Posts

Showing posts with the label grassroots infrastructure

TVK 200 தொகுதிகளில் DEPOSIT இழக்கும்.. 2031 தேர்தலுக்குள் TVK என்ற கட்சியே இருக்காது.. காரணம் இது தான்..!

Image
சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்துள்ள நிலையில், பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தவெகவின் வாய்ப்புகள் குறித்து தனது கருத்தை விரிவாகப் பகிர்ந்துள்ளார். விஜய் முதலமைச்சர் ஆவார், ஆனால் 2026-ல் அல்ல! ரங்கராஜ் பாண்டே கூறுகையில், "நடிகர் விஜய் நிச்சயம் முதலமைச்சர் ஆவார். ஆனால் அது 2026-ல் கிடையாது. 2026-ல் தவெக தனித்துப் போட்டியிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் கூட ஆக முடியாது. குறைந்தது 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் டெபாசிட் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு 4-5 தொகுதிகளில் மட்டுமே வாக்குகளைப் பிரிக்கும் அளவுக்கு செயல்பாடு இருக்கும். விஜய் போட்டியிடும் தொகுதியில் மட்டும் வெற்றி வாய்ப்பு உள்ளது" என்றார். பிரசாந்த் கிஷோருடன் ஒப்பீடு: தோல்வி ஒன்றல்ல! பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் கட்சி படுதோல்வி அடைந்ததை ஒப்பிட முடியாது எனக் கூறிய பாண்டே, "பிரசாந்த் கிஷோருக்கு பீகாரில் அந்த அளவுக்கு வரவேற்போ அறிமுகமோ இல்லை. ஆனால் விஜய்க்கு தமிழ்நாட்டி...