ஜலந்தர், பஞ்சாப் : கடந்த 2021-ம் ஆண்டு அரங்கேறிய ஒரு கொடூர சம்பவம். அதற்கு பின்னால் இருந்த வினோத காரணம் குறித்தும் இந்த கிரைம் பதிவில் பார்ப்போம்.
2021, நவம்பர் மாத குளிர் காலை. அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் அருண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழக்கம் போல பள்ளிக்கு சென்றான். ஆனால் அன்றைய தினம் அவனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப் போகிறது என்று அவனுக்கும் தெரியாது, அவன் பெற்றோருக்கும் தெரியாது.
பள்ளியில் அவனை அழைத்த ஆசிரியை (33 வயது) அமன்பிரீத் கவுர், (பள்ளி ஆசிரியை மட்டுமில்லாமல், அருணின் ட்யூசன் டீச்சரும் இவர் தான்) “இன்று எங்க வீட்டுல ஒரு முக்கியமான வேலை இருக்கு டா, நீதான் உதவி செய்யணும்” என்று சிரித்த முகத்துடன் கூறினார். சிறுவனும் “சரி மேடம்” அப்பா, அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன் என்று தலையாட்டினான்.

மாலை 4 மணி, பள்ளி முடிந்து மாணவ மாணவிகள் வீடுகளை நோக்கி சிட்டாக பறந்து கொண்டிருந்தனர். ஆனால், மாணவன் அருண்-ஐ அழைத்து கொண்டு அவனது வீட்டுக்கு சென்ற ஆசிரியை, அருண் நல்லா படிக்கிற பையன், அடுத்த வாரம் எக்ஸாம், இன்னும் சிலபஸ் முடிக்காம இருக்கான். இப்படியே விட்டா கண்டிப்பா மார்க் குறைஞ்சிடும்... அருண் ஒரு வாரம் எங்க வீட்டுல இருந்து படிக்கட்டும்.. கண்டிப்பா கிளாஸ் டாப்பரா வருவான்.. என்று பெற்றோர்களிடம் கூறினார் டீச்சர்.
பெற்றோரும், நமக்கு நன்கு அறிமுகமான டீச்சர், நல்ல பொண்ணு என்ற நம்பிக்கையில் அவர் சொன்னதை ஒரு வாரம் அவருடைய வீட்டில் தங்கி படிக்க சம்மதம் தெரிவித்தனர்.
மாணவன் அருண்-ஐ அழைத்து கொண்டு தன்னுடைய வீட்டுக்கு சென்றார் டீச்சர். அங்கே நிறைய உறவினர்கள் இருந்தனர். எல்லோரும் அருணை விருந்தாளி போல வாங்க வாங்க என்று வரவேற்றனர்.
அருணிற்கு என்ன நடக்கிறது..? என்றே புரியவில்லை. டீச்சரின் தாய், புத்தாடை கொண்டு வந்து கொடுத்து இதை போட்டுக்கிட்டு வாங்க என்றார். குழப்பத்தில் இருந்த அருண், டீச்சரை பார்க்க, போய் போட்டுக்கிட்டு வா.. என்று டீச்சர் கூறினார்.

புத்தாடை அணிந்து வந்த அருண் அமர வைக்கப்பட்டான். திடீரென எல்லோரும் வந்து மஞ்சள் பூசினார்கள். நலங்கு விழா நடைபெற்றது. பின்னர் மெஹந்தி. அடுத்தடுத்து ஆடை, நகை, பூக்கள்… சிறுவன் பயந்து நடுங்கினான். “மேடம், என்ன இது? எதுக்கு இப்படி பண்றாங்க” என்று கேட்டதற்கு, “பயப்படாத, இது ஒரு சின்ன பூஜை மட்டும்தான்.. பூஜை முடிஞ்சதும் நீ வீட்டுக்கு போயிடலாம்.." என்று ஆசிரியையும் அவரது குடும்பத்தினரும் சமாதானம் செய்தனர்.
இரவு 10 மணி. முழு திருமண சடங்குகளுடன் “திருமணம்” வரை நடத்தப்பட்டது. சிறுவன் ஒரு கட்டத்தில் அழுது அடம்பிடித்தும், “இது எல்லாம் பூஜைக்காக மட்டுமே.. ஒன்னும் இல்ல.. பயப்படாத.. என்று மிரட்டி திருமண சடங்குகளை முடித்தனர்.
அதன் பிறகு தான் அரங்கேறியது கொடூரம் : மாணவனை படுக்கறைக்குள் அழைத்து சென்ற டீச்சர். மாணவனுடன் முதலிரவை கொண்டாடினார். மாணவன் அழுது, கதறியும் விடவில்லை. ஒரு கட்டத்தில், வலி தாங்க முடியாமல், வலிக்குது டீச்சர் விட்டுடுங்க என்று அழுது கதறியுள்ளான் சிறுவன். ஆனால், டீச்சர் விடாமல் தன்னுடைய முதலிரவை கொண்டாடியுள்ளார். இறுதியில், மாணவனின் தனியுறுப்பின் முன் தோல் கிழிந்து படுக்கை முழுதும் ரத்தம் சிந்தியுள்ளது. அப்போதும் கூட, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும், இது இயல்பு என கூறி மாணவனை சீரழித்துள்ளார் டீச்சர்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுவன் ஒரு வாரம் டீச்சரின் வீட்டிலேயே வீட்டுச்சிறை வைக்கப்பட்டுள்ளான். அதன் பிறகு, நடந்ததை வெளியே யாரிடமும் சொல்லாதே, மறந்து விடு.. என்று சொல்லி மாணவனை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது டீச்சரின் குடும்பம்.
ஒரு வாரம் கழித்து… சிறுவன் வீட்டுக்கு திரும்பினான். அம்மாவிடம் தயங்கித் தயங்கி நடந்த அத்தனை கொடுமைகளையும் சொன்னான். அம்மா அதிர்ந்து போனார்.அடுத்த நிமிடமே போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.

போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்: ஆசிரியை அமன்பிரீத் கவுருக்கு “மாங்கல்ய தோஷம்” இருப்பதாக ஜோதிடர் சொன்னாராம். “30 வயதைக் கடந்தும் திருமணம் ஆகவில்லை, இந்த தோஷத்தால்தான்” என்று குடும்பமே பயந்து போயிருக்கிறது.
ஜோதிடர் கொடுத்த “தீர்வு”: ஒரு சிறுவனுடன் சடங்கு ரீதியான திருமணம் செய்து, பின்னர் அந்த சிறுவனை “இறந்தவன்” ஆக்கி, ஆசிரியையை “விதவை” ஆக்க வேண்டும். அதன்பிறகே உண்மையான திருமணம் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
அதன்படி… திருமண சடங்குகள் முடிந்த ஒரு வாரத்தில், ஆசிரியையை “கைம்பெண்” ஆக்கும் நாடகமும் நடத்தப்பட்டது. சிறுவனின் பெயரில் “மரண அறிவிப்பு” போட்டு, ஆசிரியையின் கைகளில் இருந்த சிம்மந்த காப்பு, வளையல்கள் உடைக்கப்பட்டன, தாலி அறுக்கப்பட்டது.
மாணவன் இறந்து விட்டதாக அறிவித்து, “துக்க சபை” கூட நடத்தப்பட்டது!
போலீஸ் நடவடிக்கை: ஆசிரியை அமன்பிரீத் கவுர், அவரது பெற்றோர், சகோதரர் உட்பட 6 பேர் கைது. POCSO சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனையும், கவுன்சலிங்கும் அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று வரை அந்த ஊரே இந்த சம்பவத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. “ஜோதிட நம்பிக்கை இப்படி ஒரு குழந்தையின் வாழ்க்கையை அழிக்குமா?” என்ற கோபமும், அதிர்ச்சியும் மக்களிடையே பரவியிருக்கிறது. இது வெறும் செய்தி இல்லை… ஒரு சிறுவனின் குழந்தைப் பருவத்தை திருடிய கொடூர நம்பிக்கையின் கதை!
Summary : A 33-year-old teacher in Jalandhar, Punjab, forcibly married her 13-year-old student to remove her Manglik Dosha as advised by an astrologer. Full wedding rituals including haldi, mehndi and suhagrat were performed. Later she was declared a widow. Police arrested her and five family members under POCSO Act.

