Posts

Showing posts with the label emotional balance

16 வருட திருமண வாழ்க்கையில் ஒரு முறை கூட அது நடக்கல.. கணவர் குறித்த ரகசியத்தை உடைத்த ரஞ்சிதா..!

Image
2010-ஆம் ஆண்டு சர்ச்சைக்குள்ளான வீடியோ காட்சிகள் வெளியானது முதல், நடிகை ரஞ்சிதாவின் பெயர் சுவாமி நித்யானந்தாவுடன் இணைத்துப் பேசப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. போதை ஏறிப்போச்சு.. புத்தி மாறிப்போச்சு.. என மேலாடையை கழட்டி இளசுகளின் புத்தியை கிறங்கடித்துவிட்டு, "கண்ணா... என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சு... எதுக்கு?" என்ற கேள்வியுடன் தொடங்கிய அந்தகாலத்து சர்ச்சை ராணி ரஞ்சிதா.  அந்த காலம் முதல், இன்று வரை சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் ரஞ்சிதாவின் பெயர் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, நித்யானந்தாவை தனது குருவாகவே பூஜித்து வரும் ரஞ்சிதா, ஒரு குடும்பத்தலைவியாகவும் வாழ்க்கையை எதிர்கொண்டவர். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை, கடந்த 2021-ஆம் ஆண்டு குமுதம் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் விரிவாகப் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டி தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. கணவரின் 'பேலன்ஸ்டு' குணம் ரஞ்சிதாவுக்கு உத்வேகம் பேட்டியில் ரஞ்சிதா, தனது கணவரைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். ...