கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் பாலாஜி, தமிழ்நாடு போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (26). வேலைக்கு சரியாக செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால், அவரது பெற்றோர் அவரை கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற பாலாஜி, அருகிலுள்ள கடையில் வேலைக்கு சேர்ந்து, உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

அதே பகுதியில் உறவினர் வீட்டுக்கு அருகே வசிக்கும் 13 வயது சிறுமியுடன் பாலாஜி பேசி பழகியுள்ளார். சிறுமியும் அவருடன் பழகி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்த பாலாஜி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, "அண்ணா, நீங்க செய்யறது பிடிக்கலை, நான் போறேன்" என்று கூறி அழுதுகொண்டே தனது வீட்டுக்கு சென்றார். பின்னர், பாலாஜியின் செயலை தனது பெற்றோரிடம் தெரிவித்த சிறுமி, பெற்றோரால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் கைது செய்ய வருவதை அறிந்த பாலாஜி, கேரளாவில் இருந்து தப்பி தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்து தலைமறைவாக இருந்தார். அவரது செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தார். இந்நிலையில், தனிப்படை அமைத்து தேடிய கேரள போலீசார், தமிழ்நாடு போலீசாரின் உதவியுடன் சில தினங்களுக்கு முன் தஞ்சாவூரில் பதுங்கியிருந்த பாலாஜியை கைது செய்து கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், பாலாஜி மீது ஏற்கனவே தஞ்சாவூர் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
13 வயது சிறுமிக்கு வீட்டில் தனிமையான நேரத்தில் பாலியல் வன்கொடுமை முயன்ற சம்பவம், கோழிக்கோடு பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Summary in English : A 26-year-old man from Thanjavur, Balaji, allegedly behave wrong with a 13-year-old girl in Kozhikode, Kerala, where he was staying with relatives. The minor informed her parents, leading to a police complaint. Balaji fled to Thanjavur but was arrested with Tamil Nadu police assistance. He has prior criminal cases pending.

