிடம் கவுன்சிலர்கள் உள்ளனரா? பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளனரா? வார்டு மெம்பர்கள் உள்ளனரா? ஒன்றும் இல்லை. விஜயின் ஒற்றை முகம் மட்டுமே இழுத்துச் செல்கிறது. ரசிகர் வரவேற்பு வாக்காக மாறுமா? சாத்தியமே இல்லை" என்று உறுதிபடக் கூறினார்.
தவெக இன்னும் நிர்வாகிகளை மாவட்டம் தோறும் நியமித்து வருவதாகக் கூறிக்கொண்டாலும், உண்மையான உள்ளூர் உட்கட்டமைப்பு இல்லை என்பதே தவெகவின் மிகப்பெரிய பலவீனம் என்றார் ரங்கராஜ் பாண்டே.
விஜயின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும், இளைஞர்கள் மத்தியில் உள்ள வரவேற்பும் தவெகவுக்கு சாதகமாக அமையும் எனினும், தனித்துப் போட்டியிட்டால் 2026-ல் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை என்றே ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
கூட்டணி அமைத்தால் மட்டுமே பெரிய வெற்றி சாத்தியம் என்பது அவரது மறைமுகக் கருத்தாக உள்ளது.தவெகவின் அரசியல் பயணம் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ரங்கராஜ் பாண்டேயின் இந்தக் கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக திமுக இரண்டு கட்சிகளுக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வலுவான தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தங்களுடைய கரங்களில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாக்குகள் முதல் இரண்டு லட்சம் வாக்குகள் வரை இறுக்கி பிடித்து வைத்திருக்கிறார்கள் திமுகவில் ஒரு தலைவர் பெயரை சொன்னால் இவர் இந்த தொகுதிகளை வெற்றி பெற்று கொடுத்து விடுவார்.
அதிமுகவில் ஒரு தலைவர் பெயரை சொன்னால் இவர் இந்த தொகுதி எல்லாம் வெற்றி பெற்று கொடுத்து விடுவார் என்று நம்மால் அடையாளம் காட்ட முடியும் ஆனால் தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகிகள் யார்..? திரு.CTR நிர்மல் குமார், திரு.ராஜ்மோகன், திரு.ஆதவ் அர்ஜுனா, திரு.ஜான் ஆரோக்கியசாமி, திரு.புஸ்ஸி ஆனந்த் இவர்கள் எல்லாம் எந்த தொகுதியை தமிழக வெற்றி கழகத்திற்காக வெற்றி பெற்று கொடுப்பார்கள்.
இதையெல்லாம் தாண்டி நான் சொன்ன கவுன்சிலர் பஞ்சாயத்து தலைவர் வார்டு மெம்பர் இப்படி அடிமட்ட அளவில் திமுக அதிமுகவிற்கு இருக்கக்கூடிய அந்த பலம் நடிகர் விஜய்க்கு கிடையாது இப்போதும் நான் நடிகர் விஜய் முதலமைச்சர் ஆவார் என்று கூறுகிறேன் ஆனால் 2026 இல் வாய்ப்பே கிடையாது என்று அணித்தரமாக கூறியிருக்கிறார் பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே.
ஒருவேளை ரங்கராஜ் பாண்டே கூற்று உண்மையானால், 2031 தேர்தலில் TVK என்ற கட்சியே இருக்காது என்பதும் உண்மை. இதற்கு, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமே சாட்சி.
Summary : Journalist Rangaraj Pandey predicts that if Vijay's TVK contests alone in 2026 Tamil Nadu elections, it will lose deposits in over 200 seats, win only Vijay's own constituency, and act mainly as a vote-splitter. Lack of grassroots infrastructure will prevent major victory despite huge fan base.

