மதுரை நகரின் அமைதியான புறநகர்ப் பகுதியில், பெத்தானியாபுரத்தில் வசித்து வந்தார் சங்கீதா. 45 வயதான அவர், அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கணவரைப் பிரிந்து, கல்லூரியில் படிக்கும் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த அவரது வாழ்க்கை வெளியில் பார்க்க அமைதியாகத் தோன்றினாலும், உள்ளே ஒரு இருண்ட உலகம் ஒளிந்திருந்தது.

2010-ஆம் ஆண்டு, ஒரு ரயில் பயணத்தில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வீரமணியைச் சந்தித்தார் சங்கீதா. 39 வயதான வீரமணி, கட்டட சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். அந்தச் சந்திப்பு விரைவில் நெருக்கமாக மாறியது. அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த இருவரும், கொரோனா ஊரடங்குக் காலத்தில் இணையத்தில் ஆபாச வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினர்.

அந்த வீடியோக்களில் காணப்படும் காட்சிகள் அவர்களை வேறு மட்டத்துக்கு இழுத்துச் சென்றன. சங்கீதா வீட்டில் டியூஷன் எடுத்து வந்தார். அவரிடம் படிக்க வந்த பள்ளி மாணவர்கள் – 10-ஆம் வகுப்பு, +2 படிக்கும் சிறுவர்கள் – அவரது இலக்காக மாறினர்.
ஆரம்பத்தில், ஆசையைத் தூண்டும் விதமான பேச்சுகளும், செயல்களும். பிறகு, வீரமணியுடன் சேர்ந்து அந்தச் சிறுவர்களை தவறான உறவுக்கு இழுத்தார். அந்தக் கொடூரச் செயல்களை வீரமணி மொபைலில் வீடியோ எடுத்து வைத்திருந்தார். மாணவர்கள் பயந்து டியூஷனுக்கு வருவதை நிறுத்தினர். ஆனால் சங்கீதா அவ்வளவு எளிதாக விடவில்லை. வீடியோக்களைக் காட்டி மிரட்டி, மீண்டும் மீண்டும் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.

விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சிகரமான தகவல்: சங்கீதா தனது சொந்த மகனையும் இதே மிரட்டலால் பலிகடாவாக்கியிருந்தார். ஒரு நாள், குடிபோதையில் வீரமணி தனது நண்பர் குமாரிடம் அந்த வீடியோக்களில் ஒன்றைக் காட்டினார்.
அதில் தனது பள்ளி மாணவர்களைப் பார்த்து அதிர்ந்துபோன குமார், உடனடியாக அந்தச் சிறுவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தார். உண்மை தெரியவந்தது. பயந்து போன மாணவர்கள் வீரமணியிடம் கேட்டபோது, "வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன்" என மிரட்டினார்.

இறுதியில், அச்சமடைந்த மாணவர்கள் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வீரமணியை முதலில் கைது செய்து விசாரித்தனர். அவரது மொபைலில் வீடியோக்கள் நீக்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்ப உதவியுடன் மீட்டெடுக்கப்பட்டன.
அதில் சங்கீதாவின் இருண்ட முகமும் தெரியவந்தது. மதுரை தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சங்கீதாவும் வீரமணியும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்கள், லேப்டாப்களில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் 2022-ஆம் ஆண்டு மதுரை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு ஆசிரியை என்ற நம்பிக்கையின் கோட்டையில் ஒளிந்திருந்த கொடூரம், குழந்தைகளின் வாழ்க்கையை என்றென்றும் பாதித்தது. நீதி விரைவாக நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
இது போன்ற கொடூர மனம் கொண்ட மிருகங்கள், உங்களை சுற்றியும் இருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாணவர்களின் பெற்றோர்கள் இது போன்ற சிறப்பு வகுப்புகள், ட்யூசன் போன்ற இடங்களுக்கு அவ்வப்போது, மாதத்தில் ஒரு முறையாவது சென்று என்ன நடக்கிறது..? என்ன செய்கிறார்கள்..? என்று தங்களுடைய கவனத்தை அதிகமாக செலுத்த வேண்டும்.
(குறிப்பு: இக்கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையைக் காக்க பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)
Summary in English : In 2022, a 45-year-old school teacher named Sangeetha in Madurai, along with her lover Veeramani, abused students who attended her tuition classes. They recorded videos to blackmail the victims and continued the abuse. Police arrested both under POCSO Act after recovering deleted videos.

