2010-ஆம் ஆண்டு சர்ச்சைக்குள்ளான வீடியோ காட்சிகள் வெளியானது முதல், நடிகை ரஞ்சிதாவின் பெயர் சுவாமி நித்யானந்தாவுடன் இணைத்துப் பேசப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
போதை ஏறிப்போச்சு.. புத்தி மாறிப்போச்சு.. என மேலாடையை கழட்டி இளசுகளின் புத்தியை கிறங்கடித்துவிட்டு, "கண்ணா... என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சு... எதுக்கு?" என்ற கேள்வியுடன் தொடங்கிய அந்தகாலத்து சர்ச்சை ராணி ரஞ்சிதா.

அந்த காலம் முதல், இன்று வரை சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் ரஞ்சிதாவின் பெயர் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, நித்யானந்தாவை தனது குருவாகவே பூஜித்து வரும் ரஞ்சிதா, ஒரு குடும்பத்தலைவியாகவும் வாழ்க்கையை எதிர்கொண்டவர்.
இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை, கடந்த 2021-ஆம் ஆண்டு குமுதம் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் விரிவாகப் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டி தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
கணவரின் 'பேலன்ஸ்டு' குணம் ரஞ்சிதாவுக்கு உத்வேகம்
பேட்டியில் ரஞ்சிதா, தனது கணவரைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். "எனக்கு அப்படியே மாறுபட்டவர் என் கணவர். அதிகம் பேச மாட்டார். ரொம்ப பேலன்ஸ்ட்டா இருப்பார்.
நான் வாழ்க்கையில் பார்த்த ஒரே பேலன்ஸ்ட் மனிதர் அவர் தான்" என்று கூறிய ரஞ்சிதா, கணவர் எந்த சூழலிலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பதைப் புகழ்ந்தார்.
- ஆபீஸில் டென்ஷன் வந்தாலும், வீட்டில் அதை வெளிக்காட்ட மாட்டார்.
- தன்னைத் திட்டினாலும், வெளியில் பிரச்சனை வந்தாலும் கூல் ஆக இருப்பார்.
- 16 வருட திருமண வாழ்க்கையில் ஒருமுறைகூட கோபப்பட்டு பார்த்ததில்லை என்று கூறினார்.
- "மனரீதியாக அவர் மிக வலிமையானவர். அவரைப் பார்த்து நான் நிறைய இன்ஸ்பயர் ஆகியிருக்கேன்" என்று ரஞ்சிதா தெரிவித்தார்.
ரஞ்சிதா உணர்ச்சிவசப்பட்டு கோபப்படும்போது, கணவர் "அவங்களால உனக்கு ஏதாவது நடக்கப் போகுதா? விடு... கூலா எடுத்துக்கோ" என்று சமாதானப்படுத்துவாராம். இதிலிருந்து ரஞ்சிதா நிறைய கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
சின்ன விஷயங்களில் டென்ஷன்... ஆனால் புத்தக வாசிப்பு மாற்றிவிடும்!
தானே சின்னச் சின்ன விஷயங்களில் டென்ஷன் ஆகிவிடுவேன் என்று ஒப்புக்கொண்ட ரஞ்சிதா, "அதிகபட்சம் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தான் கோபம் நீடிக்கும். அதற்குப்பிறகு புத்தகம் படித்து மறந்துவிடுவேன்" என்றார்.
புத்தக வாசிப்பு தனது மனநிலையை முழுவதுமாக மாற்றிவிடும் என்று கூறிய அவர், "வீட்டில் சண்டை போட்டிருந்தால் கூட, இரண்டு நாள் கழித்து கேட்டால் எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது" என்று சிரித்துக்கொண்டே பகிர்ந்தார்.இறுதியாக, "உங்களுக்கு எது பிடிக்குதோ அதை செய்யுங்கள்... அது உங்களை மாற்றும்" என்ற அறிவுரையுடன் பேட்டியை முடித்தார் ரஞ்சிதா.
ஏன் இப்போது இந்தப் பேட்டி வைரல்?
இந்தப் பேட்டி 2021-இல் வீடியோ வடிவில் வெளியானது. ஆனால், தற்போது (டிசம்பர் 2025) மீண்டும் வைரலாகப் பகிரப்படுவதற்குக் காரணம், சுவாமி நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து பரவும் தகவல்களே.
நித்யானந்தா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், ரஞ்சிதாவின் இந்தப் பேட்டி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஞ்சிதா நித்யானந்தாவை தனது குருவாகவே பூஜித்து வருவதும், சர்ச்சைகளுக்கு மத்தியில் அமைதியாக வாழ்வதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
சர்ச்சைகள் எத்தனை வந்தாலும், குடும்ப வாழ்க்கையையும் ஆன்மீகத்தையும் சமநிலையில் கொண்டு செல்லும் ரஞ்சிதாவின் அணுகுமுறை, பலருக்கும் உத்வேகமாக அமைகிறது. இந்தப் பேட்டி அதைத்தான் மீண்டும் நிரூபிக்கிறது!
Summary in English : Actress Ranjitha, linked to controversies with Swami Nithyananda, shared in a 2021 viral interview how her calm, balanced husband inspires her to handle stress. She credits his emotional strength and her love for reading books as ways to overcome tensions quickly and maintain peace.

